என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயிகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வனத்துறை ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • இதனால் விவசாய பணிகளை செய்ய முடியாமல் பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுக்கம் மறவர் தெருவை சேர்ந்தவர் ராமர். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் செண்பகதோப்பு வனப்பகுதி உள்ளது.

    கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராமர், அவரது சகோதரர் லட்சுமணன் மற்றும் உறவினர் தோட்டத்திற்கு சென்றுள்ளனர். அங்கு 3 பேரும் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது சீருடை அணியாமல் வந்த வனத்துறை ஊழியர்கள் 3 பேர் செல்போனில் வீடியோ எடுத்ததோடு தரக்குறைவாக பேசி ராமர் உள்பட 3 பேர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராமர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த

    நீதிமன்றம் விவசாயிகள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய வனத்துறை ஊழியர்கள் பாரதி, ஜெயக்குமார், கடற்கரைவேல் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வனப்பகுதியில் செல்ல பொதுமக்களுக்கு வனத்துறை கடும் கட்டுப்பா டுகளை விதித்துள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகதோப்பு பகுதியில் ஏராளமான விவசாய தோட்டம் உள்ளது. இங்கு செல்லகூட விவசாயிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. இதனால் விவசாய பணிகளை செய்ய முடியாமல் பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    • விசைத்தறி தொழிலாளர்கள் 9-வது நாளாக வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.
    • கஞ்சித்தொட்டி திறப்பு அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதி யில் 400-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சேலை உற்பத்தி செய்யும் தொழிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஒப்பந்தம் போடப்பட்டு அதன் அடிப்படையில் கூலி (சம்பளம்) வழங்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் 2021-23 ஆண்டுக்கு கூலி ஒப்பந்தம் செய்வதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் முன்வராத காரணத்தினால் விசைத்தறி தொழிலாளர்கள் தங்களுக்கு 75 சதவீதம் சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும். 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதனை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது தொடர்பாக பல்வேறு கட்டங்களில் விசைத்தறி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி யும் தோல்வியில் முடிந்து விட்டது. இதைத்தொடர்ந்து தற்போது போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. அவர்கள் இன்று 9-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஏ.ஜ.டி.யு.சி. வட்டார தலைவர்கள் அய்யனார், ராசு தலைமையில் செட்டி யார்பட்டி கிராமநிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு இன்று கஞ்சி தொட்டி திறப்போம் என்று அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் தளவாய்புரம் விசைத்தறி தொழிலா ளர்கள் வாழ்வாதார பிரச்சினை என்பதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தி கோரிக்கைகளை நிறை வேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    • 2 மகன்களுடன் இளம்பெண்-கல்லூரி மாணவி மாயமானார்கள்.
    • சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அல்லம் பட்டியை சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவரது மகள் முத்துமாரி (33). இவருக்கும், ஓடைப்பட்டியை சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தீனதயாளன் (5), தங்கப்பாண்டி (2) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த முத்துமாரி தனது மகன்களுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக முத்துமாரி உறவினர் மாரியப்பன் என்பவருடன் அடிக்கடி போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த முத்துமாரி தனது 2 மகன்களுடன் மாயமானார். இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசரித்து வருகின்றனர்.

    சிவகாசி சாட்சியாபு ரத்தை சேர்ந்தவர் பென்னி. இவரது மகள் பிருந்தா பிளஸ்சி(வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே பால் வியாபாரி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • அருப்புக்கோ ட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை காந்தி நகரை சேர்ந்தவர் ரத்தினகுமார்(வயது52), பால்வியாபாரி. இவருக்கு பூவை மீனாட்சி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று மனைவி மற்றும் குழந்தைகள் வெளியூரில் உள்ள குலதெய்வ ோவிலுக்கு சென்றிருந்தனர். அப்போது வீட்டில் இருந்த ரத்தினகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருப்புக்கோ ட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    திருத்தங்கல் ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (71). நோய் பாதிப்பு காரணமாக வாழ்க்கையில் விரக்திய டைந்த இவர், சம்பவத்தன்று தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய அவரை சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்தோணிராஜ் பரிதாபமாக இறந்தார்.

    சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்தவர் மகாரா ஜன்(34). இவர் மதுகுடிக்க அடிக்கடி மனைவி விஜயசுதாவிடம் பணம் கேட்டு வந்தார். இதனால் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்றும் மது குடிக்க மகாராஜன் பணம் கேட்டார். ஆனால் மனைவி தர மறுத்து விட்டார். இதனால் விரக்தியடைந்த மகாராஜன் வீட்டின் தனி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது.
    • நிறைவு விழாவில் 4-ம் ஆண்டு மாணவி பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொலை தொடர்பியல் துறை சார்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கை (ELCOWARZ-2023) நடத்தியது.

    பி.எஸ்.ஆர். கல்விக் குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தொடங்கி வைத்தார். இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

    டீன் மாரிச்சாமி வாழ்த்துரை வழங்கினார். மின்னணுவியல் துறைத்தலைவர் வளர்மதி கருத்தரங்கின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார். 4-ம் ஆண்டு மாணவர் அய்யனார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கோவை ''மைண்ட்நோடிக்ஸ் டெக்னாலஜிஸ்'' நிறுவனர் சதீஷ்குமார் சேட்டு கலந்து கொண்டார். அவர் பேசுகையில், மாணவர்கள் தங்களுக்கென்று ஒரு குறிக்கோளை வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றவாறு செயல்புரிய வேண்டும்.

    மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். புதுமையான செயல்திறன் மிக்க கண்டுபிடிப்புகளை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஆய்வு கட்டுரைகளை உருவாக்க வேண்டும் என்றார்.

    கருத்தரங்கில் தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர். கனெக்சன். போன்ற தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகளும், தொழில் நுட்பம் சாராத போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

    நிறைவு விழாவில் 4-ம் ஆண்டு மாணவி பிரியதர்ஷினி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசியர் ஒருங்கினைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், ராமலட்சுமி மற்றும் துறைப்பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் இணைந்து செய்திருந்தனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.
    • 3, 4 ஆகிய தேதிகளில் சதுரகிரி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்காக கடந்த 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை நான்கு நாட்கள் சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கிடையே பருவநிலை மாற்றம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 3, 4 ஆகிய தேதிகளில் சதுரகிரி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தைப்பூசம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்காக பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இன்று பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது. போலீசார் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனைவரும் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமிக்கு அதிகாலை முதலே பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் சிறப்பு விரிவுரை நிகழ்ச்சி நடந்தது.
    • உதவிப்பேராசிரியை ஜேஸ்மின் பாஸ்டினா இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நிறும செயலரியல் துறை ''உன்னுள் இருக்கும் திறன்'' என்ற தலைப்பில் சிறப்பு விரிவுரை நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்வின் நோக்கமானது மாணவர்களிடையே திறனை மேம்படுத்து வதாகும்.

    விருதுநகர் வன்னிய பெருமாள் கல்லூரி முனைவர் காந்திமதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், மாணவர்கள் தன்னம்பிக்கை மற்றும் திறனை வளர்ப்பதின் முக்கியத்துவம் பற்றியும், தலைமைத்துவ திறனை வளர்க்கும் வழிமுறைகளையும் எடுத்துரைத்தார்.

    சிறந்த குழுவை அமைக்கும் முறை, குழு தலைவரின் தகுதிகள் மற்றும் கூட்டாக செயல்படும் முறையைப் பற்றியும் எடுத்துரைத்தார். துறைத் தலைவர் செந்தில் குமார் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் விண்ணரசி ரெக்ஸ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

    உதவிப்பேராசிரியை சூரியா நன்றி கூறினார். உதவிப்பேராசிரியை ஜேஸ்மின் பாஸ்டினா இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

