என் மலர்
விருதுநகர்
- வருகிற 29-ந் தேதி முதல் வாரச்சந்தை செயல்படும்.
- ஊராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.இங்கு அரசு மருத்துவமனை, வங்கிகள், காவல் நிலையம், யூனியன் அலுவலகம், தொடக்க கல்வி அலுவலகம், வேளாண்மை அலுவலகம் மற்றும் பள்ளிக்கூடம் என பல்வேறு முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
நாள்தோறும் பல்வேறு கிராமங்களில் இருந்து நரிக்குடி பகுதிக்கு ஆயிரக் கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் தற்போது வரை வீரசோழனில் தான் வாரச் சந்தை செயல்பட்டு வருகிறது. இதனால் அங்கு செல்வதற்கு நரிக்குடிக்கு வந்து தான் பேருந்து மாறி செல்ல வேண்டி உள்ளது.
இந்த நிலையில் நரிக்குடி பகுதியிலும் வாரச்சந்தை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்திலும் வாரச்சந்தை அமைப்பது குறித்து 7-வது வார்டு கவுன்சிலர் சரளாதேவி போஸ் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தார்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென நரிக்குடி யூனியன் சேர்மன் தரப்பிலும், அதிகாரிகள் தரப்பிலும் தெரிவிக்கப் பட்டது. இந்த நிலையில் நரிக்குடி மருதுபாண்டியர் சத்திரம் மற்றும் அழகிய மீனாள் ்கோவில் அருகே வருகிற 29-ந் தேதி முதல் வாரந்தோறும் வியாழக் கிழமையன்று வார சந்தை செயல்படுமென நரிக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முத்துமாரி காளீஸ்வரன் தெரிவித் துள்ளார்.
இந்த வாய்ப்பினை பொது மக்களும், வியா பாரிகளும், விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நரிக்குடி ஊராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
வாரச்சந்தை அமைக்க நடவடிக்கை எடுத்த ஊராட்சி மன்றத்தலைவர் முத்துமாரி காளீஸ்வ ரனுக்கும், வாரச்சந்தை அமைக்க வலியுறுத்தி வந்த கவுன்சிலர் சரளாதேவிக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
- 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 3 பேர் கைதானார்கள்.
- போலீசார் ரோந்து சென்றனர்.
விருதுநகர்
சூலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 2 பேரை பிடித்து சோதனையிட்டதில், அவர்கள் வைத்திருந்த பையில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில், கஞ்சா கடத்தியது தூத்துக்கு டி மாவட்டம் சிவகளை மண்கோட்ட புரத்தை சேர்ந்த ராஜூ என்ற ராஜபாண்டி (வயது29), சேலம் கீழநாயக்கன் பட்டியை சேர்ந்த கோபால கிருஷ்ணன்(23) என தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து கஞ்சா கடத்தலில் மேலும் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை டவுன் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பெரிய புளியம்பட்டி முள் காட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தவரை பிடித்து விசரித்தபோது, கஞ்சா விற்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர் விசாரணையில், அந்த வாலிபர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள முத்தனம்பட்டியை சேர்ந்த வினோத்குமார் (22) என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
- பிளஸ்-1 மாணவிகள், வாலிபர் திடீரென மாயமானார்கள்.
- பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகே உள்ள வாழ்வாங்கி கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி பந்தல்கு டியில் உள்ள அரசு பள்ளி யில் பிளஸ்-1 படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற அந்த மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதேபோல் அதே வகுப்பறையில் படிக்கும் உடையநாதபுரத்தை சேர்ந்த மாணவியும் வீடு திரும்பாமல் மாயமானார். 2 மாணவிகள் மாயமானது தொடர்பாக பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாலிபர்
சிவகாசி தெய்வானை நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார்(32). இவரும் அதே பகுதியை சேர்ந்த உமா மகேஸ்வரி(22) ஆகியோர் கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற சதீஷ்குமார் அதன் பின்பு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- நரிக்குடி கிராமத்தில் சக்திவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- அன்னதானம் வழங்கப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி கிராமத்தில் சக்திவிநாயகர், அழகிய மீனாள் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி கிருதுமால் நதியில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பூர்ணாகுதி, தீபாராதனை,புண்யாக வாசனம், கோ, லெட்சுமி பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
- ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்தும் பணிகள் நடந்து வருகிறது.
- இந்தப் பணிகளை தங்கப் பாண்டியன் எம்.எல்.ஏ நேரடியாக ஆய்வு செய்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தென்காசி ரோட்டில் உள்ள பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவ மனையை ரூ.40 கோடி மதிப்பீட்டில் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிக்கு இணையாக தரம் உயர்த்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பணிகளை தங்கப் பாண்டியன் எம்.எல்.ஏ நேரடியாக ஆய்வு செய்தார்.
