என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • சிவகாசி அருகே பட்டாசு-திரி வைத்திருந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இந்த சம்பவம் தொடர்பாக திருத்தங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருத்தங்கல் அருகே உள்ள பழைய வெள்ளையாபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (33). எளிதில் தீப்பற்றக்கூடிய திரிகளை வைத்திருந்ததாக திருத்தங்கல் போலீசார் மாரிமுத்துவை கைது செய்தனர்.

    சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி நாராயணபுரம் ரோட்டில் சிவகாசி கிழக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கோவை வேலப்பர் கவுண்டர் வீதியைச் சேர்ந்த நாகராஜ் (39) என்பவர் அனுமதியின்றி 10 பெட்டிகளில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். அதனை போலீசார் பறிமுதல் செய்து நாகராஜை கைது செய்தனர்.

    சிவகாசி எம்.மேட்டுப்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி பட்டாசு குழாய்களை வைத்திருந்ததாக வீரபாகு, ராஜகோபால் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1,200 பட்டாசு குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல் பட்டாசு திரி, பட்டாசுகளை வைத்திருந்ததாக கீழகோதைநாச்சியார்புரத்தைச் சேர்ந்த இளையராஜா, கங்காகுளத்தைச் சேர்ந்த கருப்பசாமி, திருத்தங்கல்லைச் சேர்ந்த பவுன்தாய், முனியம்மாள் ஆகிய 4 பேரை திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர். 

    • ராஜபாளையத்தில் அரசு பஸ் ேமாதி பெண் குழந்தையின் கால் துண்டானது.
    • வாகனங்களை முந்திச்சென்றபோது இந்த விபத்து நடந்தது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் அருகே உள்ள முத்துலிங்க புரத்தைச் சேர்ந்தவர் முத்து வேல் (வயது 42). கூலி தொழி லாளியான இவருக்கு பாப்பு என்ற மனைவியும், 8 வயதில் அபிஷ்குமார் என்ற மகளும், 1 வயதில் தனலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

    பஸ் மோதியது சம்பவத்தன்று ராஜ பாளையம் அருகே உள்ள சொக்கநாதபுரத்தில் உறவி னர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க முத்துவேல் தனது மனைவி மற்றும் குழந்தை களுடன் மோட்டார் சைக்கிள் சென்றார். துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றபின் முத்துவேல் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார். டி.பி. மில்ஸ் ரோடு வடக்கு மலையடிபட்டி வழியாக செல்லும் போது அங்குள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தது.

    இதன் காரணமாக இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. சிறிது நேரத்தில் அந்தப் பகுதியை ரெயில் கடந்த பின் கேட் திறக்கப்பட்டது. பின்னால் மோட்டார் சைக்கிளில் நின்றிருந்த முத்துவேல் முந்தி செல்வ முயற்சித்ததாக கூறப்படுகிறது.அப்போது எதிர்புறத்தில் வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக முத்துவேல் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. கால் துண்டானது இதில் நிலைகுலைந்த முத்துவேல், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் கீழே விழுந்தனர்.

    அப்போது அரசு பஸ்சின் சக்கரம் ஒரு வயது குழந்தை தனலட்சுமி கால் மீது ஏறி இறங்கியது. இதில் அந்த பிஞ்சு குழந்தையின் கால் துண்டானது. வலியால் துடித்த குழந்தையை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு ராஜபாளையம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தனலட்சுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் சேத்தூரைச் சேர்ந்த கந்தசாமி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார். விழிப்புணர்வு முத்துவேல் மோட்டார் சைக்கிளில் 3 பேரை அழைத்து சென்ற வாகனங்களை முந்திச் செல்ல முயன்றதால் விபத்தில் சிக்கி கைக்குழந்தையின் கால் துண்டானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சாலை விதிகளை பின்பற்ற வேண்டும், மோட்டார் சைக்கிளில் 2 பேருக்கு மேல் பயணம் செய்யக் கூடாது , ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டு மென போக்குவரத்து போலீசார் நாள்தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் செல்வோர் விபத்தில் சிக்கி வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர்.

