என் மலர்
விருதுநகர்
- சர்வதேச தொழில்முனைவோர் தின நிகழ்ச்சி நடந்தது.
- ஹாட் கப் நிறுவனர் சுந்தர் ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் இன்னோவேஷன் கவுன்சில் சார்பில் சர்வதேச தொழில்முனைவோர் தின நிகழ்ச்சி நடந்தது. விவாதங்கள், விளக்க காட்சி, வினாடி-வினா, இணைப்பு விளையாட்டுகள், மைம் ஷோ போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். ஸ்டார்ட் அப் திட்டமிடல் என்ற பெயரில் கருத்தரங்கு நடந்தது. ஹாட் கப் நிறுவனர் சுந்தர் ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தனது வெற்றிக் கதையை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
- கல்லூரி-பள்ளி மாணவிகள் மாயமானார்கள்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி லிங்காபுரம் காலனியை சேர்ந்தவர் தங்கசாமி(57). இவரது 18 வயது மகள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வெளியே சென்றுவிட்டு தங்கசாமி மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டி இருந்தது.
கதவை தட்டி பார்த்தபோது உள்ளே இருந்து அவரது மகளும், ஒரு வாலிபரும் வந்தனர். அந்த வாலிபரை பிடித்து தங்கசாமி யார் என விசாரித்துள்ளார். அப்போது பாரதி நகரை சேர்ந்தவன் என கூறிய வாலிபர் அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த தங்கசாமி, வீட்டின் முன்பு வைத்து மகளை அடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்குள் சென்றுவிட்டு மீண்டும் வெளியே வந்தபோது மகள் அங்கு இல்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் பலனில்லை.
இதை தொடர்ந்து சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் தங்கசாமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் சண்முக சுந்தரபுரத்தை சேர்ந்தவர் சித்திரன்(57). இவரது 16 வயது மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவரை அதிகாலையில் காண வில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டு பிடிக்க முடிய வில்லை. இதுகுறித்து ஸ்ரீவில்லிபு த்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சித்திரன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சமுதாயக்கூடம்- அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டது.
- மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
விருதுநகர்
விருதுநகர் யூனியன் ஆமத்தூர் கிராமத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம், ரூ. 23.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள 2 அங்கன்வாடி மைய கட்டிடங்களை விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர் தலைமையில் சீனிவாசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
இந்த விழாவில் விருதுநகர் யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சீனிவாசன், கற்பக வல்லி, யூனியன் கவுன்சிலர் அமுதா செல்வராஜ், ஆமத்தூர் பஞ்சாயத்து தலைவர் குறிஞ்சி மலர், அழகர்சாமி, வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆவுடையம்மாள் மற்றும் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீனிவாசன் எம்.எல்.ஏ. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு குறைகளை கேட்டறிந்தார். பின்னர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
- மோட்டார் சைக்கிள் திருட்டு; ராஜபாளையம் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- 9 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சின்ன கொல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 56). கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது மோட்டார் சைக்கிள் திருடு போனது. இது தொடர்பாக கிருஷ்ணன் சாத்தூர் நகர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சம்பவத் தன்று சாத்தூர் பை-பாஸ் ரோட்டில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை மறித்து விசாரணை நடத்தினர்.
அவரிடம் வாகனத்துக்கு ரிய உரிய ஆவணங்கள் இல்லை. போலி பதிவு எண் வைத்து ஓட்டி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த நபரை பிடித்து கிடுக்கிப்பிடி விசா ரணை நடத்தினர்.
இதில் அவர் ராஜபாளை யம் அருகே உள்ள சுரைக் காய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜோதிமுத்து என வும், இவர் விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் ஜோதிமுத்துவை கைது செய்து அவரிடமிருந்து 9 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
- உரிய ஆவணம் இல்லாமல் இயங்கிய ஆட்டோக்கள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டனர்.
- ராஜபாளையம் நகரில் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா, முடங்கியார் சாலை, பஞ்சு மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் திடீரென ஸ்ரீவில்லி புத்தூர் வட்டார போக்கு வரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பூர்ணலதா,
ராஜபாளையம் காவல் துறை துணை கண்கா–ணிப் பளர் பிரீத்தி, விருதுநகர் ஆயுதப்படை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனிகுமார், ஆகியோர் அதிரடியாக 'திடீர்' வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
உரிய ஆவணம் இல்லாத ஆட்டோக்கள், சரக்கு வேன் கள், டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் என 20-க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அந்த வாக னங்களுக்கு ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் அபராதமாக விதிக் கப்பட்டது.
