என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள்- ஆட்டோ மோதல்; 3 பேர் படுகாயம்
- மோட்டார் சைக்கிள்-ஆட்டோ மோதல்; 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்
சாத்தூர் மேலகாந்தி நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது38).இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். ஆட்டோவில் சாத்தூரில் இருந்து சத்திரப்பட்டி நோக்கி சென்றார். அப்போது எதிர்திசையில் அமீர்பாளையம் கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த பரமசிவம் மகன் மாரிச்செல்வம்(21) மோட்டார் சைக்கிளில் மாசானம் மகன் அபிகுட்டியுடன்(21) வந்தார். மாரிச்செல்வம் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. பி.எஸ்.என்.எல். டவர் அருகே சர்வீஸ் ரோட்டில் வந்தபோது முன்னால் சென்ற காரை முந்த முயன்றார்.
அப்போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மாரிமுத்து ஆட்டோவின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