    • போலீஸ்காரர்-இளம்பெண்கள் உள்பட 6 பேர் மாயமானார்கள்.
    • இதுகுறித்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் மாணவனை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் ஆயுதப்படை யில் காவலராக பணி புரிபவர் விவேக் (வயது 30). இவரது மனைவி கற்குவேலாயி (29). பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் சூலக்கரை வ.உ.சி. நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    விவேக் தனது செல்போ னில் பல பெண்களுடன் பேசி வந்துள்ளார். இதனை கற்குவேலாயி கண்டித்துள்ளார். ஆனால் விவேக் அதனை கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆயுதப்படை அலுவலகத்திற்கு நேரில் சென்று கற்குவேலாயி புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் விவேக் திடீரென மாயமானார். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அய்யனார் காலனியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகள் பாண்டிச்செல்வி (23). கவரிங் நகை கடையில் வேலை பார்த்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி(45). இவரது மகள் அஸ்வினி (18). பிளஸ்-2 படித்து விட்டு பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று தண்ணீர் எடுத்து வருவதாக கூறிச்சென்றவர் மாயமானார். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருத்தங்கல் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி (23). இவருக்கு சக்தி அய்யனார் என்பவருடன் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    சம்பவத்தன்று குழந்தை களுடன் வெளியே சென்று வருவதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் வீரசெல்வி அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசியை சேர்ந்தவர் யாகப்பன்(49). இவரது 17 வயது மகள் சிவகாசி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் ஏற்கனவே மாய மாகி அதன்பிறகு கள்ளக்குறிச்சி யில் இருந்து போலீசார் மீட்டு வந்தனர்.

    இந்த நிலையில் சம்ப வத்தன்று வீட்டில் இருந்தவர் மாயமாகி விட்டார். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் லட்சுமியாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜமன்னார். இவரது மகள் ரமாதேவி(22). விருதுநகரில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ராஜமன்னார் வன்னியம்பட்டி போலீசில் அளித்துள்ள புகாரில், பொட்டல்பட்டியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் தனது மகளை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வந்துள்ளதாகவும், இதுபற்றி விசாரித்து மகளை மீட்டுத்தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை வலையபட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் மகாலட்சுமி(38). இவரது 17 வயது மகள் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு பெருங்குடி போலீசார் இருவரையும் எச்சரித்து அனுப்பினர்.

    இதையடுத்து மகளை அருப்புக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் அவர் அங்கிருந்து மாயமாகி விட்டார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் சூலக்கரை மேடு பகுதியை சேர்ந்தவர் மலர்கொடி.

    இவரது மகன் சிவசந்தோஷ் (12). 6ம் வகுப்பு படிக்கிறான். சம்பவத்தன்று வீட்டில் இருந்தவர் மாயமாகி விட்டான். எங்கு சென்றான்? என தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் மாணவனை தேடி வருகின்றனர்.

    • வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் மர்ம நபர்கள் கொள்ளையடித்து கொண்டு தப்பினர்.
    • போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள பணிக்கநேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி(40). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு புல் அறுக்கும் வேலைக்கு சென்றுவிட்டார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் ஆள்நடமாட்டம் இல்லாதபோது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் பீரோவை உடைத்த அவர்கள் அதில் இருந்த 6¼ பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பினர். மாலையில் வீடு திரும்பிய ஜெயலட்சுமி கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை, பணம் திருடுபோய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து காரியாபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணம் திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கொள்ளை சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்ட வெளியே செல்ல அச்சமடைந்துள்ளனர். எனவே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • விருதுநகர் மாவட்டத்தில் கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்கள் வருகிற 14-ந்தேதி வரை நடக்கிறது.
    • இதில் பங்கேற்று கோழிகளுக்கு தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளுமாறு கால்நடை வளர்ப்போர்களை கேட்டுக்கொள்கிறோம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு இலவசமாக காலத்திற்கு ஏற்றவாறு முகாம்கள் நடத்தி தடுப்பூசிப் பணியை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்திற்கு முன்னர் பிப்ரவரி மாதத்தில் வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் தற்போது கோழிகளை தாக்கும் வெள்ளைக் கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி முகாம்களை கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது.

