search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "petitioner"

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 360 மனுக்கள் பெறப்பட்டது.
    • மேற்கொள்ளப்பட்டு வரும் விபரத்தை மனுதாரருக்கு தெரிவிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையேற்று பேசியதாவது:-

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 360 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத் தொடர்ந்து அவர், முதலமைச்சர் பொது நிவாரண நிதியுதவியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை மேலவெளி கிராமம் பரிசுத்தம் நகரினை சேர்ந்த இளங்கோவன் என்பவர் மின்சாரம் தாக்கி இறந்ததால் அவரது மனைவி லலிதாவிடம் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை கலெக்டர் தவவளவன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குளோரி குணசீலி, மாவட்ட திட்ட அலுவலர் விஜய் ஆனந்த் (முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்) மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை முதல் ஜமாபந்தி தொடங்கி நடை பெற உள்ளது.
    • பொது மக்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய் தீர்வாய அலுவலரிடம் வழங்க அனுமதிக்கப்படுவார்கள்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களிலும் 1432-ம் பசலிக்கான ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் நாளை (புதன்கிழமை) தொடங்கி வருகிற 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது. வருவாய் தீர்வாயம் நடத்த அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற உள்ள வருவாய் தீர்வாயம் பற்றிய விவரம் வருமாறு:-

    தரங்கம்பாடி தாலுகாவில் வருவாய் தீர்வாய அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் நாளை முதல் 16-ந் தேதி வரை அங்கு ஜமாபந்தி நடத்துகிறார்.

    குத்தாலம் தாலுகாவிற்கு வருவாய் தீர்வாய அலுவலராக, மாவட்ட வழங்கல் அலுவலர் நாளை முதல் 15-ந் தேதி வரையும், மயிலாடுதுறை தாலுகாவிற்கு வருவாய் தீர்வாய அலுவலராக மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் நாளை முதல் 15-ந் தேதி வரையும், சீர்காழி தாலுகாவிற்கு வருவாய் தீர்வாய அலுவலராக சீர்காழி வருவாய் கோட்ட அலுவலர் நாளை முதல் 22-ந் தேதி வரையும் ஜமாபந்தி நடத்த உள்ளனர்.

    வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்த்து சமூக இடைவெளி விட்டு வரிசையில் சென்று தங்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய் தீர்வாய அலுவலரிடம் வழங்க அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை தொகுதி பாராளுமன்ற தேர்தலை மாற்று தேதியில் நடத்த கோரி மாவட்ட இந்து முன்னணி தலைவரும் மத்திய அரசு வழக்கறிஞருமான சங்கர் கலெக்டர் கந்தசாமியிடம் மனு கொடுத்துள்ளார். #ParliamentElection #TiruvannamalaiGirivalam
    திருவண்ணாமலை:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடக்கிறது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான தேர்தல், அடுத்த மாதம் 18-ந் தேதி ஒரே கட்டமாக நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அன்றைய தினம் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும் நிலையில் வாக்குப்பதிவு பாதிக்கும் என பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். இது தொடர்பாக கோர்ட்டிலும் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தென்னிந்தியாவின் புகழ்மிக்க சிவாலயமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலம், பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ந் தேதி அமைந்திருக்கிறது.

    இதனால் திருவண்ணாமலை தொகுதியிலும் தேர்தலை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து மாவட்ட இந்து முன்னணி தலைவரும் மத்திய அரசு வழக்கறிஞருமான சங்கர் கலெக்டர் கந்தசாமியிடம் திருவண்ணாமலை தொகுதி பாராளுமன்ற தேர்தலை மாற்று தேதியில் நடத்த கோரி மனு கொடுத்துள்ளார்.



    ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடைபெறும் அன்று இரவு சித்ரா பவுர்ணமி வருவதால் அன்று திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இதனால் பொதுமக்கள் வாக்களிப்பதில் தவறும் நிலை உருவாகும்.

    மேலும் ஓட்டுபெட்டியை வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்வதிலும் மிகுந்த சிரமம் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் திருவண்ணாமலை தொகுதி தேர்தலை மாற்று தேதியில் நடத்த ஆவன செய்ய வேண்டும்.

    இந்து மக்களின் தருமத்திற்கும், எண்ணங்களுக்கும் மரியாதை கொடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் மாற்று தேதியை ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

    சித்ரா பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம், ஏப்ரல் 18-ந் தேதி இரவு 7.05 மணிக்கு தொடங்கி, 19-ந்தேதி மாலை 5.35 மணிக்கு நிறைவடைகிறது. அதன்படி, 18-ந் தேதி இரவு, சுமார் 20 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வார்கள்.

    வாக்குப்பதிவு நடைபெறும் 18-ந் தேதி இரவு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அமைந்திருப்பதால், அன்றைய தினம் திருவண்ணாமலை தொகுதியில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வெகுவாக பாதிக்கும் என தெரிகிறது.

    கார்த்திகை தீபத்திரு விழாவுக்கு இணையாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சித்ரா பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள்.

    சென்னை, வேலூர், சேலம், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்பட தொலைதூர நகரங்களில் இருந்து திருவண்ணாமலை வரும் பக்தர்கள், தங்களுடைய வாக்குகளை செலுத்திவிட்டு வருவதில் சிக்கல் தாமதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

    மேலும், திருவண்ணாமலை தொகுதியிலும் சித்ரா பவுர்ணமியன்று வாக்குப்பதிவு வெகுவாக பாதிக்கலாம். அதோடு, தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், 20 லட்சம் பக்தர்கள் வருகை தரும் சித்ரா பவுர்ணமி விழாவுக்கான பாதுகாப்பில் கவனம் செலுத்துவதிலும் சிக்கல் ஏற்படும்.

