வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் மர்ம நபர்கள் கொள்ளையடித்து கொண்டு தப்பினர். போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள பணிக்கநேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி(40). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு புல் அறுக்கும் வேலைக்கு சென்றுவிட்டார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் ஆள்நடமாட்டம் இல்லாதபோது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் பீரோவை உடைத்த அவர்கள் அதில் இருந்த 6¼ பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பினர். மாலையில் வீடு திரும்பிய ஜெயலட்சுமி கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை, பணம் திருடுபோய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து காரியாபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணம் திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கொள்ளை சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்ட வெளியே செல்ல அச்சமடைந்துள்ளனர். எனவே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com