    எனவே கோழிப்பண்ணையாளர்கள் 8 வார வயதிற்கு மேல் உள்ள கோழிகள் மற்றும் குஞ்சுகளுக்கு இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம். வருடத்திற்கு இருமுறை தடுப்பூசி செலுத்தி வந்தால் நோயை முற்றிலும் அகற்றி விடலாம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவ நிலையங்களிலும் மற்றும் துறை சார்பில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களிலும் தடுப்பூசிப்பணி நடைபெறுகிறது. தகுந்த முன்னறிவிப்போடு ஊராட்சி மன்றங்களின் ஒத்துழைப்போடு இந்த முகாமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு இலவச வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்களில் பங்கேற்று கோழிகளுக்கு தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளுமாறு கால்நடை வளர்ப்போர்களை கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெண் பயணி தவறவிட்ட பணத்தை ஆட்டோ டிரைவர் போலீசில் ஒப்படைத்தார்.
    • தவறவிட்ட பணப்பையை நேர்மையாக ஒப்ப டைத்த ஆட்டோ டிரை வர் பாண்டியை போலீசார் பாராட்டி சால்வை அணி வித்தனர்.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ரெங்கநாதன் என்பவரின் மனைவி லதா. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் துக்கம் விசாரிக்க மதுரைக்கு வந்துள்ளார். அவர் தனது உறவினர் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றுவிட்டு திரும்பிய போது அவர் வைத்திருந்த பணப்பையை ஆட்ேடாவில் விட்டு விட்டுச் சென்று விட்டார்.

    பின்னர் அவர் வீட்டுக்கு சென்றதும் ஆட்டோவில் பணப்பையை தவறவிட்டது நினைவுக்கு வந்தது. ஆனால் அவர் பயணம் செய்த ஆட்டோவின் பதிவு எண் பற்றி எதுவும் அவருக்கு தெரியவில்லை. அதனால் எப்படி ஆட்டோவை கண்டு பிடிப்பது? என குழப்பம் அடைந்தார்.

    இந்த நிலையில் பயணி யின் பணப்பையை கண்டெ டுத்த ஆட்டோ டிரைவர் பாண்டி என்பவர் அதனை எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் ஒப்படைத்தார். அதனை போலீசார் சோதனை செய்து பார்த்த போது அதில் ஒரு ஏ.டி.எம். கார்டு மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது. போலீசார் ஏ.டி.எம். கார்டு மூலம் ஆய்வு செய்து ஆட்டோவில் பயணம் செய்த பெண் பயணியின் முகவரியை கண்டுபிடித்தனர். பின்னர் பணத்தை தவற விட்ட பயணிக்கு தகவல் தெரி வித்தனர்.

    அதன்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு வந்த அந்த அந்த பயணியின் கணவர் ரெங்கநாதனிடம் போலீசார் முன்னிலையில் ஆட்டோ டிரைவர் பணப்பையை ஒப்படைத்தார். பெண் பயணி தவறவிட்ட பணப்பையை நேர்மையாக ஒப்ப டைத்த ஆட்டோ டிரை வர் பாண்டியை போலீசார் பாராட்டி சால்வை அணிவித்தனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கணினி அறிவியல் துறை மாணவர்களுக்கான கருத்தரங்கு நடந்தது.
    • உதவிப்பேராசிரியர்- கணினி அறிவியல் துறையில் பணிபுரியும் பாலமுருகன் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி கணினி அறிவியல் துறை சார்பில் ''வாய்ப்புக்களுக்கான பாதைகள்'' என்ற தலைப்பில் மாணவர்களை நெறிப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் சிவகாசி யூனோபி டெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குநரும், முன்னாள் மாணவருமான விஜயபாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில் , கணினி அறிவியல் துறையில் உள்ள வேலைவாய்ப்பை எளிதில் எவ்வாறு தெரிந்து கொள்வது? என்பது குறித்த வழிமுறைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். தகவல் தொழில்நுட்ப பிரிவில் வெவ்வேறான பதவிகள் குறித்து உரையாற்றினார். மாணவர்களிடம் எழுந்த கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

    கணினி அறிவியல் துறை இளங்கலை 3-ம் ஆண்டு மாணவி சகாய மேரி வரவேற்றார். இளங்கலை 3-ம் ஆண்டு மாணவர் சூர்யா நன்றி கூறினார். இதில் இளங்கலை 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு பயிலும் கணினி அறிவியல் துறை மாணவ- மாணவிகள் 160 பேர் கலந்து கொண்டனர்.

    கணினி அறிவியல் துறை பிரியா, பாராட்டுரை வழங்கினார். முதல்வர் பாலமுருகன் முதன்மை உரை ஆற்றினார். உதவிப்பேராசிரியர்- கணினி அறிவியல் துறையில் பணிபுரியும் பாலமுருகன் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

    ×