என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாதி, மத பேதமின்றி நீலகிரியில் அனைவரும் ரத்ததானம் செய்ய வேண்டும்-கலெக்டர் அம்ரித் வேண்டுகோள்
    X

    சாதி, மத பேதமின்றி நீலகிரியில் அனைவரும் ரத்ததானம் செய்ய வேண்டும்-கலெக்டர் அம்ரித் வேண்டுகோள்

    • சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • "குருதி பிளாஸ்மா கொடுப்போம், வாழ்வை பகிர்ந்து கொள்வோம்"

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    இந்த பேரணியில் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் நர்சிங் கல்லூரியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது குருதி பிளாஸ்மா கொடுப்போம், வாழ்வை பகிர்ந்து கொள்வோம்" என்ற பிரச்சார முழக்கத்துடன், விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் ஏந்தி சென்றனர். முன்னதாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு உடனடியாக ரத்தம் தேவை. எனவே ரத்ததானம் செய்வது மிகவும் அவசியம். எனவே நீங்கள் அனைவரும் ரத்ததானம் கொடுப்பது மட்டுமின்றி ரத்ததானம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும் போது இனம், மதம் பாகுபாடின்றி அனைவரும் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதன்பிறகு உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு, உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், ஊட்டி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி, துணை இயக்குநர் (சுகாதா ரப்பணிகள்) பாலுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×