என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ஆவரம்பட்டி காளியம்மன் கோவில் அருகே நடந்த போராட்டத்திற்கு சரவணன், வீரமணி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளைத்தில் 2018-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம், ெரயில்வே மேம்பால பணி ஆகியவை ெதாடங்கப்பட்டது. 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும் இந்த பணிகள் நிறைவடையாமல் உள்ளது.

    இந்த பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், இந்த பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை சரி செய்ய கோரியும், 3 மடங்கு உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரியும், சொத்து வரி விகிதத்தை குறைக்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் பிப்ரவரி 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சோழராஜா பட்டியில் நடந்த போராட்டத்திற்கு செல்வராஜ், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆவரம்பட்டி காளியம்மன் கோவில் அருகே நடந்த போராட்டத்திற்கு சரவணன், வீரமணி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    சம்பந்தபுரம் போஸ் பார்க் ஆட்டோ நிறுத்தம் அருகே நடந்த போராட்டத்திற்கு முருகானந்தம், பால மஸ்தான் தலைமை தாங்கினர். வடக்கு மலையடிப்பட்டி 4 முக்கில் நடந்த போராட்டத்திற்கு செல்வம், சன்னாசி தலைமை தாங்கினர். தாலுகா அலுவலகம் அருகே நடந்த போராட்டத்திற்கு அய்யனார், குருசாமி தலைமை தாங்கினர்.

    எம்.ஜி.ஆர். நகரில் நடந்த போராட்டத்திற்கு செந்தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். தெற்கு அழகை நகரில் நடந்த போராட்டத்திற்கு சந்திரன் தலைமை தாங்கினார். ஆர். ஆர்.நகரில் நடந்த போராட்டத்திற்கு பொன்னுசாமி, கார்த்திகா தலைமை தாங்கினர்.

    முனியம்மன் பொட்டலில் நடந்த போராட்டத்திற்கு மாரிமுத்து, பழனிச்சாமி தலைமை தாங்கினர். பட்டுக்கோட்டை மன்றம் அருகே நடந்த போராட்டத்திற்கு ஜானகி தலைமை தாங்கினார். மதுரை கடை தெருவில் நடந்த போராட்டத்திற்கு ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சின்ன சுரக்காய் பட்டியில் நடந்த போராட்டத்திற்கு ஜெகன், மைதிலி தலைமை தாங்கினர்.

    மாவட்ட செயலாளர் அர்ஜூனன், மாநில குழு உறுப்பினர் மகா லட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி, மாவட்ட குழு உறுப்பினர் ராமர், நகர செயலாளர் மாரியப்பன், மூத்தநிர்வாகி கணேசன், நகர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், பிரசாந்த் ஆகியோர் பேசினர்.

    • அருப்புக்கோட்டை அருகே அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • பள்ளியில் போதிய வசதிகள் செய்யப்படாததால் மாணவ-மாணவிகள் கடும் சிரமமடைந்து வந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியை அடுத்துள்ள ஆமணக்கு நத்தத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டாரப்பகுதிகளை சேர்ந்த 75 மாணவ-மாணவிகள் படித்து வரு கின்றனர். இந்தப்பள்ளியில் போதிய வசதிகள் செய்யப்படாததால் மாணவ-மாணவிகள் கடும் சிரமமடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இருந்தும், மரத்தடியில் மாணவ-மாணவிகளை அமர வைத்து பாடம் நடத்துவதாகவும், பள்ளி வளாகத்திலேயே சுகாதாரமற்ற முறையில் சத்துணவு சமைத்து வினியோகிப்பதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக பள்ளி தலைமையாசிரியரிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

    இதை கண்டித்து இன்று காலை வகுப்புகளை புறக்கணித்த மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோருடன் பள்ளி முன்புள்ள பந்தல்குடி சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    மறியல் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மறியலால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • ராஜபாளையம் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • 11-வது நாளான இன்று கண்களில் கருப்பு துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியில் 400-க்கு மேற்பட்ட விசைத்தறிக்கூடங்கள் உள்ளன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கூலி உயர்வு மற்றும் போனஸ், விடுப்பு சம்பளம் வழங்க கோரி போடப்பட்ட ஒப்பந்தம் முடிவடைந்தது.