கட்டுமான பொருட்கள் தரமாக உள்ளதா?, கான்கீரிட் பில்லர் கம்பிகள் தரமாக உள்ளதா? என அவர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
ராஜபாளையம் தொகுதி யின் வளர்ச்சிக்காக தாமிர பரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் மற்றும் ெரயில்வே மேம்பால திட்டம் போன்ற திட்டங்கள் எவ்வாறு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதோ அதுபோல் ராஜபாளையம் தொகுதி மக்கள் பாளையங்கோட்டை ஆஸ்பத்திரிக்கோ, மதுரை ஆஸ்பத்திரிக்கோ அலையாமல் இருப்பதற்காக அரசு ஆஸ்பத்திரியை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் .
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிழ்ச்சியில் தலைமை மருத்துவர் மாரியப்பன், பொது பணித்துறை உதவி செயற்பொறியாளர் பரமசிவன், உதவிப்பொறியாளர் பால சுப்பிரமணியன், சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் ராஜசோழன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- கட்டிட வரைப்பட அனுமதிக்கு ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
- லஞ்சம் கொடுக்க விரும்பாத பொன்பாப்பா பாண்டி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் பகுதியை சேர்ந்தவர் பொன்பாப்பா பாண்டி. இவர் தனக்கு சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்ட திட்டமிட்டார். இதற்காக கட்டிட வரைப்பட அனுமதி பெற ஊராட்சிமன்ற அலுவலகத்தை நாடினார்.
அப்போது கட்டிட வரைப்பட அனுமதிக்கு ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பொன்பாப்பா பாண்டி இது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த அறிவுறுத்தலின் படி ரசாயனம் தடவிய பணத்துடன் இன்று காலை கீழராஜகுலராமன் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பொன்பாப்பா பாண்டி சென்றார். அங்கு ஊராட்சி மன்ற தலைவர் காளி முத்துவை சந்தித்து லஞ்ச பணத்தை கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது அதே பகுதியை சேர்ந்த தாமரைசெல்வன் என தெரியவந்தது.
- வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது48). இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் கொப்புசித்தம்பட்டியில் ஊராட்சி மன்றத்தலைவராக உள்ளார்.
விஜயலட்சுமி பந்தல்குடியில் வசித்து வருவதால் கொப்புசித்தம்பட்டியில் உள்ள அவர்களுக்கு சொந்தமான வீட்டில் உறவினர் பஞ்சவர்ணம் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று பஞ்சவர்ணம் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் 3 காலி மது பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி தீ வைத்து வீட்டின் மீது சரமாரியாக வீசிவிட்டு தப்பினார். இதில் பெட்ரோல் வெடிகுண்டுகள் வீட்டின் கதவு முன்பு மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. கதவு, ஜன்னல் போன்றவை எரிந்து சேதமாயின.
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக ஜெய்சங்கர், அருப்புக்கோட்டை போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி அங்கு சிதறிக்கிடந்த வெடி குண்டுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது அதே பகுதியை சேர்ந்த தாமரைசெல்வன் என தெரியவந்தது.
கடந்த ஊராட்சி மன்ற தேர்தலின்போது இவரது மனைவி தோல்வியடைந்தார். இது தொடர்பாக விஜயலட்சுமி தரப்புக்கும், தாமரைசெல்வன் தரப்புக்கும் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக விஜய லட்சுமிக்கு சொந்தமான வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தாமரை செல்வனை போலீசார் தேடி வருகின்றனர்.
வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கவர்னர் மீது காங்கிரஸ் புகார் மனு கொடுத்தனர்.
- கவர்னர் ஆர்.என்.ரவி மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர்
விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கி ரஸ் முன்னாள் தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை யிலான காங்கிரசார், விருது நகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டம் வடலூர் ரெயில் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சி யில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசும்போது, சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். அறியாமை மற்றும் காழ்ப்பு ணர்ச்சி காரணமாகவே சிலர் எதிர்க்கிறார்கள்.
சனாதன தர்மத்தை ஏற்றாலும், எதிர்த்தாலும் அவர்களும் சனாதன தர்மத்திற்குள்ளேயே இருப்பார்கள். உங்களில் என்னையும், என்னில் உங்களையும் காண்பது தான் சனாதன தர்மம்.
யார் வேண்டுமானாலும் எந்த மார்க்கத்தை வேண்டு மானாலும் பின்பற்றலாம் என்ற நிலை இருந்தது என கருத்து தெரிவித்திருந்தார். இதன் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத் துக்கு எதிராக உண்மைக்கு புறம்பான கருத்தை பதிவிட்டிருப்பதும் சமத்து வம், சமதர்மம் நிறைந்த மக்களாட்சி முறையில் உயரிய பொறுப்பில் உள்ள ஒருவர் சர்ச்சையை ஏற்படுத் தும் வகையில் மதம் சார்ந்த கருத்துக்களை தெரிவித்தி ருப்பதும் சட்டப்படி குற்றமா கும். எனவே தமிழக கவர் னர் ஆர்.என்.ரவி மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- இளம்பெண், பிளஸ்-2 மாணவி உள்பட 3 பேர் மாயமானார்கள்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
திருச்சுழி அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்தவர் வில்வராணி(வயது40), இலுப்பைகுளம் நடுநிலைப்பள்ளியில் சத்துணவு பொறுப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர் வில்வராணியின் தங்கை வீட்டில் தங்கி திருச்சுழி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இந்த நிலையில் வெளியே செல்வதாக கூறிச்சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து நரிக்குடி போலீஸ் நிலையத்தில் வில்வராணி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கட்டையதேவன் பட்டியை சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி முத்து லட்சுமி(27). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. சிவா திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதனால் முத்துலட்சுமி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.
