என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • 60 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன் கொல்லங்கொண்டான் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 60 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊட்டச்சத்து பெட்டகங்களை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கினார்.அப்போது அவர் பேசுகையில், கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். பிறந்த குழந்தைகளின் வளர்ச்சி மட்டும் கருத்தில் கொள்ளாமல் வயிற்றில் உள்ள குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாடு இன்றி ஆரோக்கியமாக வளர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய ஒரே முதல்வரான மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறார்.

    கருவில் இருக்கும் குழந்தைகள் கூட கருணாநிதியின் மகன் பெயர் சொல்லும் அளவுக்கு கர்ப்பிணி பெண்களுக்கு பார்த்து பார்த்து பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். ஆயிரக்கனக்கான ஏழை, எளிய கர்ப்பிணி பெண்கள் பயன்பெறும் இந்த மருத்துவமனை வளர்ச்சிக்கு நான் எப்போதும் உறு துணையாக இருப்பேன் என்றார்.

    இந்த நிகழ்வில் தலைமை மருத்துவர் கருணாகரபிரபு, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், கிளைச்செயலாளர் வனராஜ், ஒன்றிய கவுன்சிலர் பூமாரி மாரிமுத்து மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், கர்ப்பிணி பெண்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது
    • 53 மாணவர்கள், அறிஞர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெவ்வேறு தலைப்பில் சமர்ப்பித்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளிஸ்வரி கல்லூரியின் முதுகலை வணிகவியல் துறை சார்பாக சமூக அறிவியல் ஆய்வுகளின் மாதிரிகளை வடிவமைத்தல் மற்றும் புள்ளியில் கருவிகளைத் தீர்மானித்தல் என்ற தலைப்பில் 2 நாள் தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது.

    முதல் நாள் கருத்தரங்கில் ஒருங்கிணைப்பாளர்- முதுகலை வணிகவியல் துறைத் தலைவி அமுதாராணி வரவேற்றார். துணை முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். முதுகலை வணிகவயில் துறை உதவிப்பேராசிரியர் சரஸ்வதி, தலைமை விருந்தினரை அறிமுகப்படுத்தினார். மதுரை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் வணிகவியல் உதவிப்பேராசிரியர் வள்ளி தேவசேனா தொடக்க உரையாற்றினார். மற்றொரு சிறப்பு விருந்தினரான சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் தன்னாட்சி கல்லூரி, உதவிப்பேராசிரியர் மற்றும் வணிகவியல் துறைத்தலைவர் செல்வகுமாரை, 2-ம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி அழகுலட்சுமி அறிமுகம் செய்தார்.

    முதுகலை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் லட்சுமணகுமார், தொழில்நுட்ப அமர்வின் சிறப்பு விருந்தினரான, புதுச்சேரி பல்கலைக்கழக மேலாண்மை ஆய்வுத் துறை பேராசிரியர், காசிலிங்கத்தை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், தரவு பகுப்பாய்விற்குத் தேவைப்படும் விளக்கமான புள்ளி விவரம் மற்றும் கோட்பாட்டை விளக்கினார்.

    2-ம் நாள் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினரான வணிகவியல் நிதி கணக்கியல் பள்ளியின் உதவிப்பேராசிரியர் சுரேசை, உதவிப்பேராசிரியர் சதீஸ்குமார் அறிமுகம் செய்தார். தொழில்நுட்ப அமர்வின் தலைமை விருந்தினராக மாலினியை, முதுகலை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியை தங்கபாண்டிஸ்வரி அறிமுகம் செய்தார்.

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் வணிகவியல் துறை தலைவர் குருசாமி, இணைப்பேராசிரியர் மற்றும் நிறும செயலரியல் துறை தலைவர் செந்தில்குமார், கோவில்பட்டி ஜி.வி.என்.கல்லூரி உதவிப்பேராசிரியர் மற்றும் வணிகவியல் துறை தலைவர் ஆர்சாக்ரடீஸ், ஆகியோர் ஆராய்ச்சி கட்டுரை வழங்கல் அமர்விற்கான அறிக்கையாளர்களாக செயல்பட்டனர். மொத்தம் 53 மாணவர்கள், அறிஞர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெவ்வேறு தலைப்பில் சமர்ப்பித்தனர்.

    கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ- மாணவிகளுக்கு காளீஸ்வரி குழும இயக்குநர் சண்முகராஜ், சான்றிதழ்கள் வழங்கினார். 2 நாள் நடந்த தேசிய கருத்தரங்கில் 18 ஆய்வு அறிஞர்கள், 25 பேராசிரியர்கள் மற்றும் 256 மாணவர்கள் 11 கல்லூரிகளில் இருந்து பங்கேற்று பயனடைந்தனர்.

    • விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பங்கேற்றார்.
    • கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், சாத்தூர் ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட ரங்கில்அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தது.

    உறுப்பினர் செயலர்- கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், சாத்தூர் ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.

    மத்திய அரசு திட்டங்கள் மற்றும் அதன் நோக்கம் சரியாக நிறைவேற்றப்படுவதை மாவட்ட அளவில் கண்கா ணித்து நிறைவேற்றுவது மற்றும் ஆலோசனைகள் வழங்குவது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் பணியாகும்.

    இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்ட ங்களான தூய்மை பாரத இயக்கம் - மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், அம்ருத் திட்டம், அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டம்- பேரூராட்சிகள், அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம், பிரதமரின் உஜ்வாலா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்க ளின் மூலம் செயல்படுத்த ப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை தரமாக விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வலியுறுத்தினார்.

    மேலும் மேற்கண்ட திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளில் என்னென்ன சிரமங்கள் உள்ளது என்பது குறித்தும், என்னென்ன திட்டங்களுக்கு நிதி வராமல் நிலுவையில் உள்ளது என்பது குறித்தும், புதிய திட்டங்களுக்கு தேவையான நிதிகள் ஆகியவை குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கும் பட்சத்தில் அது குறித்து, சம்பந்தப்பட்ட துறை மத்திய அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, விருதுநகர் மாவட்டத்திற்கு தேவை யான திட்டங்கள் அனைத்தும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அரசு அலுவலர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கி, நமது மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அனைவரின் ஒத்துழைப்பை நல்குமாறும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்,

    • ஸ்ரீவில்லிபுத்தூர் சீனிவாச பெருமாள் கோவில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    • மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள்கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த வாரம் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி தரிசனம் செய்தனர்.

    தமிழகத்தின் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் மலைக்கோவிலான ஸ்ரீவில்லி புத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா விமரிசையாக கொண்டாடபடுகிறது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்வார்கள்.

    புரட்டாசி மாத 4 வார சனிக்கிழமைகளில் 2-வது வார சனிக்கிழமையான இன்று அதிகாலை சீனிவாச பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்று அதை தொடர்ந்து அதிகாலை காலசாந்தி என்னும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    ஆந்திர மாநிலம் திருப்பதி கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் அங்கு காணிக்கைகளை வழங்க முடியாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து ஆடு, மாடுகள், விவசாய பொருள்கள், தானிய பொருள்கள் போன்ற வற்றை சீனிவாசபெரு மாளுக்கு காணிக்கையாக வழங்குவார்கள்.

    இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பஸ் வசதிகள், மருத்துவ வசதிகள், குடிநீர் வசதிகள், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர். 30-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்கள் மூலம் பக்தர்கள் கண்கா ணிக்கபட்டு வருகி ன்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காட்டழகர் கோவிலிலும் 2-வது சனிக்கிழமை பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது. அங்கும் திரளான பக்தர்கள் சென்று காட்டழகரை தரிசித்து வருகின்றனர்.

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை பல்சேவை கூட்டுறவு மையங்களாக மாற்ற ஆலோசனை நடந்தது.
    • பொறியியல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையக கூட்ட அரங்கில் மண்டல இணைப்பதிவாளர் பா.செந்தில் குமார் தலைமையில் வேளாண்மை பொறியியல் துறை மற்றும் கூட்டுறவு துறை இணைந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்சேவை மையங்களாக மாற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் வேளாண்மை பொறியியல் துறை கண்காணிப்பு பொறியாளர் டி.டேனிஸ்டன், கூட்டுறவு சங்கங்க ளின்இணைப்பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர் மற்றும் பணியாளர் அலுவலர் சந்தனராஜ், அருப்புக்கோட்டை சரக துணை பதிவாளர் சு.ரவிச்சந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் சரக துணை பதிவாளர் க.அமுதா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் இளங்கோவன், கூட்டுறவுத்துறை மற்றும் சங்க செயலாளர்கள், பொறியியல் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோபாலபுரம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் காரை மறித்து முத்துச்செல்வத்தை தாக்கி பெண்ணை கடத்தினர்.
    • சிறையில் உள்ள 5 பேர் மீதும் நகை பறிப்பு உள்ளிட்ட பல புகார்கள் உள்ளன.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 40 வயது பெண் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாலவநத்தம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

    பின்னர் அங்கிருந்து இரவு ஊருக்கு செல்வதற்காக பஸ்சுக்காக அந்த பெண் காத்திருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த உறவினர் முத்துச்செல்வம் என்பவர் அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு ஊருக்கு புறப்பட்டார்.

    கோபாலபுரம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் காரை மறித்து முத்துச்செல்வத்தை தாக்கி அவருடன் வந்த பெண்ணை கடத்தினர்.

