திருச்சுழி நூலகத்திற்கு புத்தகங்கள் அன்பளிப்பு

திருச்சுழி நூலகத்திற்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.மாணவ,மாணவிகள், வாசகர்கள் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திருச்சுழி நூலகத்திற்கு புத்தகங்கள் அன்பளிப்பு
Published on

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி கிளை நூலகத்தில் அரசு பணிகளுக்கான பல்வேறு போட்டி தேர்வுகளுக்காக, மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் படித்து வருகின்றனர். போட்டித்தேர்வுக்காக படிக்கும் மாணவர்களுக்கு உதவிடும் பொருட்டு கிளை நூலகத்தின் நூலகர் மற்றும் வாசகர் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக திருச்சுழி கிளை நூலகத்திற்கு அருப்புக்கோட்டை ஜெயன்ட்ஸ் குழுவினர் மாணவர்களின் எதிர்கால நலன்கருதி நூல்களை அன்பளிப்பாக வழங்கினர்.

இந்த நிகழ்ச்சிக்கு அருப்புக்கோட்டை ஜெயண்ட்ஸ் குழுவின் தலைவர் வெள்ளையரெட்டி தலைமை தாங்கினார். திருச்சுழி கிளை நூலகத்தின் வாசகர் ஒருங்கிணைப்பாளர் சுந்தர் அழகேசன் முன்னிலை வகித்தார். நூலகரான பாஸ்கரனிடம் அருப்பக்கோட்டை ஜெயண்ட்ஸ் குழுவினர் ரூபாய் 4,000 மதிப்புள்ள போட்டித்தேர்வுக்கான பாடப்புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கினர். ஜெயண்ட்ஸ் குழுவின் இணைய அலுவலர் திருவண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் சிறப்புரையாற்றினார். ஜெயண்ட்ஸ் குழுவின் நிதிகளுக்கான இயக்குனர் காத்தமுத்து, பாக்கியராஜ், நூலக பணியாளர் மஞ்சுளா, போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ,மாணவிகள், வாசகர்கள் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com