அச்சக உரிமையாளர் உள்பட 3 பேர் தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் அச்சக உரிமையாளர் உள்பட 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அச்சக உரிமையாளர் உள்பட 3 பேர் தற்கொலை
Published on

விருதுநகர்

சிவகாசி சித்துராஜபுரம் கிரகத்தாயம்மாள் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது56). இவர் அதே பகுதியில் அச்சகம் நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக மன அழுத்தத் தால் பாதிக்கப்பட்டிருந்த இவர் அதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார்.

இந்தநிலையில் செல்வராஜின் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன. சம்பவத்தன்று வீட்டில் இருந்த செல்வராஜ் அச்சகத்துக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

சந்தேக மடைந்த அவரது மனைவி செல்வி மற்றும் மகள் அச்சகத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது குடோனில் செல்வராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த புகா ரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின் றனர்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலவனத்தம் வடக்குபட்டியை சேர்ந்தவர் சங்கிலி.

இவரது மகன் அய்யப்பன் (19). டிராக்டர் டிரைவரான இவர் வேலைக்கு செல்லாமல் பெற்றோரிடம் பணம் கேட்டதாக தெரிகிறது. இதனை அவர்கள் கண்டித்தனர். இதில் விரக்தியடைந்த அய்யப்பன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அருப்புக் கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பாட்டகுளத்தை சேர்ந்தவர் சின்ன கருப்பசாமி. டிரைவரான இவருக்கு அடிக்கடி மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதில் விரக்தியடைந்த சின்னகருப்பசாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி பாண்டி யம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com