    பின்னர் 5 பேரும் அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு நடுரோட்டில் விட்டுச்சென்றனர். இந்த சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவின்பேரில் அருப்புக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண்ணை நடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது கோவிலாங்குளத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சீனிவாசன், ராம்குமார், ஜெயக்குமார், போராளி என்ற பிரபாகரன், விஜய் என தெரிய வந்தது. போலீசார் 5 பேரையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் சிறையில் உள்ள 5 பேர் மீதும் நகை பறிப்பு உள்ளிட்ட பல புகார்கள் உள்ளன. இதையடுத்து அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி கலெக்டர் மேகநாத ரெட்டி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் ராணுவ வீரர் உள்பட 5 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

    • மாநில கலாச்சார கலைப் போட்டியில் கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் 2-ம் இடம் பெற்றனர்.
    • சிவகாசியில் நடந்த மாநில கலாச்சாரக் கலை போட்டியில் பங்குபெற்று ஒட்டு மொத்த ரன்னர் கோப்பையை பெற்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலை கழகத்தில் படிக்கும் 31 மாணவர்கள், சிவகாசியில் நடந்த மாநில கலாச்சாரக் கலை போட்டியில் பங்குபெற்று ஒட்டு மொத்த ரன்னர் கோப்பையை பெற்றனர். கிராபிக்ஸ், வார்த்தை விளையாட்டு போட்டிகளில் முதல் இடமும், புதையல் வேட்டை, ஆர்க்கெஸ்ட்ரா, குரூப் நடனம், புது ஜடியா அறிமுகம் போட்டிகளில் 2-வது இடமும் பெற்றனர்.

    பல்கலை வேந்தர் கே.ஸ்ரீதரன், இணை வேந்தர் அறிவழகிஸ்ரீதரன், துணைத்தலைவர் எஸ்.சசி ஆனந்த் , பதிவாளர் வாசுதேவன், டீன் முத்துக்கண்ணன், கபிலன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்.

    • இளம்பெண் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குப்பைச்சி பட்டியை சேர்ந்தவர் செல்வி. இவரது மகள் ரேணுகா (வயது 24). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் தனியார் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 28-ந் தேதி கல்லூரிக்கு தேர்வு எழுத சென்ற ரேணுகா வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதுபற்றி அவரது தாய் செல்வி கிருஷ்ணன்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ரேணுகாவை தேடி வருகின்றனர் .

    ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் அருகில் உள்ள மதுராபுரியை சேர்ந்தவர் ராமர் (70). இவர் கடந்த 28-ந் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மகன் வீட்டிலிருந்து ஊத்துக்கோட்டைக்கு செல்வதாக மதுராவூரிலிருந்து புறப்பட்டு சென்றார். ஆனால் அவர் ஊத்துக்கோட்டைக்கு செல்லவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இதுபற்றி அவரது மகன் ஆறுமுகம் கிருஷ்ணன் கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ராமரை தேடி வருகின்றனர்.

    சிவகாசியை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகள் பட்டப்படிப்பு முடித்து விட்டு வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்தார். இவர் அடிக்கடி செல்போனை பயன்படுத்தினார். இதனை குடும்பத்தினர் கண்டித்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் மாயமானார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • புதுப்பிக்கப்பட்ட தளவாய்புரம் கூட்டுறவு மருத்துவனை மீண்டும் செயல்பட தொடங்கியது.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பழனிச்சாமி நாடார் சுகாதார கூட்டுறவு சங்கத்தின் மருத்துவமனை புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதை விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் தலைமையில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    அதனைத்தொடர்ந்து ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் 49 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி கடன், விவசாயக்கடன், மகளிர் சுய உதவிக்கடன் மற்றும் சிறுதொழில் கடன்களுக்கான அனுமதி ஆணைக்கடிதத்தை வழங்கினார்.

    இதில் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூர் சேர்மன்கள் ஜெயமுருகன், பாலசுப்பிரமணியன், மருத்துவமனை நிர்வாக தலைவர் பழனிசாமி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், பேரூர் செயலாளர் இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி, மற்றும்கலந்து கொண்டனர்.

    தமிழகத்தின் ஒரே கூட்டுறவு மருத்துவமனை என்ற சிறப்பு வாய்ந்த தளவாய்புரம் கூட்டுறவு மருத்துவமனைக்கு புத்துயிர் கொடுத்து பொலிவுடன் மீண்டும் செயல்பட வைத்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் பாராட்டினர்.

    • தேர்தல் வாக்குறுதிகள் குறித்து தி.மு.க. மாறி மாறி பேசுவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தெரிவித்தார்.
    • நாங்கள் பெற்ற பிள்ளைக்கு வேறுயாரோ பெயர் வைப்பது வேதனையாக உள்ளது என்றார்.