    • இல்லம் தேடி கல்வி திட்ட மாணவர்கள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
    • இதற்கான ஏற்பாடுகளை இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் செய்திருந்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி மையத்திற்கு வரும் மாணவர்கள் அருகில் உள்ள குகை கோயிலுக்கு சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனர். திருமலாபுரம் பகுதியில் இரு மையங்கள் செயல்படுகிறது.

    மையத்திற்கு வரும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், பாடத்தில் கற்றுள்ள குகை கோவில் குறித்து நேரடி அனுபவத்தை ஏற்படுத்தும் வகையிலும், திருவண்ணாமலை அருகே உள்ள சிவன் குகை கோவிலுக்கு இல்லம் தேடி கல்வி மைய மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு குகைக் கோவில் குறித்து விளக்கப்பட்டது.

    இந்த பகுதியில் சித்தர்கள் ஜீவசமாதி அடைந்துள்ள பகுதிகளையும் மாணவர்கள் பார்த்தனர். இதற்கான ஏற்பாடுகளை இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் செய்திருந்தார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கிரிப்டோகரன்சி குறித்த கருத்தரங்கு நடந்தது.
    • இந்த நிகழ்வில் துறை சார்ந்த 115 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் வணிகவியல் நிறும செயலறியல் துறை சார்பில் ''கிரிப்டோ கரன்சியின் எதிர்காலம்'' என்ற தலைப்பில் காணொலி மூலமாக கருத்தரங்கு நடந்தது.

    இதன் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு கிரிப்டோ கரன்சி பற்றி விளக்குவதும், அதன் செயல்பாடுகளைப் புரிய வைப்பதும் ஆகும்.

    சென்னை இந்துக் கல்லூரியின் முதுகலை மற்றும் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியை சிவப்பிரியா சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டார்.

    அவர் பேசுகையில், வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகள் மூலம் அதன் மதிப்பைப் பெறும் கிரிப்டோ கரன்சிகள் குறித்து விளக்கினார்.

    இது பிளாக் செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. அதைப் பார்க்கவும், கண்காணிக்கவும் முடியும் என்று கூறிய அவர், அதன் பரிவர்த்தனை முறையையும் விளக்கினார்.

    கிரிப்டோகரன்சிகளில் பரிவர்த்தனை செய்யும் ஆப்பிள் பே டாலர் , யுரோ போன்ற பியட் கரன்சிகளைப் போல இல்லை என்றும் இது பொதுவாக நாணயங்கள் மற்றும் டோக்கன்கள் போன்ற 2 வகைகளில் ஒன்றாகும் என்றும் தெரிவித்தார். துறைத்தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார்.

    உதவிப்பேராசிரியை சூரியா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவிப்பேராசிரியை ஜேஸ்மின் பாஸ்டினா செய்திருந்தார். இந்த நிகழ்வில் துறை சார்ந்த 115 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு சீதன பொருட்களை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
    • ரூ.43 ஆயிரம் மதிப்பில் முதியோர், ஆதரவற்ற விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகைகளையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கி பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

    இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை வழங்கினார்.

    மேலும் கர்ப்பிணி பெண்களின் இரும்புச் சத்து குறைபாட்டை சரி செய்ய மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மூலம் இரும்பு பெண்மணி என்ற சிறப்பு திட்டத்தையும் தொடங்கி வைத்து, இரும்பு சத்து மற்றும் ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அமைச்சர் பயனாளிகளுக்கு வழங்கினார்.

    கருப்பு உலர் திராட்சை, உலர் அத்தி பழம், சிவப்பு அவல், புரதச்சத்து மற்றும் இரும்புச் சத்து பொருட்கள் அடங்கிய இந்த தொகுப்பு மாதம் ஒரு முறை 3 மாதங்களுக்கு வழங்கப்படும். பின்னர் 43 பயனாளி களுக்கு ரூ.43 ஆயிரம் மதிப்பில் முதியோர், ஆதரவற்ற விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகைகளையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கி பேசினார்.

    விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் யசோதாமணி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், திருச்சுழி யூனியன் தலைவர் பொன்னுதம்பி, வட்டாட்சியர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாத்தூர் அருகே கிராமசபை கூட்டத்தில் தூய்மை காவலர்கள் கவுரவிக்கப்பட்டது.
    • முன்னதாக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மரக்கன்றுகளை மாவட்ட வருவாய் அலுவலர் நட்டினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சத்திரப்பட்டி கிராமத்தில் மகாத்மாகாந்தி 154-வது பிறந்த நாளை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் நடந்தது.

