என் மலர்
நீங்கள் தேடியது "Vishwaroopam song"
விஸ்வரூபம் படத்தின் பாடலால் சமூக வலைளத்தில் வைரலான கூலித்தொழிலாளியை திரைப்பட இசையமைப்பாளர்கள் தேடி வருகின்றனர்.
விஸ்வரூபம் படத்தில் ஜிப்ரான் இசையில் பாடகர் சங்கர் மகாதேவனுடன் இணைந்து கமல் பாடியிருந்த ‘உனைக் காணாது’ என்ற பாடலை தோட்டத்தில் அமர்ந்து கொண்டு சாதாரண நபர் ஒருவர் அதே குரலில் பாடியுள்ளார்.
இவர் பாடிய வீடியோவை மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வைரலான இந்த வீடியோ ஷங்கர் மகாதேவன் கவனத்துக்கும் சென்றுள்ளது. அதனைத் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ள ஷங்கர் மகாதேவன் “இதைக் கேட்கும்போது, இந்த நாட்டின் மீது பெருமையாக உள்ளது. கலாச்சாரத்தில் மிகவும் வலிமையாக இருப்பதுடன் இதுபோன்ற பல திறமைகளையும் கொண்டுள்ளது. யார் இவர்? இவரை நான் எப்படிக் கண்டுபிடிப்பது? இது குறித்து எனக்கு உதவி தேவை. இவருடன் இணைந்து பணிபுரிய விருப்பம்” என்று பதிவிட்டுள்ளார்.

இப்பதிவுக்கு பதிலளித்த ஒருவர் பாடலை பாடிய நபரின் தொடர்பு எண்ணையும் பதிவிட்டுள்ளார். விரைவில் அந்த நபருக்கு சங்கர் மகாதேவனுடன் பாடும் வாய்ப்பு கிடைக்கலாம். #Vishwaroopam #ShankarMahadevan