தேசிய அளவிலான கருத்தரங்கு

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது 53 மாணவர்கள், அறிஞர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெவ்வேறு தலைப்பில் சமர்ப்பித்தனர்.
கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ- மாணவிகளுக்கு காளீஸ்வரி குழும இயக்குநர் சண்முகராஜ் சான்றிதழ்கள் வழங்கினார்.
கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ- மாணவிகளுக்கு காளீஸ்வரி குழும இயக்குநர் சண்முகராஜ் சான்றிதழ்கள் வழங்கினார்.
Published on

சிவகாசி

சிவகாசி காளிஸ்வரி கல்லூரியின் முதுகலை வணிகவியல் துறை சார்பாக சமூக அறிவியல் ஆய்வுகளின் மாதிரிகளை வடிவமைத்தல் மற்றும் புள்ளியில் கருவிகளைத் தீர்மானித்தல் என்ற தலைப்பில் 2 நாள் தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது.

முதல் நாள் கருத்தரங்கில் ஒருங்கிணைப்பாளர்- முதுகலை வணிகவியல் துறைத் தலைவி அமுதாராணி வரவேற்றார். துணை முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். முதுகலை வணிகவயில் துறை உதவிப்பேராசிரியர் சரஸ்வதி, தலைமை விருந்தினரை அறிமுகப்படுத்தினார். மதுரை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் வணிகவியல் உதவிப்பேராசிரியர் வள்ளி தேவசேனா தொடக்க உரையாற்றினார். மற்றொரு சிறப்பு விருந்தினரான சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் தன்னாட்சி கல்லூரி, உதவிப்பேராசிரியர் மற்றும் வணிகவியல் துறைத்தலைவர் செல்வகுமாரை, 2-ம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி அழகுலட்சுமி அறிமுகம் செய்தார்.

முதுகலை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் லட்சுமணகுமார், தொழில்நுட்ப அமர்வின் சிறப்பு விருந்தினரான, புதுச்சேரி பல்கலைக்கழக மேலாண்மை ஆய்வுத் துறை பேராசிரியர், காசிலிங்கத்தை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், தரவு பகுப்பாய்விற்குத் தேவைப்படும் விளக்கமான புள்ளி விவரம் மற்றும் கோட்பாட்டை விளக்கினார்.

2-ம் நாள் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினரான வணிகவியல் நிதி கணக்கியல் பள்ளியின் உதவிப்பேராசிரியர் சுரேசை, உதவிப்பேராசிரியர் சதீஸ்குமார் அறிமுகம் செய்தார். தொழில்நுட்ப அமர்வின் தலைமை விருந்தினராக மாலினியை, முதுகலை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியை தங்கபாண்டிஸ்வரி அறிமுகம் செய்தார்.

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் வணிகவியல் துறை தலைவர் குருசாமி, இணைப்பேராசிரியர் மற்றும் நிறும செயலரியல் துறை தலைவர் செந்தில்குமார், கோவில்பட்டி ஜி.வி.என்.கல்லூரி உதவிப்பேராசிரியர் மற்றும் வணிகவியல் துறை தலைவர் ஆர்சாக்ரடீஸ், ஆகியோர் ஆராய்ச்சி கட்டுரை வழங்கல் அமர்விற்கான அறிக்கையாளர்களாக செயல்பட்டனர். மொத்தம் 53 மாணவர்கள், அறிஞர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெவ்வேறு தலைப்பில் சமர்ப்பித்தனர்.

கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ- மாணவிகளுக்கு காளீஸ்வரி குழும இயக்குநர் சண்முகராஜ், சான்றிதழ்கள் வழங்கினார். 2 நாள் நடந்த தேசிய கருத்தரங்கில் 18 ஆய்வு அறிஞர்கள், 25 பேராசிரியர்கள் மற்றும் 256 மாணவர்கள் 11 கல்லூரிகளில் இருந்து பங்கேற்று பயனடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com