    இதில் அவர் பேசுகையில், உண்மையான அதிகாரம் மக்களிடம் தான் உள்ளது. அதனடிப்படையில் இந்த கிராமசபை கூட்டத்தின் வாயிலாக இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான பணிகள் அரசு மூலம் என்னென்ன வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது? என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது? இன்னும் என்னென்ன தேவைகள் உள்ளது? என்பது கிராம மக்கள் வாயிலாக அறிந்து அதை செயல்படுத்துவது தான் இதன் நோக்கம் ஆகும்.

    நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். புதுமைப்பெண் திட்டம் என்பது அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளின் உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில், மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் முதலமைச்சரால் தொடங்கப்பட்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.அதனை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    முன்னதாக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மரக்கன்றுகளை மாவட்ட வருவாய் அலுவலர் நட்டினார். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட கண்காட்சியையும் மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டார்.

    சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர்கள் 3 பேருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

    • சாத்தூர் நகராட்சி ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்றனர்.
    • இந்து சமய அறநிலையத்துறை செயலரிடம் ஆவணங்களை சமர்ப்பித்து அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. நகர்மன்ற தலைவர் குருசாமி, நகராட்சி ஆணையாளர் இளவரசன் முன்னிலை வகித்தனர்.

    சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். நகராட்சியில் உள்ள பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு, கழிவு நீர் வாறுகால், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்-குறைபாடுகள் குறித்து கவுன்சிலர்கள் முறையிட்டனர். இந்த குறைகள் சம்பந்தமாக அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து சரி செய்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

    மேலும் கோவில் நிலங்களில் குடியிருப்பவர்கள் வாடகை அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து முறையிட்டனர். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை செயலரிடம் ஆவணங்களை சமர்ப்பித்து அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வு கூட்டத்தில் சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். வட்டாட்சியர் வெங்கடேசன், தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் கடற்கரை ராஜ், முருகேசன், போலீஸ் டி.எஸ்.பி. நாகராஜ், இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன் மற்றும் நகராட்சி, வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நேற்று மதியம் திருப்பதியும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனும் பட்டாசுகளை தயாரித்துள்ளனர்.
    • வெடிவிபத்து நடந்த பகுதியை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பூசாரித்தேவன்பட்டி கிராமம் உள்ளது. இந்த ஊரில் காளியம்மன் கோவில் அருகே கோபாலன்பட்டியை சேர்ந்த திருப்பதி (வயது 29) என்பவர் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்க பயன்படும் குழாய்கள் தயாரித்து வந்தார்.

    அந்த இடத்தில் உரிய அனுமதியின்றி விதிகளுக்கு புறம்பாக பேன்சி ரக பட்டாசுகளையும் தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று மதியம் திருப்பதியும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனும் பட்டாசுகளை தயாரித்துள்ளனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் திருப்பதி மற்றும் 17 வயது சிறுவன் என இருவரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருப்பதி பரிதாபமாக இறந்தார்.

    வெடிவிபத்து நடந்த பகுதியை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • காளீஸ்வரி கல்லூரி சார்பில் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
    • முகமில் 60 பயனாளிகள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் தமிழியல் துறை சமூக விரிவாக்கப்பணி சார்பில் சிவகாசி, அரசு மருத்துவமனையுடன் இணைந்து எம்.மீனாட்சிபுரம் கிராமத்தில் எக்ஸ்ரே மூலம் நுரையீரல் பரிசோதனை செய்யும் முகாம் நடந்தது. இதில் எக்ஸ்ரே மற்றும் ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனைகளின் மூலம் காசநோய், நாள்பட்ட சளி, எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்கள் கண்டறிப்படும். இந்த முகாமிற்கு கல்லூரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

