search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "requested"

    • ஊட்டி நகராட்சியில் 5மாதங்களாக வளர்ச்சி பணிகளுக்கு டெண்டர் விடவில்லை.
    • வளர்ச்சி பணிகளுக்கு டெண்டர் விட வலியுறுத்தல்

    ஊட்டி,

    ஊட்டி நகராட்சி மாதந்திர கூட்டம் தலைவர் வாணீஸ்வரி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ரவிக்குமார், கமிஷனர் ஏகராஜ் மற்றும் கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நகரமன்ற உறுப்பினரும், நகர தி.மு.க செயலாளருமான ஜார்ஜ் பேசுகையில் கூறியதாவது:-

    ஊட்டி நகராட்சியில் 7 வார்டுகளில் மட்டும் ரூ.7 கோடியில் வளர்ச்சி பணிகள் நடப்பதாக கூறப்படுகிறது. மற்ற வார்டுகளில் வேலை நடக்கவில்லை. எனவே, அனைத்து வார்டுகளிலும் ஒரே மாதிரியாக வளர்ச்சி பணிகளை பிரித்துக் கொடுத்து பணிகளை மேற்கொளள வேண்டும்.

    ஊட்டி நகராட்சியில் 5மாதங்களாக வளர்ச்சி பணிகளுக்கு டெண்டர் விடவில்லை. அதனை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். படகு இல்லம் அருகே சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தில் தொடர்ந்து நடக்கும் கட்டுமான பணிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநிலம் முழுவதும் கிரில் தொழிலுக்கு தனித்தொழிற்பேட்டைகள் அமைக்க வலியுறுத்தல்
    • கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் உண்ணாவிரதம், கதவடைப்பு போராட்டம் நடத்த முடிவு

    கோவை,

    கோயம்புத்தூர் கிரில் தயாரிப்பாளர் நல சங்கமான கோஜிம்வா தலைவரும், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை மாவட்ட கிரில் தொழில் கூட்டமைப்பு நெட்கோபியா ஒருங்கிணை ப்பாளருமான திருமலை எம்.ரவி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியிடம் தொழில் முனைவோர்கள் சந்திப்பு கூட்டத்தில் எங்கள் அமைப்பு சார்பில் மனு அளித்தோம். அதில் விசைத்தறி கூடங்களுக்கு 750 யூனிட் வழங்குவது போல, கிரில் தயாரிப்பு கூடங்களுக்கும் 500 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.

    ஆனால் விசைத்தறிக்கூ டங்களுக்கு தற்போது 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட்டாக உயர்த்தி இலவச மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது. நாங்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்..

    விசைத்தறிக் கூடங்களைப் போலவே கிரில் தயாரிப்பு கூடங்களும் கூலிக்கு தொழில் செய்யும் நிலையில் தான் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் சொத்து வரி ,தொழில் வரி, மின்கட்டணம், தொழிலாளர் சம்பளம், மூலப்பொருட்கள் விலை ஆகியவை உயர்ந்து உள்ளது. இதனால் கிரில் தயாரிப்பு பொருட்களின் உற்பத்தி செலவு அதிகரித்து உள்ளது.

    எனவே வாடி க்கை யாளர்க ளிடம் விலை உயர்வை கட்டாய ப்படுத்தி திணிக்க வேண்டிய சூழ லில் உள்ளோம். இதனால் எங்க ளுக்கு ஆர்டர்கள் குறைந்து பல லட்சம் தொழிலா ளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிரில் தொழிலாளர்கள் நலம் காக்க தனி நலவாரியம் அமைக்க வேண்டும்,. மேலும் பயிற்சி பெற்ற கிரில் தொழிலாளருக்கு பற்றாக்குறை இருப்பதால், அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் கிரில் பிட்டர், கிரில் வெல்டர் பாடதிட்டங்களை புதிதாக தொடங்க வேண்டும். அவர்களுக்கு பயிற்சியுடன் ஊதியமும் வழங்க தயாராக உள்ளோம்.

