பால் வியாபாரி உள்பட 3 பேர் தற்கொலை

விருதுநகர் அருகே பால் வியாபாரி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். அருப்புக்கோ ட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
பால் வியாபாரி உள்பட 3 பேர் தற்கொலை
Published on

விருதுநகர்

அருப்புக்கோட்டை காந்தி நகரை சேர்ந்தவர் ரத்தினகுமார்(வயது52), பால்வியாபாரி. இவருக்கு பூவை மீனாட்சி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

சம்பவத்தன்று மனைவி மற்றும் குழந்தைகள் வெளியூரில் உள்ள குலதெய்வ ோவிலுக்கு சென்றிருந்தனர். அப்போது வீட்டில் இருந்த ரத்தினகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருப்புக்கோ ட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

திருத்தங்கல் ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (71). நோய் பாதிப்பு காரணமாக வாழ்க்கையில் விரக்திய டைந்த இவர், சம்பவத்தன்று தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய அவரை சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்தோணிராஜ் பரிதாபமாக இறந்தார்.

சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்தவர் மகாரா ஜன்(34). இவர் மதுகுடிக்க அடிக்கடி மனைவி விஜயசுதாவிடம் பணம் கேட்டு வந்தார். இதனால் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்றும் மது குடிக்க மகாராஜன் பணம் கேட்டார். ஆனால் மனைவி தர மறுத்து விட்டார். இதனால் விரக்தியடைந்த மகாராஜன் வீட்டின் தனி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com