மேலும் ஆட்டோக்களில் அரசு விதிகளை மீறி அதிக அளவில் கல்லூரி மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து இருக்கையை விட அதிக மான அளவில் ஆட்களை ஏற்றக்கூடாது என அறி வுரை வழங்கினர்.
இது போன்ற திடீர் வாகன சோதனைகள் ராஜ பாளையம் நகரில் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியு றுத்தி உள்ளனர்.
- 14 வயது சிறுமி கர்ப்பமடைந்தார்.
- போலீசார் குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பிரவீனை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி நாரணாபுரம் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அதே தெருவை சேர்ந்த பிரவீன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மே மாதம் பிரவீன் வீட்டிற்கு சிறுமி சென்றார். அப்போது சிறுமிக்கு தாலி கட்டி உள்ளார். பின்னர் பிரவீன் வீட்டிலும், சிறுமியின் வீட்டிலும் பலமுறை இருவரும் தனிமையில் சந்தித்தனர்.
இந்த நிலையில் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிறுமியை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது அவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஆஸ்பத்திரி நிர்வாகம் தகவல் கொடுத்தது. போலீசார் சிவகாசி பஞ்சாயத்து யூனியன் அலுவலர் இதயகுமாரியிடம் தெரிவித்தனர். அவர் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று சிறுமியிடம் விசாரித்தபோது மேற்கண்ட விபரங்கள் தெரியவந்தது.
இதையடுத்து சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இதயகுமாரி புகார் கொடுத்தார். போலீசார் குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பிரவீனை தேடி வருகின்றனர்.
- சென்டர் மீடியனில் மோதி தினமும் விபத்தில் வாகனங்கள் சிக்குகின்றன.
- எச்சரிக்கை விளக்குகள் பொறுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் எல்.ஐ.சி. சந்திப்பு வளைவு பகுதியில் எச்சரிக்கை பலகை மற்றும் சென்டர் மீடியனில் ஒளிரும் ஸ்டிக்கர் எதுவுமி இல்லா ததால் தினந்தோறும் வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது.
மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக தென்காசி, மதுரை, தேனி, திருநெல்வேலி, கொல்லம் ஆகிய நகரங்களுக்கு 24 மணி நேரமும் ஆயிரக்க ணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.
ராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நூற்பாலை உள்ளிட்ட ஆலைகளுக்கு மூலப்பொ–ருட்கள் மற்றும் உற்பத்தி பொருட் களை கொண்டு செல்ல தினசரி நூற்றுக்கணக் கான கனரக வாகனங்களும் இவ்வழியே செல்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் எல்.ஐ.சி. சந்திப்பு அருகே வளைவு பகுதியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் சாலையின் நடுவே சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது. உயரம் குறைவாக உள்ள சென்டர் மீடியனில் பேருந்து கள், கனரக வாகனங்கள் சிக்கி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
வளைவு பகுதி யில் எச்சரிக்கை பலகைகள் இல்லாதது மற்றும் சென்டர் மீடியனில் ஒளிரும் ஸ்டிக்கர் கள் இல்லாததால் இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சா லையில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகிறது.
இந்தநிலையில் கோயம் புத்தூரில் இருந்து ராஜபா ளையம் பகுதியில் உள்ள ஆலைக்கு மூலப்பொருட் களை ஏற்றி வந்த சரக்கு லாரி சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. லாரியில் சரக்குகள் அதிக அளவில் இருந்ததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.
இதனால் மதுரை-கொல் லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு லாரியில் இருந்த சரக்குகள் இறக்கப் பட்டு பொக்லைன் எந்திரம் மூலம் லாரி அப்புறப்படுத் தப்பட்ட பின் போக்குவ ரத்து சீரானது.
அதே போல் நேற்று இரவு அதே சென்டர் மீடியனில் சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. சென்டர் மீடியன் உயரத்தை அதிகரித்து எச்சரிக்கை விளக்குகள் பொறுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
- சிறந்த கூட்டுறவுத்துறை கட்டமைப்பை உருவாக்கிய மாநிலம் தமிழ்நாடு என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.
- மத்திய கூட்டுறவு வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வழங்கப்படும் சேவைகளுக்கு இணையாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
விருதுநகர்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விருதுநகரில் கூட்டுறவுத்துறை மூலம் கடன் மேளா நிகழ்ச்சி நடந்தது. சீனிவாசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 1612 பயனாளிகளுக்கு ரூ.10.17 கோடி மதிப்பிலான கடன் அனுமதி ஆணைகளை வழங்கினார்.
