search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூலித்தொழிலாளி"

    கூத்தம்பூண்டி அருகே ஏரியில் மூழ்கி கூலித்தொழிலாளி பலியானார்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அருகே கூத்தம்பூண்டி அண்ணமார்கோவில் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 50). கூலித ்தொழிலாளி. இவரது குடும்பத்தினர் மும்பையில் வசித்து வருகின்றனர். பழனி சற்று மனநிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் அவர் மும்பையில் இருந்து கூத்தம் பூண்டியில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணிக்கம்பாளையம் சென்று விட்டு வருவதாகக் கூறிச் சென்ற பழனி திரும்ப வீட்டுக்கு வரவில்லை.
     
    பல இடங்களில் தேடி பார்த்தும் அக்கம்பக்கத்தில் விசாரித்தும் எங்கும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று  மாணிக்கம்பாளையம் ஏரி பகுதிக்கு சென்றவர்கள் ஒரு ஆண் பிரேதம் இறந்து கிடப்பதைப் பார்த்துள்ளனர். 

    இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

    போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை செய்ததில் இறந்து கிடந்தவர் பழனி என்று தெரியவந்தது. அவர் ஏரியில் குளிக்க சென்றபோது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். 

    இதையடுத்து பழனியின் உடலை போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலகவுண்டம்பட்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்தார்.
    பரமத்திவேலூர்,:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே எறையம்பட்டி ஆதிதிராவிடர் தெரு காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 55), கூலித்தொழிலாளி. இவருக்கு 4 மகள்கள் உள்ளனர் .இதில் இருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. திருமணம் ஆகாத 2 மகள்கள் வீட்டில் இருந்து வருகின்றனர். 

    இந்நிலையில் பழனிசாமிக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இவர் பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் வீட்டில் இருந்து வந்தார். 

    இந்நிலையில் பழனிசாமி நேற்று  வீட்டிலிருந்த  மருந்தை எடுத்து குடித்து விட்டார். தனது மகளுக்கு போன் மூலம் அவரே தகவல் சொன்னதால் மகள்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து அதன் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி உயிரிழந்தார்.இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×