என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயிகளை தாக்கி கொலை மிரட்டல்
- ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயிகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வனத்துறை ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- இதனால் விவசாய பணிகளை செய்ய முடியாமல் பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுக்கம் மறவர் தெருவை சேர்ந்தவர் ராமர். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் செண்பகதோப்பு வனப்பகுதி உள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராமர், அவரது சகோதரர் லட்சுமணன் மற்றும் உறவினர் தோட்டத்திற்கு சென்றுள்ளனர். அங்கு 3 பேரும் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது சீருடை அணியாமல் வந்த வனத்துறை ஊழியர்கள் 3 பேர் செல்போனில் வீடியோ எடுத்ததோடு தரக்குறைவாக பேசி ராமர் உள்பட 3 பேர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராமர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த
நீதிமன்றம் விவசாயிகள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய வனத்துறை ஊழியர்கள் பாரதி, ஜெயக்குமார், கடற்கரைவேல் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வனப்பகுதியில் செல்ல பொதுமக்களுக்கு வனத்துறை கடும் கட்டுப்பா டுகளை விதித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகதோப்பு பகுதியில் ஏராளமான விவசாய தோட்டம் உள்ளது. இங்கு செல்லகூட விவசாயிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. இதனால் விவசாய பணிகளை செய்ய முடியாமல் பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.