    அதேபோல், திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்கள், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆகியவற்றில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    எனவே, இரண்டு தொகுதிகளில் உள்ள 3,475 வாக்குச்சாவடி மையங்களில் இருந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வாகனங்களில் கொண்டு வந்து, திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவல நெரிசலை கடந்து வாக்கு எண்ணும் மையங்களில் சேர்ப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

    எனவே, திருவண்ணாமலை தொகுதியில் தேர்தல் நடத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து, தேர்தல் ஆணையம் தனி கவனம் செலுத்த வேண்டும்.

    தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து சட்டரீதியான பரிசீலனை செய்து முன் கூட்டியே இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவண்ணாமலை பக்தர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். #ParliamentElection #TiruvannamalaiGirivalam
    பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த கால அவகாசம் கேட்டு கலெக்டர் சாந்தாவிடம் பெரம்பலூர் மாவட்ட வணிகர் நலச்சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
    பெரம்பலூர்:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 15-ந்தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் மாவட்டம் முழுவதும் படிப்படியாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்நிலையில் பெரம்பலூர் நகரில் உள்ள டீக்கடை, பெட்டி கடை, மளிகை கடை, ஓட்டல்கள், ஜவுளி கடை உள்ளிட்ட கடைகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை படிப்படியாக குறைப்பதற்கு, அவற்றின் உரிமையாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் பெரம்பலூர் நகராட்சி ஆணையர் வினோத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆணையர் வினோத் வருகிற 23-ந்தேதி முதல் பெரம்பலூர் நகரில் உள்ள கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாகவும், மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால், அவற்றை பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றார்.

    பிளாஸ்டிக் பொருட்கள் நிறைய கையிருப்பில் உள்ளதால் வருகிற 23-ந்தேதிக்குள், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த முடியாது என்று உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த இன்னும் கால அவகாசம் கேட்டனர். இதற்கு நகராட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இது தொடர்பாக அனைத்து வியாபாரிகளின் கூட்டமைப்பு ஆன பெரம்பலூர் மாவட்ட வணிகர் நலச்சங்கத்தின் தலைவர் நடராஜன் தலைமையில் பொதுச்செயலாளர் நல்லதம்பி, பொருளாளர் ரவிச்சந்திரன், ஓட்டல் உரிமையாளர்கள் கணேசன், பாலாஜி, செல்லப்பிள்ளை உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மதியம் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் சாந்தாவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்துள்ள தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவுக்கு கட்டுப்படுகிறோம். ஆனால் இப்போது கையிருப்பில் பிளாஸ்டிக் பொருட்கள் நிறைய உள்ளது. அதனை விற்ற பிறகு, பிளாஸ்டிக் பொருட்களை கொள்முதல் செய்ய மாட்டோம். எனவே இந்த கையிருப்பு தீபாவளி வரை இருக்கும் என்பதால் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கால அவகாசம் வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது. மனுவை வாங்கி கொண்ட கலெக்டர் சாந்தா விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் தெரிவித்தார். 
    வெளிநாட்டில் கூலித்தொழிலாளி மர்மசாவு: உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு
    பெரம்பலூர்:

    வெளிநாட்டில் வேலை பார்த்த கூலித்தொழிலாளி மர்மமான முறையில் இறந்துள்ளார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளியின் மனைவி, குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் வள்ளலார் தெருவை சேர்ந்த தம்புசாமியின் மனைவி இளவரசி, தனது 3 குழந்தைகளுடன் கூட்டத்திற்கு வந்து கலெக்டர் சாந்தாவை சந்தித்து ஒரு மனு வழங்கினார். அதில், எனது கணவர் தம்புசாமி (வயது 37) கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக துபாய் நாட்டில் கூலி வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2-ந்தேதி மதியம் துபாயில் இருந்து ஒருவர் தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்டு தம்புசாமி துபாயில் கடந்த மாதம் இறந்து விட்டதாக கூறினார். கணவர் இறந்து ஒரு மாதம் ஆகபோகிற நிலையில் அவரது உடலை இன்னும் துபாயில் இருந்து அனுப்பவில்லை. அவரின் மர்மசாவு குறித்தும்? அவரது உடலை துபாயில் இருந்து உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் சாந்தா விசாரணை நடத்தி உடனடியாக தம்புசாமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். தம்புசாமி-இளவரசி தம்பதியினருக்கு தேவிகா(13) என்கிற மகளும், கிஷோர்(10), சிவசக்தி(2) ஆகிய 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெரம்பலூர் மின் நகர் மற்றும் விஸ்தரிப்பு குடியிருப்போர் நல சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் வந்து கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு வழங்கினர். அதில், பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் ஊராட்சியில் உள்ள மின்நகர் பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்தப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே மின்நகர் பகுதியில் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது கோரிக்கை நிறைவேற்றாத பட்சத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

    கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 184 மனுக்களை கலெக்டர் சாந்தாவிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார். பின்னர் 8 நபர்களுக்கு குடும்ப அட்டை நகல்களையும், நொச்சியம் மற்றும் கல்பாடி கிராமங்களை சேர்ந்த 4 நபர்களுக்கு ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் சாந்தா வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீதர் உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
    ×