என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம்- ராணுவ வீரர் உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது
    X

    பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம்- ராணுவ வீரர் உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

    • கோபாலபுரம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் காரை மறித்து முத்துச்செல்வத்தை தாக்கி பெண்ணை கடத்தினர்.
    • சிறையில் உள்ள 5 பேர் மீதும் நகை பறிப்பு உள்ளிட்ட பல புகார்கள் உள்ளன.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 40 வயது பெண் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாலவநத்தம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

    பின்னர் அங்கிருந்து இரவு ஊருக்கு செல்வதற்காக பஸ்சுக்காக அந்த பெண் காத்திருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த உறவினர் முத்துச்செல்வம் என்பவர் அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு ஊருக்கு புறப்பட்டார்.

    கோபாலபுரம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் காரை மறித்து முத்துச்செல்வத்தை தாக்கி அவருடன் வந்த பெண்ணை கடத்தினர்.

    பின்னர் 5 பேரும் அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு நடுரோட்டில் விட்டுச்சென்றனர். இந்த சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவின்பேரில் அருப்புக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண்ணை நடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது கோவிலாங்குளத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சீனிவாசன், ராம்குமார், ஜெயக்குமார், போராளி என்ற பிரபாகரன், விஜய் என தெரிய வந்தது. போலீசார் 5 பேரையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் சிறையில் உள்ள 5 பேர் மீதும் நகை பறிப்பு உள்ளிட்ட பல புகார்கள் உள்ளன. இதையடுத்து அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி கலெக்டர் மேகநாத ரெட்டி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் ராணுவ வீரர் உள்பட 5 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×