    துணை முதல்வர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். விருதுநகர் மாவட்ட காசநோய் துணை இயக்குநர் ராஜன், காசநோய் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமிர்தலிங்கம், முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் டேனியல்ராஜன், காசநோய் பார்வையாளர் பாலமுருகன், காசநோய் ஆய்வக உதவியாளர் முத்துவேல், ஐ.சி.டி.சி. துறையினர் மற்றும் தமிழியல் துறைத் தலைவர் செந்தில்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் சு.முத்துசிதம்பரபாரதி செய்திருந்தார். முகமில் 60 பயனாளிகள் கலந்து கொண்டனர்.காளீஸ்வரி கல்லூரி, Kalishwari College , மருத்துவ பரிசோதனை, Camp,

    • தூய்மை நகரத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகராட்சி, வைமா இளம்படை மாணவர்கள் மற்றும் கேசா டி மிர் இணைந்து தூய்மை நகரத்தி ற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி தொடங்கி வைத்தார்.

    வைமா வித்யாலயா பள்ளி முதல்வர் கற்பகலட்சுமி தலைமை தாங்கினார். வைமா இளம்படை இணை ஒருங்கிணைப்பாளர் ராமராதா வரவேற்றார். ஜே.சி.ஐ. ராஜபாளையம் கேசா டி மிர் தலைவர் தேவி நிகழ்ச்சியை அறிமுகம் செய்தார். இளம்படை ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி, இளம்படை மாணவர்களை அறிமுகம் செய்தார். இளம்படை மாணவர்கள் ''எனது குப்பை எனது பொறுப்பு'' என்ற தலைப்பில் பாடல் பாடினர். 4-ம் வகுப்பு மாணவர் ஆதேஷ் ''மக்கும் குப்பை மக்காத குப்பை'' என்ற தலைப்பில் பேசினார். குப்பையை தரம் பிரித்தல் பற்றி வைமா இளம்படை மாணவர்கள் பொதுமக்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தனர். வைமா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் திருப்பதிசெல்வன், மேனேஜிங் டிரஸ்டி அருணா திருப்பதி செல்வன் வழிகாட்டுதலின்படி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலியானார்.
    • மேல்சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி கற்பக வல்லி (வயது 30). முனியசாமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் கற்பகவல்லி தனது 5 வயது மகன் அய்யப்பனுடன் மாமியார் மாரியம்மாள் வீட்டில் வசித்து வந்தார்.

    கூலி வேலைக்கு சென்று குடும்பத்ைத காப்பாற்றி வந்த கற்பகவல்லி நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். மகன் அய்யப்பன், பாட்டி மாரியம்மாளுடன் வீட்டில் இருந்துள்ளான்.

    இந்நிலையில் நேற்று மாலை ஊருக்கு வடபுறம் வைரமுத்து என்பவர் கட்டி வரும் கட்டிடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் சிறுவன் அய்யப்பன் மூழ்கிய நிலையில் கிடந்துள்ளான். அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு நத்தம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    பின்பு மேல்சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நூல் விலை அதிரடியாக குறைப்பு காரணமாக ராஜபாளையம் வட்டார பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
    • ஒரு கேண்டி நூல் விலை ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ. 75 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ராஜபாளையம்

    சர்வதேச அளவில் பேண்டேஜ் மருத்துவ துணி உற்பத்தியில் 90 சதவீத உற்பத்தி தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டாரத்தில் உள்ள சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் பகுதிகளில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

    சமீப காலமாக நூல் விலை திடீரென்று உயர்ந்து 356 கிலோ கொண்ட ஒரு கேண்டி நூல் விலை ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் வரை உயர்ந்தது. இதன் காரணமாக ஆர்டர் எடுத்த நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்து கொடுக்க இயலாத நிலையில் கடுமையான நஷ்டத்தை பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் சந்தித்தனர்.

    ஒரு மாத காலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக தற்போது ஒரு கேண்டி நூல் விலை ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ. 75 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ராஜபாளையம் வட்டார பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    கடந்த 6 மாத காலத்திற்கு முன்பு வரை ஒரு கேண்டி விலை ரூ.55 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை இருந்து வந்த நிலைக்கு மீண்டும் விலை குறைய வேண்டும் என பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து விலை குறைந்து சர்வதேச சந்தையில் உயர்ந்த இடத்தை தொடர்ந்து பிடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யு மாறு பேண்டேஜ் உற்பத்தி யாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×