    மாநிலம் முழுவதும் கிரில் தொழிலுக்கு தனித்தொழிற்பேட்டைகள் அமைத்து அதனை இலவசமாகவோ, எளிய தவணை முறையிலோ கொடுக்க வேண்டும். தற்போது முக்கிய பிரச்சினையாக உள்ள பீக் ஹவர் மின்சார கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் .எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் உண்ணாவிரதம் மற்றும் கதவடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    • சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • "குருதி பிளாஸ்மா கொடுப்போம், வாழ்வை பகிர்ந்து கொள்வோம்"

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    இந்த பேரணியில் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் நர்சிங் கல்லூரியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது குருதி பிளாஸ்மா கொடுப்போம், வாழ்வை பகிர்ந்து கொள்வோம்" என்ற பிரச்சார முழக்கத்துடன், விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் ஏந்தி சென்றனர். முன்னதாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு உடனடியாக ரத்தம் தேவை. எனவே ரத்ததானம் செய்வது மிகவும் அவசியம். எனவே நீங்கள் அனைவரும் ரத்ததானம் கொடுப்பது மட்டுமின்றி ரத்ததானம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும் போது இனம், மதம் பாகுபாடின்றி அனைவரும் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதன்பிறகு உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு, உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், ஊட்டி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி, துணை இயக்குநர் (சுகாதா ரப்பணிகள்) பாலுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதமாக தடுப்பூசி செயல்பட்டு வருகின்றது.
    • தென்காசி, பூஸ்டர், தடுப்பூசி, கலெக்டர், வேண்டுகோள்

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் 18 வயது முதல் 59 வயது வரையுள்ளோருக்கான முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போடும்பணி கடந்த 15-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு அரசு தடுப்பூசி மையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக போடப்பட்டு வருகிறது.

    நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கால கொண்டாட்டத்தை முன்னிட்டு 75 நாட்கள் பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    இன்றளவும் அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதமாக தடுப்பூசி செயல்பட்டு வருகின்றது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

    எனவே இரண்டாவது தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவுபெற்ற 18 வயது முதல் 59 வரையிலானவர்கள் தங்களுக்கு அருகாமையில் இருக்கும் அரசு தடுப்பூசி மையங்களுக்கு சென்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக போட்டுக்கொண்டு, கொரோனா தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்து கொண்டு மாவட்டத்திற்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த கால அவகாசம் கேட்டு கலெக்டர் சாந்தாவிடம் பெரம்பலூர் மாவட்ட வணிகர் நலச்சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
    பெரம்பலூர்:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 15-ந்தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் மாவட்டம் முழுவதும் படிப்படியாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்நிலையில் பெரம்பலூர் நகரில் உள்ள டீக்கடை, பெட்டி கடை, மளிகை கடை, ஓட்டல்கள், ஜவுளி கடை உள்ளிட்ட கடைகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை படிப்படியாக குறைப்பதற்கு, அவற்றின் உரிமையாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் பெரம்பலூர் நகராட்சி ஆணையர் வினோத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆணையர் வினோத் வருகிற 23-ந்தேதி முதல் பெரம்பலூர் நகரில் உள்ள கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாகவும், மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால், அவற்றை பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றார்.

    பிளாஸ்டிக் பொருட்கள் நிறைய கையிருப்பில் உள்ளதால் வருகிற 23-ந்தேதிக்குள், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த முடியாது என்று உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த இன்னும் கால அவகாசம் கேட்டனர். இதற்கு நகராட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இது தொடர்பாக அனைத்து வியாபாரிகளின் கூட்டமைப்பு ஆன பெரம்பலூர் மாவட்ட வணிகர் நலச்சங்கத்தின் தலைவர் நடராஜன் தலைமையில் பொதுச்செயலாளர் நல்லதம்பி, பொருளாளர் ரவிச்சந்திரன், ஓட்டல் உரிமையாளர்கள் கணேசன், பாலாஜி, செல்லப்பிள்ளை உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மதியம் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் சாந்தாவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்துள்ள தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவுக்கு கட்டுப்படுகிறோம். ஆனால் இப்போது கையிருப்பில் பிளாஸ்டிக் பொருட்கள் நிறைய உள்ளது. அதனை விற்ற பிறகு, பிளாஸ்டிக் பொருட்களை கொள்முதல் செய்ய மாட்டோம். எனவே இந்த கையிருப்பு தீபாவளி வரை இருக்கும் என்பதால் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கால அவகாசம் வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது. மனுவை வாங்கி கொண்ட கலெக்டர் சாந்தா விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் தெரிவித்தார். 
    ×