    கடந்த 2 ஆண்டு களாக புதிய ஒப்பந்தம் போடாப்படாமல் விசைத் தறி உரிமை யாளர்கள் காலம் தாழ்த்தி வருவதாக புகார் கூறி கடந்த 30-ந்தேதி முதல் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று முன்தினம் கஞ்சித் தொட்டி திறந்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்த வருமாறு உரிமையாளர் தரப்பிலும், தொழிற்சங்கம் தரப்பிலும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்த பேச்சுவார்த்தைக்கு விருதுநகர் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மின்னல் கொடி, ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் கோதண்டராமன், தள வாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன் தலைமை தாங்கினர்.

    அப்ேபாது உரிமையாளர் தரப்பில் இருந்து பேச்சு வார்த்தைக்கு யாரும் வராததால் தொழி்ற் சங்கத்தினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் பேச்சுவார்த்தை ேதால்வியடைந்தது.

    ெதாழிற்சங்கத்தினர் அதிகாரியிடம் கூறுகையில், எங்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்க வழி செய்ய வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்ட போராட்டம் தீவிரமடையும் என்றனர்.

    இந்த நிலையில் 11-வது நாளான இன்று செட்டியார்பட்டி அரசரடி பஸ் நிலையம் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது.
    • கல்லூரியின் தாளாளர் ஆர். சோலைசாமி, இயக்குநர் விக்ேனசுவரி அருண்குமார், முதல்வர் செந்தில்குமார் ஆகியோர் பாராட்டினர்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி, ெசன்னையில் உள்ள மத்திய அரசின் தேசிய தொழில் நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கல்லூரியின் சார்பில் டீன் மாரிச்சாமி, என்.ஐ.டி.டி.டி.ஆர். சார்பில் அதன் இயக்குநர் உஷா நடேசன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    சென்னையில் நடந்த இந்த நிகழ்வில் சென்னை என்.ஐ.டி.டி.டி.ஆர். முனைவர்கள் ரேணுகா தேவி, ஜனார்த்தனன், ராஜசேகரன், கிரிதரன் கல்லூரியின் ஐ.கியூ.ஏ.சி. பேராசிரியர். பால சுப்பிரமணியன், ஒருங்கி ணைப்பாளர் பிச்சிப்பூ, ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்த ஒப்பந்தத்தின் மூலம் கல்வியில் ஒத்துழைப்பு தருதல், ஆராய்ச்சிக்கான ஒத்துழைப்பு ஆகியவை பெறப்பட்டு இதன் மூலம் ஆசிரியர்கள் தங்களுடைய ஆராய்ச்சிகளை என்.ஐ.டி.டி.டி.ஆர்.-ன் ஆய்வக வசதிகள், பயன்பாடு, ஆசிரியர் மேம்பாட்டுத் திறன் பயிற்சி, அரசின் நிதி பெறும் செயல்முறைத் திட்டங்கள் மற்றும் ஆய்வுகள், காப்புரிமை, இண்டர்ன்ஷிப் ஆகிய வற்றைப் பெறமுடியும்.

    மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஆன்லைன் பாடங்களை இலவசமாக பதிவு செய்து கற்றுக் கொள்ளலாம். இந்த பு ரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்விற்கு முயற்சி செய்த பேராசிரியர்களை கல்லூரியின் தாளாளர் ஆர். சோலைசாமி, இயக்குநர் விக்ேனசுவரி அருண்குமார், முதல்வர் செந்தில்குமார் ஆகியோர் பாராட்டினர்.

    • அரசன் கணேசன் பாலிடெக்னிக் விளையாட்டு விழா நடந்தது.
    • விரிவுரையாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியின் 41-வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. தாளாளர் கணேஷ்குமார், நிர்வாகக் குழு உறுப்பினர் கிரிதரன் ஆகியோர் பேசினர். முதல்வர் நந்தகுமார் வரவேற்றார். விளையாட்டு வீரரும், ஹர்ப்ஸ் இந்தியா மற்றும் ட்ரக்ஸ் இந்தியா நிர்வாக இயக்குநருமான ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். 2022-23-ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது மற்றும் கேடயத்தை மின்னியல்துறை மாணவர் முகேஷ்பாண்டியனும், தனி நபர் கோப்பைக்கான பரிசை அச்சுத்துறை மாணவர் அகமத் பிலாலும் பெற்றனர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை 77 புள்ளிகள் பெற்று "டைகர் அணி" வீரர்கள் பெற்றனர். கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் மதனகோபால் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். அமைப்பியல் துறை விரிவுரையாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.

    • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர்(பொறுப்பு) ரவிகுமார் தலைமையில் நடந்தது. இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான நவீன செயற்கைகால்களையும், செவித்திறன் குறைபாடுடைய 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26 ஆயிரம் மதிப்பிலான பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கைப்பேசிகளையும் கலெக்டர்(பொறுப்பு) ரவிகுமார் வழங்கினார்.

    மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 1500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 பேரை தேடிவருகின்றனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக சர்வ சாதாரணமாக ரேசன் அரிசி கடத்தல் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் போதிய பலனில்லை. மாதந்தோறும் பல்லாயிரக்கணக்கான டன் ரேசன் அரிசி சட்ட விரோதமாக ஆலை களுக்கும், வெளிமா நிலங்களுக்கும் கடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் சிவகாசி பஸ் நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்தபோது அதில் இருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீசார் காரை சோதனையிட்டபோது அதில் 1500 கிலோ ரேசன் அரிசி கடத்துவது தெரியவந்தது. அதனையும், காரையும் பறிமுதல் செய்த போலீசார் உணவு கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்தனர். போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 பேரை தேடிவருகின்றனர்.

    • பாலவநத்தம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது.
    • பாலவநத்தம்-அருப்புக்கோட்டை சாலையில் திரண்ட ஒரு தரப்பைச் சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலவநத்தம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உரிமை கொண்டாடுவது தொடர்பாக 2 சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு சில ஆண்டுகளாக பிரச்சினை நிலவி வருகிறது.

    இந்தநிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு களரி திருவிழாவை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் மறுப்பு தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக அருப்புக்கோட்டையில் வருவாய் கோட்டாட்சியர் கல்யாண்குமார் தலைமையில் நேற்று இருதரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    அப்போது மாசி களரி விழாவை கொண்டாட அரசு தரப்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் தங்கள் ஊர் மக்களிடம் பேசி முடிவை தெரிவிப்பதாக கூறிவிட்டுச் சென்றனர்.

    நேற்று இரவு பாலவ நத்தம்-அருப்புக்கோட்டை சாலையில் திரண்ட ஒரு தரப்பைச் சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்த அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி. காருன்காரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்று போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

    இந்தநிலையில் இன்று காலை நேற்று இரவு மறியல் செய்தவர்கள் மீண்டும் பாலவநத்தம் பஸ் நிறுத்தத்தில் திரண்டனர். பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் திரண்டு கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

    உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை கலைந்து போகுமாறு எச்சரித்தனர். ஆனாலும் தொடர்ந்து அங்கு அதிகளவில் கூட்டம் கூடியது. இதையடுத்து அசம்பாவித சம்பவம் எதுவும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலை மறியலில் ஈடுபட முயன்ற பெண்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அல்லம்பட்டி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த கைது நடவடிக்கையால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • நாய் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அது இறந்து பல நாட்கள் இருக்கலாம் என தெரிகிறது.
    • தொட்டிக்குள் கிடந்த நாயை அகற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட புதுக்கோட்டை பஞ்சாயத்து பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 4 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிள்ளையார்கோவில் அருகில் உள்ள நீர்த்தேக்க தொட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் கட்டப்பட்டது.

    சுமார் 60 அடி உயரம் கொண்ட இந்த நீர்தேக்க தொட்டியில் 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சேமித்து வைக்கலாம். இந்த தொட்டியில் இருந்து அந்த பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    பஞ்சாயத்து நிர்வாகத்தின் உத்தரவுப்படி இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய அதன் ஆபரேட்டர் கடந்த சனிக்கிழமை தண்ணீர் ஏற்றாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று காலை தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய வந்தபோது துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் அச்சம் அடைந்த டேங்க் ஆபரேட்டர் இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. போலீசார் விரைந்து வந்து தொட்டியின் மீது ஏறி பார்த்தபோது அதற்குள் நாய் இறந்து கிடந்துள்ளது. நாய் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அது இறந்து பல நாட்கள் இருக்கலாம் என தெரிகிறது.

    இதுகுறித்து போலீசார், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மேல்நிலை நீர்தேக்க தொட்டியை ஆய்வு செய்தனர்.

    தொட்டிக்குள் கிடந்த நாயை அகற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து பஞ்சாயத்து தலைவர் காளீஸ்வரி எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.

