search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. வெவ்வேறான நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது-மாபா.பாண்டியராஜன்
    X

    திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாபா.பாண்டியராஜன் பரிசு வழங்கிய காட்சி.

    தி.மு.க. வெவ்வேறான நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது-மாபா.பாண்டியராஜன்

    • ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து தி.மு.க. வெவ்வேறான நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது என முன்னாள் அமைச்சர் மாபா.பாண்டியராஜன் கூறியுள்ளார்.
    • சட்டமன்றத்தில் நிறைவேற்ற தாமதம் ஆகும்.

    விருதுநகர்

    விருதுநகர் பாண்டியன் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் மற்றும் எலைட் ரோட்டரி சங்கம் சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் மாபா.பாண்டிய ராஜன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதா வது:-

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஏற்கனவே கருணாநிதி எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பேசப்பட்டது. அப்போது கருணாநிதி அதனை ஆதரித்தார். நாங்கள் (அ.தி.மு.க.) ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது ஆளுங்கட்சி யாக இருந்து ஆதரித்தோம்.

    தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. செயல்படும்போதும் நாங்கள் அதனை ஆதரிக்கிறோம். ஆனால் தி.மு. க.வை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாட்டையும், ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப் பாட்டையும் கையாளுகிறது.

    இந்த ஒரே நாடு, ஒரே தேர்தல் உடனடியாக வரப்போவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அதனை கொண்டு வருவதற்கு மத்திய அரசு 8 பேர் கொண்ட பிரநிதித்துவ குழுவை நியமித்துள்ளது. அந்த குழு தீவிரமாக ஆராய்ந்து அறிக்கை அளித்து, அது நாடாளு மன்றத்திற்கு கொண்டு வர குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது ஆகும்.

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சரியான பாதையாகும். இதில் தி.மு.க. நேரத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி பேசி வருகிறது. தொழிலாளர் நலச்சட்டம் இயற்றி பாராளுமன்றம், அதன் பிறகு சட்டமன்றத்தில் நிறைவேற்ற தாமதம் ஆகும். அதேபோல் தான் இந்த ஒரே நாடு, ஒரே தேர்தலும் உடனடியாக கொண்டு வரப்படாது. அதற்கும் கால அவகாசம் தேவைப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×