என் மலர்
விழுப்புரம்
- 43 ஆண்டுகளாக போராடிய கட்சியில் தலைமை ஏற்க எனக்கு உரிமை இல்லையா?
- 7 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை கைப்பற்ற அன்புமணி முயற்சி செய்தார்.
தைலாபுரம்:
பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நிலவி வரும் கருத்து முரண்பாடு காரணமாக அன்புமணி ஆதரவாளர்களை நீக்கி புதிய பொறுப்பாளர்களை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் ராமதாசை சமாதானம் செய்யும் முயற்சியாக சந்தித்த அன்புமணி, 45 நிமிடம் சந்தித்த போதிலும் தோல்வியில் முடிந்தது.
இதனை தொடர்ந்து ஆடிட்டர் குருமூர்த்தி 3 மணிநேரம் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து சென்னை சென்ற ராமதாஸ் அங்கும் குருமூர்த்தியை சந்தித்ததாக தெரிவித்தார். பா.மக. நிறுவனர் ராமதாஸ் நீக்கும் பொறுப்பாளர்கள், கட்சி பொறுப்பில் தொடர்வார்கள் என அன்புமணி அறிக்கை வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே கட்சியின் பொருளாளராக இருந்த திலகபாமாவை நீக்கி அப்பொறுப்பில் சையத் மன்சூர் உசேனை ராமதாஸ் நியமனம் செய்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கட்சியின் வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவையின் தலைவராக இருந்த வக்கீல் பாலுவை பொறுப்பில் இருந்து நீக்கி, உயர்நீதிமன்ற வக்கீல் கோபுவை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்துள்ளார். மேலும் அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர்கள், தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நீக்கி வருகிறார்.
இந்த நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
43 ஆண்டுகளாக போராடிய கட்சியில் தலைமை ஏற்க எனக்கு உரிமை இல்லையா? அமைதி காத்திருந்தால் அன்புமணிக்கு அதிகாரம் கிடைத்திருக்கும். 7 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை கைப்பற்ற அன்புமணி முயற்சி செய்தார். அப்பா கட்சியை நான் பார்த்து கொள்கிறேன் என்று அப்போது அவர் கூறியது எனக்கு புரியவில்லை. அன்புமணி என் கண்ணை குத்திவிட்டார். ஒரு வாரத்தில் தலைவரை மாற்றி விடலாம் என சவுமியா அன்புமணி தன்னிடம் கூறினார். என் குடும்ப பெண்கள் கட்சி நிகழ்ச்சிகளுக்கு போக கூடாது என சவுமியாவிடம் கூறினேன். யார் சொன்னாலும் அன்புமணி கேட்க மாட்டார். நாம் அனைவரும் முயலுக்கு 4 கால் என்றால் அன்புமணி 3 கால் என்பார். கட்சியை முன்னேற்ற வலுப்படுத்த உழைப்பதற்கு அன்புமணி தயாராக இல்லை. அதனால் அவர் பதவி பறிக்கப்பட்டது.
பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனை கண்டு பிடிப்போருக்கு ரூ.100 பரிசு தருவேன் என கூறினார்.
- பா.ம.க. ஒரு சாதியினருக்கான கட்சி அல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதியினருக்கமான கட்சி.
- பா.ம.க.வுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுக்கு நல்லது, கெட்டது எல்லாம் தெரியும்.
தைலாபுரம்:
வருகின்ற சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அந்த வகையில், கூட்டணி, தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி மாநாடு உள்ளிட்டவை குறித்து கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே புதிதாக கட்சி தொடங்கிய விஜய், வருகிற சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி பணியாற்றி வருகின்றார். இதற்கிடையே அவர் யாருடன் கூட்டணி? என்பது பலரால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விஜயின் த.வெ.க.வுடன் பா.ம.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில்,
* பா.ம.க. ஒரு சாதியினருக்கான கட்சி அல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதியினருக்கமான கட்சி.
* பா.ம.க.வுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுக்கு நல்லது, கெட்டது எல்லாம் தெரியும்.
* தவெகவுடன் நான் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றார்.
- பா.ம.க.வின் பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் எனக்கே உள்ளது.
- எனது வார்த்தையை ஏற்று செயல் தலைவர் பதவியை அன்புமணி ஏற்றுக்கொண்டால் தீர்வு எட்டப்படும்.
தைலாபுரம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து தனது மனக்குமுறல்களை ராமதாஸ் தெரிவித்தார்.