இதில் அமைச்சர் பேசிய தாவது:-
கூட்டுறவுத்துறை என்பது துறையாக மட்டுமல்லாமல், இது ஒரு இயக்கமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக நம்முடைய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவினுடைய வளர்ச்சியில் ஒரு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியது கூட்டுறவு இயக்கம் ஆகும். கூட்டுறவு துறையினுடைய வெற்றிக்கு பின்னால் அரசின் பங்க ளிப்பு மட்டுமல்ல பொது மக்களுடைய பங்களிப்பும் இருந்து வருகிறது.
ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கக்கூடியவர்கள் அந்த கிராமத்தை வேளாண்மை மற்றும் தொழில் ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்றால் கூட்டுறவு அமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும். அந்த வகையில் மிகச்சிறந்த ஒரு கூட்டுறவு துறை கட்டமைப்பை உருவாக்கிய ஒரு சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்றால் அது மிகையாகாது.
இந்தியாவிலேயே கூட்டுறவுத்துறையில் மிகச் சிறந்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. மத்திய கூட்டுறவு வங்கி ஒரு லாபம் ஈட்டக்கூடிய வங்கியாக இருந்து வருகிறது. மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக யார்யாரெல்லாம் பயன் பெறுகிறார்கள் என்றால், மகளிர்சுய உதவிக்குழுக்கள், மாற்றுத்திறனாளிகள், சிறு வணிகர்கள், மகளிர் தொழில் முனைவோர்கள், பணிபுரியும் மகளிர், மத்திய கால கடன், முத்ரா கடன், பண்ணை சாரா கடன், சம்பள கடன், வீட்டு வசதி கடன், முதலீட்டுக் கடன், குறு சிறு நடுத்தர தொழில் கடன் என சமுதாயத்தில் அனைத்து பிரிவினரும் பயன்பெறும் வகையில் இந்த கடன் திட்டம் வடிவமைக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த மத்திய கூட்டுறவு வங்கிகள் தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகளில் வழங்கப் படும் சேவைகளுக்கு இணையாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் இணைப் பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் ராஜலெட்சுமி, மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், பொது மேலாளர் சங்கர நாராயணன் உள்பட அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
- மானாசாலை-தேளி இடையே புதிய சாலை அமைக்கும் பணியை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
- முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிச்சை மணி மற்றும் அரசு அலு வலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மானாசாலை - தேளி இடையிலான சுமார் 3.8 கிலோ மீட்டர் தொலை விற்கு நெடுஞ்சாலைத்துறை மூலமாக நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.6.21 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்ப தற்கான பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நட்டு பணியை தொடங்கி வைத்தார்.
மானாசாலை-தேளி இடையிலான தரம் உயர்த்தும் வகையில் போடப்படவுள்ள இந்த புதிய சாலைப்பணியால் வீரசோழன், மானாசாலை, தேளி, கொட்டகாட்சி யேந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் பயன்பெறுவார். பொதுமக்கள் வீரசோழன் பகுதிக்கும், வீரசோழன் பகுதியிலுள்ள பொது மக்கள் மானாமதுரை பகுதிக்கும் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருஞ்சிறை ெரயில்வே கேட் வழியாக சுற்றி சென்று மானாமதுரைக்கு செல்வது தடுக்கப்பட்டு எளிதாக சென்று சேரும் வகையில் இந்த புதிய சாலை அமைய உள்ளது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்ப தோடு பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு பொதுமக்கள் தங்களது நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் நரிக்குடி ஒன்றிய சேர்மன் காளீஸ்வரி சமயவேலு, ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி சிங்கராசு, டி.வேலங்குடி ஊராட்சி மன்றத்தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிச்சை மணி மற்றும் அரசு அலு வலர்கள் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
- வீடு புகுந்து திருடிய 3 பேரை கைது செய்தனர்.
- போலீசார் அவர்களிடம் இருந்து 8 பவுன் நகைகள், ரூ.45,000 மதிப்புள்ள டி.வியை பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணி தெருவைச் சேர்ந்தவர் சிவமணி (வயது65). இவர் சம்பவத் தன்று வீட்டை பூட்டிவிட்டு பெங்களூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றிருந்தார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகை, பணத்தை திருடினர். மேலும் அருகில் உள்ள சவுண்டியம்மன் கோவில் தெருவில் உள்ள ரெஜினா என்பவரது வீட்டிலும் இந்த கும்பல் கைவரிசை காட்டியது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் குற்ற வாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டது.
