என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசன் கணேசன் பாலிடெக்னிக் விளையாட்டு விழா
- அரசன் கணேசன் பாலிடெக்னிக் விளையாட்டு விழா நடந்தது.
- விரிவுரையாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.
சிவகாசி
சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியின் 41-வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. தாளாளர் கணேஷ்குமார், நிர்வாகக் குழு உறுப்பினர் கிரிதரன் ஆகியோர் பேசினர். முதல்வர் நந்தகுமார் வரவேற்றார். விளையாட்டு வீரரும், ஹர்ப்ஸ் இந்தியா மற்றும் ட்ரக்ஸ் இந்தியா நிர்வாக இயக்குநருமான ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். 2022-23-ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது மற்றும் கேடயத்தை மின்னியல்துறை மாணவர் முகேஷ்பாண்டியனும், தனி நபர் கோப்பைக்கான பரிசை அச்சுத்துறை மாணவர் அகமத் பிலாலும் பெற்றனர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை 77 புள்ளிகள் பெற்று "டைகர் அணி" வீரர்கள் பெற்றனர். கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் மதனகோபால் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். அமைப்பியல் துறை விரிவுரையாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.






