என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் உள்பட 3 பேர் மாயம்
    X

    இளம்பெண் உள்பட 3 பேர் மாயம்

    • இளம்பெண் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குப்பைச்சி பட்டியை சேர்ந்தவர் செல்வி. இவரது மகள் ரேணுகா (வயது 24). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் தனியார் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 28-ந் தேதி கல்லூரிக்கு தேர்வு எழுத சென்ற ரேணுகா வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதுபற்றி அவரது தாய் செல்வி கிருஷ்ணன்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ரேணுகாவை தேடி வருகின்றனர் .

    ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் அருகில் உள்ள மதுராபுரியை சேர்ந்தவர் ராமர் (70). இவர் கடந்த 28-ந் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மகன் வீட்டிலிருந்து ஊத்துக்கோட்டைக்கு செல்வதாக மதுராவூரிலிருந்து புறப்பட்டு சென்றார். ஆனால் அவர் ஊத்துக்கோட்டைக்கு செல்லவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இதுபற்றி அவரது மகன் ஆறுமுகம் கிருஷ்ணன் கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ராமரை தேடி வருகின்றனர்.

    சிவகாசியை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகள் பட்டப்படிப்பு முடித்து விட்டு வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்தார். இவர் அடிக்கடி செல்போனை பயன்படுத்தினார். இதனை குடும்பத்தினர் கண்டித்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் மாயமானார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×