தனிப்படை போலீ சார் தீவிர விசாரணை நடத்தியதில் 2 வீடுகளிலும் நகை, பணம் திருடியது திருவண்ணாமலை மாவட்டம் மதிமங்கலத்தை சேர்ந்த ராமஜெயம்(36), மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்த பால சுப்பிரமணியன்(42), ஈரோடு மாவட்டம் அக்கரைபாளையத்தை சேர்ந்த அசோக்குமார்(32) என தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 8 பவுன் நகைகள், ரூ.45,000 மதிப்புள்ள டி.வியை பறிமுதல் செய்தனர்.
- மந்தையம்மன் கோவிலில் முளைப்பாரி உற்சவ விழா நடந்தது.
- வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மந்தையம்மனை வழிபட்ட னர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகே இருஞ்சிறை கிரா மத்தில் உள்ள மந்தையம்மன் கோவிலில் முளைப்பாரி உற்சவ திருவிழா கடந்த வாரம் பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷே கங்களுடன் காப்புக்கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கி யது. இந்த நிலையில் மந்தை யம்மன் கோவில் திருவிழா வின் ஒரு பகுதியாக நடை பெற்ற திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடை பெற்றது. இந்த திபூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சுலோகங்க ளுடன் துதி பாடி பய பக்தி யுடன் அம்மனை தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ் வாக நேற்று முளைப்பாரி எடுத்து வந்த பொதுமக்கள் கிராமத்தின் முக்கிய வீதிகள் மற்றும் வழக்கமான கோவில்களில் வைத்து வழி பட்டனர். அதன் பின்னர் கோவிலின் அருகேயுள்ள குளத்தில் முளைப்பாரியை பொதுமக்கள் கரைத்தனர்.
இதனையடுத்து கோவி லில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்கள் அனைவரும் வழிபாடுகள் செய்த நிலையில் முளைப் பாரி உற்சவம் நிறைவ டைந்தது.இந்த சிறப்பு பூஜையில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டு மந்தையம்மனை வழிபட்ட னர்.
- விருதுநகர்-ராமநாதபுரம் மாவட்டங்களில் காற்று மாசை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅமைச்சர் கூறினார்.
- ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் சார்பில் "கார்பன் சமநிலை ராஜபாளையம்" என்னும் புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹீ, சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநர் தீபக் பில்ஜி, துணை இயக்குநர் (ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திலீப் குமார், தனுஷ் குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் "கார்பன் சமநிலை" என்னும் புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 38 மாவட்டங்களிலும் காலநிலை மாற்ற இயக்கங் கள் அமைக்கப்பட்டுள்ளன.முன்னோடி மாவட்டங்க ளான கோயம்புத்தூர், நீலகிரி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட் டங்களை தேர்ந்தெடுத்து கார்பன் சமன்படுத்தப்பட்ட காலநிலை ஸ்மார்ட் மாவட்டம், நகர செயல் திட்டங்களை உருவாக்கி நிறுவனங்களின் பங்களிப்பு டன் காற்று மாசை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படு கிறது.
கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கார்பன் சமநிலை பயிற்சி பட்டறைகளுக்கு பிறகு மாநிலத்தின் வரிசையில் 3-தாக நடைபெற்ற "கார்பன் சமன்படுத்தப்பட்ட ராஜபாளையம்" திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.
காற்று மாசை குறைப்பதற் கான தீர்வுகளை வழங்குவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். காலநிலை மாற்றத்தால் பருவங்கள் மாறி வருகின்றன. சரியான நேரத்தில் மழை பொழிவு இல்லாமலும், பருவநிலை இல்லாத நேரத்தில் மழை பெய்வதுமாக இருக்கின்றது. இந்த காலநிலை மாற்றத்திற்கு காரணம் நாம் தான். அனைவரும் நமது வீட்டில் ஒரு மரமாவது வளர்க்க வேண்டும். நம்முடைய எதிர்கால சந்ததியினர்களுக்கு நல்ல உலகத்தை விட்டு செல்வதற்கான உறுதி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
இந்நிகழ்ச்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஜெயந்தி, காலநிலை மாற்ற ஆளுகைக் குழு உறுப்பினர் நிர்மலா ராஜா (ராம்கோ நிறுவனம்), மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தண்டபாணி, மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பேச்சியம்மாள், மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் ராமராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விசாலாட்சி, ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