    சிவகாசி:

    சிவகாசியில் அருகே திருத்தங்கலில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று பேசியதாவது:

    52 லட்சம் மாணவர்களுக்கு வழங்கிய லேப்டாப் திட்டத்தை திமுக அரசு நிறுத்தியது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் மருத்துவ படிப்புகளில் சேர வேண்டும் என்பதற்காக 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கினோம்.

    ஆனால் நீட் விலக்கு உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்து தி.மு.க.வினர் மாற்றி, மாற்றி பேசுகின்றனர். நாங்கள் கொண்டுவந்த திட்டங்கள், மருத்துவக் கல்லூரிகளுக்கு நீங்கள் ரிப்பன் வெட்டி துவங்கி வைக்கின்றனர்.

    நாங்கள் பெற்ற பிள்ளைக்கு வேறுயாரோ பெயர் வைப்பது வேதனையாக உள்ளது. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுள்ளார். மக்களுக்காக நீங்கள் என்ன சாதனை செய்துள்ளீர்கள்?

    திராவிட மாடலை உருவாக்கியது அ.தி.மு.க. தான். திராவிட மாடல் என சொல்வதற்கு ஸ்டாலின் என்ன செய்தார்? அம்மா கிளினிக்கை மூடினர். தற்போது அம்மா உணகத்தையும் மூட இந்த அரசு முயற்சித்து வருகிறது. பொங்கல் பண்டிகை வந்தாலே தி.மு.க. அரசு கொடுத்த பரிசு பொருட்கள் தான் ஞாபகம் வருகிறது. ஏழை மக்களுக்கு கொடுக்கக்கூடிய பொருட்களில் கூட ஊழல் செய்துள்ளனர். அனைத்திலும் கமிஷன், கலெக்ஷன், கரெப்சன்.

    உயர்கல்வித்துறை அமைச்சர் பெண்கள் பஸ்சில் ஓசியில் செல்வதாகக் கூறுகிறார். அது மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் கொடுக்கின்றனர். அதனை அவர் கொச்சைப்படுத்துகிறார்.

    இதற்கெல்லாம் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தி.மு.க.விற்கு பாடம் கொடுப்பார்கள். மக்கள்தான் எஜமானர்கள், நீதிபதிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.

    • ஓ.பி.எஸ். அணி கிழக்கு மாவட்ட செயலாளருமான பாலகங்காதரன் உள்ளிட்ட 34 பேர் எடப்பாடி பழனிசாமியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக சாலையோரம் திரண்டிருந்தனர்.
    • போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் எம்.எல்.ஏ. பாலகங்காதரன் உள்பட 34 பேரையும் கைது செய்தனர்.

    விருதுநகர்:

    முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. தற்காலிக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் இன்று காலை சிவகாசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சிவகாசி-விருதுநகர் சாலை வழியாக செல்ல இருந்தார்.

    இது பற்றி அறிந்த சிவகாசி முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஓ.பி.எஸ். அணி கிழக்கு மாவட்ட செயலாளருமான பாலகங்காதரன் உள்ளிட்ட 34 பேர் எடப்பாடி பழனிசாமியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக சாலையோரம் திரண்டிருந்தனர்.

    இந்த போராட்டம் குறித்து அறிந்த போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் எம்.எல்.ஏ. பாலகங்காதரன் உள்பட 34 பேரையும் கைது செய்தனர்.

    இது ஓ.பி.எஸ். அணி பிரமுகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கண்டன பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
    • கார் மூலம் எடப்பாடி பழனிச்சாமி சிவகாசிக்கு புறப்பட்டு சென்றார்.

    சிவகாசி

    தி.மு.க. அரசின் வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் மாவட்ட தலைநகரங்களில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி வருகிறார்.

    தி.மு.க. அரசின் விலை வாசி உயர்வை கண்டித்து மதுரை, சிவகாசியில் இன்று அ.தி.மு.க. கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

    இதற்காக விமானம் மூலம் இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி மதுரை வந்தார். அவரை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்பட கட்சியினர் திரளாக திரண்டு வந்து வரவேற்றனர்.

    அதனைத் தொடர்ந்து கார் மூலம் எடப்பாடி பழனிச்சாமி சிவகாசிக்கு புறப்பட்டு சென்றார். விருதுநகர் மாவட்ட எல்லையில் அ.தி.மு.க. சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து சிவகாசி திருத்தங்கல் அண்ணா மலையார் நகரில் நடந்த அ.தி.மு.க. கண்டன பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், கே.டி. ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு மற்றும் இந்நாள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    இன்று மாலை மதுரையில் நடக்கும் கண்டன பொது கூட்டத்திலும் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசுகிறார்.

    ×