ராமதாஸ் கூறியதாவது:-
* தன்னை லேசாக விமர்சித்தவர் மீதே பாய்ந்தவர் அன்புமணி.
* தலைவராக இருந்த அன்புமணியை யாரும் பார்க்க முடியாது, யாரிடமும் பேசமாட்டார்.
* அன்புமணியின் 3 ஆண்டுகள் பதவிக்காலம் முடிந்துவிட்டது. மீண்டும் பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.
* பா.ம.க.வின் பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் எனக்கே உள்ளது.
* 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து நானே முடிவு செய்வேன்.
* எனது வார்த்தையை ஏற்று செயல் தலைவர் பதவியை அன்புமணி ஏற்றுக்கொண்டால் தீர்வு எட்டப்படும்.
* பா.ம.க.வின் நிறுவனர், தலைவர் நான் தான். வாக்களிக்கும் மக்கள் என் பக்கம் உள்ளனர்.
* அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க மாட்டேன் என்றார்.
- 2019-ம் ஆண்டிலேயே கட்சியை கைப்பற்றும் எண்ணம் அன்புமணிக்கு இருந்தது.
- முயலுக்கு 3 கால் என்று வாதிட்டு கொண்டிருக்கிறார்.
தைலாபுரம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* சௌமியா என்னை வந்து பார்த்து மாமா என்றார், நான் ஏம்மா என்றேன்.
* ஒரு வாரத்தில் தலைவரை மாற்றிவிடலாமா என என்னிடம் சௌமியா கூறினார்.
* பா.ஜ.க.வினர் கூட்டணி குறித்து பேச தைலாபுரம் வருவது எனக்கு தெரியாது.
* என் பேச்சுக்கு மாறாக தருமபுரியில் வேட்பாளராக்கப்பட்டார் சௌமியா அன்புமணி.
* 2019-ம் ஆண்டிலேயே கட்சியை கைப்பற்றும் எண்ணம் அன்புமணிக்கு இருந்தது.
* பா.ம.க. என்ற மாளிகையில் நான் குடியமர்த்தியவர் என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார்.
* அன்புமணியுடனான பிரச்சனைக்கு தீர்வே இல்லை என்று தான் எண்ணுகிறேன்.
* முயலுக்கு 3 கால் என்று வாதிட்டு கொண்டிருக்கிறார்.
* 2026 தேர்தலுக்கு பின்னர் எல்லாவற்றையும் அன்புமணி தான் பார்த்துக்கொள்ள போகிறார்.
* அன்புமணி கட்சியை சரியாக வழிநடத்தவில்லை என்று கூறினார்.
- அய்யாவுக்கு பிறகே அன்புமணி.
- அன்புமணி தரப்பில் பேசுவது அனைத்தும் நாடகம்.
தைலாபுரம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தேவையற்ற பொய்களை கூறி அன்புமணி மாவட்ட செயலாளர்களை மிரட்டினார்.
* என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிற அளவுக்கு அன்புமணியின் செயல்பாடுகள் இருந்தன, இருக்கின்றன.
* அய்யாவுக்கு பிறகே அன்புமணி.
* என்னை நடைபிணமாக்கி என் பெயரில் நாடுமுழுவதும் நடைபயணம் செய்ய போகிறார்கள்.
* அன்புமணி தரப்பில் பேசுவது அனைத்தும் நாடகம்.
* பா.ம.க. தொண்டர்களை நான் வழிகாட்டிகளாக நினைக்கிறேன்.
* இன்னும் ஓரிரு ஆண்டுகள் தலைவராக இருக்க எனக்கு உரிமை இல்லையா?
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
- தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதே தீர்வு காண்பதற்கான தாரக மந்திரம்.
- தந்தைக்கு மீறிய தனையன் இல்லை என்பதே தர்மமாகும்.
தைலாபுரம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அன்புமணி மீதான ஆதங்கத்துடன் பேசினார். மேலும் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.
ராமதாஸ் கூறியதாவது:-
* ஒத்து போயிருந்தால் ஓரிரு ஆண்டுகளில் நானே முடிசூட்டு விழா நடத்தியிருப்பேன்.
* இன்னும் ஓரிரு ஆண்டுகள் பாமகவுக்கு தலைமையேற்க எனக்கு உரிமை இல்லையா என கேட்பதற்கு அவமானமாக உள்ளது.
* அன்புமணி பா.ம.க. தலைவராக்கப்பட்ட போது ஆனந்த கண்ணீட் விட்டேன்.
* என்னை மானபங்கம் செய்துவிட்டார் அன்புமணி.
* தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதே தீர்வு காண்பதற்கான தாரக மந்திரம்.
* தந்தைக்கு மீறிய தனையன் இல்லை என்பதே தர்மமாகும்.
* குலசாமி என கூறிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகின்றனர் என கூறினார்.
- நான் தைலாபுரத்திலேயே இருக்க வேண்டும் என பஞ்சாயத்திற்கு வந்தவர்கள் கூறினர்.
- அன்புமணிக்கு தலைவர் பதவியை விட்டுத்தர தயார் என்று கூறினேன்.
தைலாபுரம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அன்புமணியை செயல் தலைவர் என்று குறிப்பிட்டு பேசினார். மேலும் தண்ணீர் விட்டே வளர்த்தோம், இப்பயிரை கண்ணீரால் காத்தோம் என பாடியிருப்பார் பாரதி என்று சுட்டிக்காட்டி பேசத் தொடங்கினார்.
இதையடுத்து அவர் கூறியதாவது:-
* நான் தொடங்கிய 34 அமைப்புகளை சேர்ந்த நான் நியமித்தவர்களே எனக்கு பஞ்சாயத்து செய்ய வந்தனர்.
* சமரச பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.
* நான் தைலாபுரத்திலேயே இருக்க வேண்டும் என பஞ்சாயத்திற்கு வந்தவர்கள் கூறினர்.
* அன்புமணிக்கு தலைவர் பதவியை விட்டுத்தர தயார் என்று கூறினேன்.
* ஜி.கே.மணி, சிவபிரகாசம் ஆகிய இருவரையும் தூது அனுப்பினேன். இருவரையும் சந்திக்க அன்புமணி சம்மதிக்கவில்லை.
* என்னை நம்ப முடியாது என அன்புமணி கூறினார்.
* கொள்ளு பேரன், பேத்திகளோடு கொஞ்சி விளையாடுங்கள் என என்னிடம் கூறினர்.
* நீயா? நானா? என்று பார்த்துவிடுவோம் என்று முடிவுக்கு வந்து செய்தியாளர்களை சந்திக்கிறேன்.
* எல்லாம் தனக்கே வேண்டும் என எண்ணுகிறார் அன்புமணி.
* தினந்தோறும் நூற்றுக்கணக்கானவர்களை நான் சந்தித்து கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
- ஆட்டோவில் வந்த செல்வன் மீண்டும் பஸ்சில் ஏறியதும், டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
- தாக்குதலில் காயமடைந்த செல்வன் மற்றும் ஆன்சி தம்பதியினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
திண்டிவனம்:
சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகர்கோவிலுக்கு தனியார் சொகுசு பஸ் ஒன்று சென்றது. இதில் நாகர்கோவிலை சேர்ந்த செல்வன், அவரது மனைவி ஆன்சி, குழந்தை மற்றும் உறவினர் ரிஷாந்த் ஆகியோர் பயணம் செய்தனர்.
இந்நிலையில் கிளாம்பாக்கத்தில் செல்வன் குழந்தைக்கு உணவு வாங்குவதற்காக பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் செல்வன் வருவதற்குள் டிரைவர் பஸ்சை இயக்கினார். இந்த சம்பவத்திற்கு பின்னர், ஆட்டோவில் வந்த செல்வன் மீண்டும் பஸ்சில் ஏறியதும், டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் பஸ் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஒரு உணவகத்தில் இரவு உணவிற்காக நிறுத்தப்பட்டது. அங்கு, பஸ் டிரைவர் மற்றும் அவருடன் இருந்த 5 பேர் சேர்ந்து இரும்பு கம்பி, உருட்டுக்கட்டை மற்றும் தடியால் செல்வன், ஆன்சி தம்பதியினர் மற்றும் அவருடன் வந்த அவரது உறவினர் ரிஷாந்த் ஆகியோரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த செல்வன், ஆன்சி தம்பதியினர் கொடுத்த புகார் பேரில் போலீசார் பஸ்சை போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.
மேலும் தம்பதியினரை தாக்கியதாக கூறப்படும் டிரைவர்களான திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் தென்காசி மாவ ட்டம் திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்த ராம கிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தாக்குதலில் காயமடைந்த செல்வன் மற்றும் ஆன்சி தம்பதியினர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் மாற்று பஸ் டிரைவர் மூலம் பஸ் நாகர்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
- ஆடிட்டர் குருமூர்த்தி, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் ராமதாசை சந்தித்து பேசினர்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடையே அதிகார மோதல் உச்ச கட்டத்தை எட்டியது. இதனால் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் விரக்தியடைந்தனர்.
இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டனர். ஆனால் இருவருக்கும் இடையேயான மோதல் இன்னமும் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்த பிரச்சனை தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது.
இதனிடையே ஆடிட்டர் குருமூர்த்தி, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் ராமதாசை சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்புக்கு பின் கட்சியிலும், தேர்தலிலும் பா.ம.க.வின் நிலைப்பாடு தொடர்பாக சில முக்கிய முடிவுகளை ராமதாஸ் எடுத்து விட்டதாக தகவல் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் அன்புமணிக்கு எதிராக அடுத்தடுத்து புதிய நிர்வாகிகளை நியமித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை நடத்தினார்.
- எனக்கும் குருமூர்த்திக்கும் நல்ல நட்பு உள்ளது.
- குருமூர்த்தி, சைதை துரைசாமியுடன் பேசி உள்ளேன்.
திண்டிவனம்:
பா.ம.க.வில் தந்தை-மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலை சமாதானம் செய்ய கடந்த சில தினங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் இருந்து 3 நாள் பயணமாக சென்னைக்கு காரில் புறப்பட்ட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* வரும் செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன்.
* எனக்கும் குருமூர்த்திக்கும் நல்ல நட்பு உள்ளது. அவர் மீது மரியாதை வைத்துள்ளேன். குருமூர்த்தி, சைதை துரைசாமியுடன் பேசி உள்ளேன்.
* இருவரிடமும் என்ன பேசினேன் என்பதை பின்னர் தெரிவிக்கிறேன் என்றார்.
- ஆகஸ்ட் மாதம் நடக்கும் மகளிர் மாநாட்டு பணிகளை கவனிக்குமாறு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
- ஆடிட்டர் குருமூர்த்தி ராமதாசின் நீண்ட நாள் நண்பர் என்பதால் அவரை சந்தித்துள்ளார்.
திண்டிவனம்:
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. முன்னாள் தலைவர் பேராசிரியர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்-அன்புமணி இடையே சுமூக முடிவு ஏற்பட்டுள்ளது. நல்ல செய்தி வரும் என ராமதாஸ் கூறியது சமாதானம் என கூறலாம்.
ஆகஸ்ட் மாதம் நடக்கும் மகளிர் மாநாட்டு பணிகளை கவனிக்குமாறு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஆடிட்டர் குருமூர்த்தி ராமதாசின் நீண்ட நாள் நண்பர் என்பதால் அவரை சந்தித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் கொண்டு வந்திருந்தனர்.
- நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட இருப்பதால் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 150ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் பழமையான இந்த வார சந்தையில் ஆடு, மாடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக செஞ்சி பகுதியில் வளர்க்க ப்படும் வெள்ளாடுகள் மேய்ச்சலுக்காக மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை தழைகளை மேய்ந்து வளர்க்கப்படுவதால் இந்த வெள்ளாடுகளை வாங்குவதற்கு தேனி, கம்பம், சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் போட்டிப்போட்டு ஆடுகளை வாங்கி செல்வார்கள்.
இந்நிலையில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பக்ரீத் பண்டிகைக்கு குர்பானிகொடுப்பதற்காக ஏராளமான இஸ்லாமியர்கள் ஆடுகளை வாங்கி செல்வதற்காக இன்று காலையில் செஞ்சி வார சந்தைக்கு வந்திருந்தனர்.
வெள்ளிக்கிழமை வார சந்தையான இன்று அதிகாலை 3மணி முதலே விவசாயிகள் தங்களது வளர்ப்பு ஆடுகளையும், வெளிமாவட்டத்திலிருந்து ஆடுகளை வாங்கி விற்கும் வியாபாரிகளும் ஆடுகளை விற்ப்பதற்காக கொண்டு வந்தனர். ஏராளமான வியாபாரிகள் அதை வாங்கிச் செல்வதற்காக வாகனங்களில் செஞ்சி வார சந்தைக்கு வந்திருந்தனர்.
மேலும் விற்பனைக்காக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் கொண்டு வந்திருந்தனர்.
குறிப்பாக நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட இருப்பதால் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இந்த வார ஆட்டுச் சந்தையில் வெள்ளாடுகள் ஜோடி 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலும், செம்மறியாடுகள் 20 ஆயிரம் முதல் 30ஆயிரம் வரையிலும் விற்பனையானது. இதனால் சுமார் ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.






