என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் ராஜபாளையம் வட்டம் இனாம்செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்தபோது இறந்ததால் அவருக்கு வழங்க வேண்டிய சட்டபூர்வ இழப்பீட்டுத்தொகை ரூ. 35 லட்சத்து 75 ஆயிரத்து 757-க்கான காசோலையை மனைவி நாகலட்சுமியிடம், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார். அருகில் கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன் உள்ளனர்.
வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்
- விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பங்கேற்றார்.
- கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், சாத்தூர் ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட ரங்கில்அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தது.
உறுப்பினர் செயலர்- கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், சாத்தூர் ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.
மத்திய அரசு திட்டங்கள் மற்றும் அதன் நோக்கம் சரியாக நிறைவேற்றப்படுவதை மாவட்ட அளவில் கண்கா ணித்து நிறைவேற்றுவது மற்றும் ஆலோசனைகள் வழங்குவது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் பணியாகும்.
இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்ட ங்களான தூய்மை பாரத இயக்கம் - மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், அம்ருத் திட்டம், அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டம்- பேரூராட்சிகள், அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம், பிரதமரின் உஜ்வாலா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்க ளின் மூலம் செயல்படுத்த ப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை தரமாக விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வலியுறுத்தினார்.
மேலும் மேற்கண்ட திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளில் என்னென்ன சிரமங்கள் உள்ளது என்பது குறித்தும், என்னென்ன திட்டங்களுக்கு நிதி வராமல் நிலுவையில் உள்ளது என்பது குறித்தும், புதிய திட்டங்களுக்கு தேவையான நிதிகள் ஆகியவை குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கும் பட்சத்தில் அது குறித்து, சம்பந்தப்பட்ட துறை மத்திய அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, விருதுநகர் மாவட்டத்திற்கு தேவை யான திட்டங்கள் அனைத்தும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அரசு அலுவலர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கி, நமது மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அனைவரின் ஒத்துழைப்பை நல்குமாறும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்,