    நாயை கொன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்குள் யாரேனும் போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முதல் மகள் மோனிகாமேரியை தாக்கி வீட்டில் அடைத்து வைத்திருப்பது தெரிய வந்தது.
    • கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையில் 2 மகள்களை தாய் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் அல்லம் பட்டியில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அந்தோணி ராஜ். இவரது மனைவி ஜான்சிராணி(வயது 35). இவர்களுக்கு மோனிகா மேரி(12), ரித்திகாமேரி(9) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக அந்தோணிராஜ் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. கணவரின் நடவடிக்கையால் விரக்தியடைந்த ஜான்சிராணி 2 மகள்களை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

    அதன்படி நேற்று வீட்டில் இருந்தபோது ஜான்சிராணி தனது முதல் மகள் மோனிகாமேரியை சுத்தியலால் தலையில் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் மயங்கினார்.

    பின்னர் கதவை பூட்டிவிட்டு 2-வது மகள் ரித்திகாமேரியுடன் வெளியே சென்ற ஜான்சிராணி விருதுநகர் மேம்பாலத்துக்கு வந்தார். அங்கு மேலே இருந்து தனது மகளை கீழே தள்ளிவிட்டு பின்னர் அவரும் குதித்தார். இதில் தாய்-மகள் படுகாயமடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுதொடர்பாக விருதுநகர் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தியபோது, முதல் மகள் மோனிகாமேரியை தாக்கி வீட்டில் அடைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு சென்று மோனிகாமேரியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி சுதாராணி கொடுத்த புகாரின் பேரில் ஜான்சிராணி மீது கொலை முயற்சி செய்தது, தற்கொலைக்கு முயன்றது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையில் 2 மகள்களை தாய் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 9 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பல்வேறு கட்டங்களில் விசைத்தறி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்து விட்டது

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சேலை உற்பத்தி செய்யும் தொழிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஒப்பந்தம் போடப்பட்டு அதன் அடிப்படையில் கூலி (சம்பளம்) வழங்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் 2021-23 ஆண்டுக்கு கூலி ஒப்பந்தம் செய்வதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் முன்வராத காரணத்தினால் விசைத்தறி தொழிலாளர்கள் தங்களுக்கு 75 சதவீதம் சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும். 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதனை வலியுறுத்தி கடந்த 9 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது தொடர்பாக பல்வேறு கட்டங்களில் விசைத்தறி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்து விட்டது. இதைத்தொடர்ந்து தற்போது போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. ஏ.ஜ.டி.யு.சி. வட்டார தலைவர்கள் அய்யனார், ராசு தலைமையில் செட்டியார்பட்டி கிராமநிர்வாக அலுவலகம் முன்பு இ்ன்று கஞ்சி தொட்டி திறந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    வாழ்வாதார பிரச்சினை என்பதால் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தி கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று விசைத்தறி தொழிலாளர்கள் வேண்டு கோள்விடுத்துள்ளனர்.

    • ராஜபாளையத்தில் கிராமப்புற பண்பாட்டு போட்டிகள் நடந்தது.
    • போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.

    ராஜபாளையம்

    விவேகானந்தக் கேந்திரமும், ராமச்சந்திரராஜா அறக்கட்டளையின் சார்பில் இயங்கும் ராஜபாளையம் விவேகானந்த கேந்திர கிளையும் இணைந்து விருதுநகர் மாவட்ட அளவில் கிராமப்புற பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பண்பாட்டுப்போட்டிகளை அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. கிளைத் தலைவர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்திராஜா தலைமை தாங்கினார். ராமச்சந்திரராஜா குருகுல தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்திராஜா போட்டிகளைத் தொடங்கி வைத்தார். கேந்திரக்கிளைப் பொருளாளர் ரமேஷ் வரவேற்றார். விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் பேச்சியப்பன் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு இடையேயான ஒப்பித்தல், பேச்சு, ஓவியம், நினைவாற்றல், இசை, வினாடி-வினா போட்டிகளின் விவரங்களை கூறி நடுவர்களை அறிமுகப்படுத்தினார். 32 பள்ளிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். அவர்களில் 80 மாணவ மாணவியர்கள் பரிசுகள் பெற்றனர். கோவில்பட்டி கேந்திர கிளை ஒருங்கிணைப்பாளர் பரமகுரு ேபசினார்.

    போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகள் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் மாநில அளவில் நடைபெற இருக்கும் போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றனர். அறக்கட்டளை உறுப்பினர்கள் ராம்விஷ்ணு ராஜா, ராம்வெங்கட் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். கிளைச் செயலர் மாரியப்பன் நன்றி கூறினார்.

    ×