அங்கிருந்த அவர் குழந்தைகளை விட்டுவிட்டு மாயமானார். எங்கு சென்றார் என தெரிய வில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. மகளை கண்டுபிடித்து தருமாறு முத்துலட்சுமியின் தந்தை கண்ணன், நத்தம்பட்டி போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துலட்சுமியை தேடி வருகின்றனர்.
சாத்தூர் அருகே உள்ள ஏ.புதுப்பட்டியை சேர்ந்தவர் சுப்பையா(80). வெளியே செல்வதாக கூறிச்சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவரது மகள் தமிழ்செல்வி அப்பையநாயக்கன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாற்றுத்திறனாளி பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகே உள்ள முத்து ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் ராதாகுமாரி (வயது55). இவருக்கு சில மாதங்களாக நோய் பாதிப்பு இருந்து வந்தது. இதனால் விரக்தியில் இருந்த அவர் வீட்டில் அளவுக்கு அதிகமாக மாத்திரையை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராதாகுமாரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிகிறத்தனர்.
இதுகுறித்து அவரது மகன் மணிராஜ் கொடுத்த புகாரின் பேரில் எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே பெரிய பேராளி வடக்கு தெருவை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் சாந்தி(வயது48). இவர் பிறவிலேயே மாற்றுத் திறனாளி. சமீபத்தில் இவரது தாய் இறந்தார். இதனால் தன்னை பராமரிக்க ஆள் இல்லை என நினைத்து சாந்தி விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் 2 முறை தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை காப்பாற்றினர்.
இந்தநிலையில் தந்தையும், சகோதரரும் வேலைக்கு சென்றிருந்தபோது சாந்தி உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் வந்து மீட்பதற்குள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்தில் வடிவேல் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் தர்மர்(வயது70). இவர் கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சாணி பவுடரை கரைத்து குடித்து மயங்கி கிடந்தார்.
உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபர்களை தாக்கி நகை பறிக்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
திருச்சுழி தாலுகா கட்டனாங்குளம் பகுதியை சேர்ந்தவர் அகத்தீஸ்வரன்(வயது42). இவர் பிள்ளையார்குளம் கல் குவாரியில் வேலை பார்த்து வருகிறார். இவர் பணியில் இருந்தபோது அங்கு வந்த கல்லங்குளம் பகுதியை சேர்ந்த சோனை, ராமச்சந்திரன் உள்பட 6பேர் பணம் கேட்டு அவரை மிரட்டினர்.
அப்போது முதலாளியிடம் சென்று பணம் கேளுங்கள் என்று அகத்தீஸ்வரன் அவர்களிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தங்களிடம் இருந்த கத்தியால் அகத்தீஸ்வரனை தாக்கினர்.
அதனை தடுக்க வந்த அகத்தீஸ்வரனின் சகோதரருக்கும் அடி-உதை விழுந்தது. மேலும் அவரிடம் இருந்த 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து ஏ.முக்குளம் போலீஸ் நிலையத்தில் அகத்தீஸ்வரன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மருத்துவநேரி பாலத்தில் நடைபாதைகள் சீரமைக்கப்பட்டது.
- அந்த நடை பாதைகளை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பயன்படுத்தி வருகிறார்கள்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் இருந்து புத்தூர் செல்லும் சாலையில் மருத்துவநேரி கண்மாய் உள்ளது. மிகப்பெரிய கண்மாயான இதன் நடுவே புத்தூர் செல்லும் சாலை உள்ளது. சமீபத்தில் தரைமட்ட ரோட்டை உயர்த்தி சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 பக்கமும் நடைபாதை களுடன் பாலம் அமைக்கப்பட்டது.
அதில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் நடைபாதைகள் சேதமடைந்ததால் அதனை அப்புறப்படுத்த வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கி டையே நடைபாதைகளை சீரமைத்து தரும்படி அந்தப் பகுதி மக்கள் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் மருத்துவநேரி பாலத்தின் இருபுறமும் உள்ள நடை பாதைகள் சீரமைக்கப்பட்டு பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டது. மேலும் மரக்கன்றுகளும் நட்டு வைக்கப்பட்டு பாலம் பொலிவுபடுத்தப்பட்டது. இதனால் அந்த நடை பாதைகளை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பயன்படுத்தி வருகிறார்கள்.






