என் மலர்
நீங்கள் தேடியது "பாமக பொதுக்குழு கூட்டம்"
- மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பை செய்ய வேண்டும் என சொல்லி தமிழக அரசு தட்டிக் கழிக்கிறது.
- சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் ராமதாஸ் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு குற்றச்சாட்டியது. குறிப்பாக கட்சியை பிளவுப்படுத்த அன்புமணி செயல்பட்டதாக கருதப்படுகிறது என 16 வகையான குற்றங்களை அன்புமணி செய்துள்ளதாக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இதனையடுத்து பொதுக்கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ், "வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கூட்டம், காசு கொடுத்து கூட்டப்பட்டதல்ல. சொந்தமாக கூடிய கூட்டம். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாமே தொண்டர்கள்தான்.
10.5% இடஒதுக்கீடு, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சரை சந்தித்து பேராசிரியர் பாடம் எடுப்பது போல பாடம் எடுத்தேன். ஆனாலும் பயனில்லை. அரசு நினைத்தால் ஒரே வாரத்தில் சாதிவாரி மக்கள்தொகை நடத்தலாம். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த முடியும். சில மாநிலங்கள் அதனைச் செய்துள்ளன.
மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பை செய்ய வேண்டும் என சொல்லி தமிழக அரசு தட்டிக் கழிக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும்வரை போராடாமல் விடப்போவதில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை உடனே வழங்க முடியும். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
கூட்டணி அமைப்பதற்கான முழு அதிகாரம் எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் மனதில் இருப்பதை நான் அறிவேன். பாமக தொண்டர்களின் மனம் விரும்பும் நல்ல கூட்டணி நிச்சயம் அமையும். அது இயற்கையான கூட்டணி, வெற்றிக் கூட்டணி. நீங்கள் கொடுத்த அதிகாரத்தை சரியாக பயன்படுத்துவேன். அதில் உங்களுக்கு அனைத்தும் கிடைக்கும். இது வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்குழு. இதுபோன்ற பொதுக்குழுவை பாமக கண்டதில்லை. பாமக தொண்டர்களிடம் பேசியே எந்த முடிவும் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
- ராமதாஸ் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக அன்புமணி மீது குற்றச்சாட்டு
- புதுச்சேரி பட்டானூரில் இன்று நடத்தப்பட்ட கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அல்ல.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் ராமதாஸ் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு குற்றச்சாட்டியது. குறிப்பாக கட்சியை பிளவுப்படுத்த அன்புமணி செயல்பட்டதாக கருதப்படுகிறது என 16 வகையான குற்றங்களை அன்புமணி செய்துள்ளதாக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் நடத்தப்பட்டக் கூட்டம் பா.ம.க. பொதுக்குழு அல்ல, அதன் முடிவுகள் பா.ம.கவை கட்டுப்படுத்தாது என்று அன்புமணி தரப்பு பா.ம.க. செய்தித் தொடர்பாளர் கே. பாலு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு விதிகள் 15, 16 ஆகியவற்றின் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உள்ளிட்ட எந்தக் கூட்டமும் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோரால் கூட்டப்பட்டு, பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவரின் தலைமையில் தான் நடத்தப்பட வேண்டும்.
அதன்படியான பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் நாள் மாமல்லபுரத்தில், பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் முறைப்படி நடத்தப்பட்டது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த தகவல் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், புதுச்சேரி பட்டானூரில் இன்று நடத்தப்பட்ட கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அல்ல. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பாட்டாளி மக்கள் கட்சியை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்பதை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை சார்பில் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- ராமதாஸ் 2025 மே மாதம் 30-ந்தேதி முதல் கட்சியின் தலைவராக செயல்படுவார்
- தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் ராமதாசிற்கு மட்டுமே உள்ளது.
புதுச்சேரி அருகே தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பட்டானூரில் உள்ள சங்கமித்ரா தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியது.
பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் 2025 மே மாதம் 30-ந்தேதி முதல் கட்சியின் தலைவராக செயல்படுவார் என்றும் தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் ராமதாசிற்கு மட்டுமே அதிகாரம். 2026 தேர்தல் கூட்டணி குறித்து பேச ராமதாசுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக தொண்டர்கள் பிடித்திருந்த "IF YOU ARE BAD I AM YOUR DAD" என்ற வாசகம் பொருந்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
- ராமதாசிடம் அனுமதி பெறாமல் அன்புமணி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
- ராமதாசின் தைலாபுரம் வீட்டில் ஒட்டுகேட்பு கருவி வைக்கப்பட்டதற்கு கண்டனம்.
புதுச்சேரி அருகே தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பட்டானூரில் உள்ள சங்கமித்ரா தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியது.
பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் 2025 மே மாதம் 30-ந்தேதி முதல் கட்சியின் தலைவராக செயல்படுவார் என்றும் தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் ராமதாசிற்கு மட்டுமே அதிகாரம். 2026 தேர்தல் கூட்டணி குறித்து பேச ராமதாசுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து, ராமதாஸ் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு குற்றச்சாட்டியுள்ளது. மேலும் ஒழுங்கு நடவடிக்கை குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில்,
* பாமக, நிறுவனர் குறித்து நாள்தோறும் சமூக வலைத்தளங்களில் அவதூறுகள் பரப்பப்படுவதால் மனஉளைச்சல்.
* மக்கள் தொலைக்காட்சியை திட்டமிட்டு அன்புமணி அபகரித்து கொண்டார்.
* ராமதாசிடம் அனுமதி பெறாமல் அன்புமணி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
* ராமதாசின் தைலாபுரம் வீட்டில் ஒட்டுகேட்பு கருவி வைக்கப்பட்டதற்கு கண்டனம்.
* அன்புமணியின் செயல்பாடு கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகவே கருதப்படுகிறது.
* சமரச பேச்சுவார்த்தையை அன்புமணி ஏற்காமல் உதாசீனப்படுத்தி உள்ளார்.
* பா.ம.க. தலைமை அலுவலகத்தை திட்டமிட்டு வேறு இடத்திற்கு அன்புமணி மாற்றினார்.
* பசுமை தாயகம் அமைப்பை திட்டமிட்டு கைப்பற்றி கொண்டார்.
* தனி நாற்காலி போட்டு துண்டு அணிவித்து ராமதாஸை, அன்புமணி அவமதித்துவிட்டார்.
* கட்சியை பிளவுப்படுத்த அன்புமணி செயல்பட்டதாக கருதப்படுகிறது என 16 வகையான குற்றங்களை அன்புமணி செய்துள்ளதாக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
- தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் ராமதாசிற்கு மட்டுமே அதிகாரம்.
- 2026 தேர்தல் கூட்டணி குறித்து பேச ராமதாசுக்கு மட்டுமே அனுமதி.
புதுச்சேரி அருகே தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பட்டானூரில் உள்ள சங்கமித்ரா தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியது.
இந்த பொதுக்குழுவில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். பொதுக்குழு மேடையில் ராமதாசுக்கு பக்கத்திலேயே அவரின் மூத்த மகள் காந்திமதி அமர்ந்திருந்தார்.
இதனை தொடர்ந்து பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கட்சியின் தலைவராக தொடர்வார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் பொதுக்குழுவில் பங்கேற்றவர்கள் எழுந்து நின்று கரங்களை கட்டி ஆரவாரம் செய்தனர். இதனை தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு எழுந்து நின்று ராமதாஸ் நன்றி தெரிவித்தார்.
ராமதாஸ் 2025 மே மாதம் 30-ந்தேதி முதல் கட்சியின் தலைவராக செயல்படுவார் என்றும் தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் ராமதாசிற்கு மட்டுமே அதிகாரம். 2026 தேர்தல் கூட்டணி குறித்து பேச ராமதாசுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- அன்றிலிருந்து இன்று வரை கருத்து மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- பொதுக்குழு கூட்டத்தில் 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி அருகே தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பட்டானூரில் உள்ள சங்கமித்ரா தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியது.
இந்த பொதுக்குழுவில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் இதே திருமண மண்டபத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் இளைஞரணி புதிய தலைவராக ராமதாஸ் மகள் வழி பேரனான முகுந்தனை நியமனம் செய்து டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார். அப்போது மேடையில் டாக்டர் ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் உருவாகியது.
அன்றிலிருந்து இன்று வரை கருத்து மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ் அணி அன்புமணி அணி என இருவேறு அணிகளாக பிரிந்து ஒருவருக்கொருவர் மாறி மாறி கூட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த நிகழ்வு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தி வந்தது. கடந்த 9-ந் தேதி அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு தந்தைக்கும், மகனுக்கும் கருத்து மோதல் நிகழ்ந்த அதே இடத்தில் மீண்டும் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று நடந்து வருகிறது.
இதில் நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் என நான்காயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் முக்கியமாக கட்சியின் அனைத்து நிகழ்வுகள் மற்றும் வரும் தேர்தலில் கூட்டணி குறித்தும் கட்சியின் முக்கிய முடிவுகள் எடுக்க டாக்டர் ராமதாசுக்கு மட்டுமே முழு அதிகாரம் கொடுப்பதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இளைஞரணி தலைவர் பதவியும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பொதுக்குழு கூட்டத்தையொட்டி பா.ம.க.வினர் வைத்துள்ள வரவேற்பு பேனர்களில் அன்புமணி படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- வரும் 2026 ஆகஸ்ட் வரை அன்புமணியே பா.ம.க. தலைவராக தொடர்வார்
- ஓராண்டு காலத்திற்கு பின்னரே உட்கட்சி தேர்தல் நடத்தப்படும்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணியின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரும் 2026 ஆகஸ்ட் வரை அன்புமணியே பா.ம.க. தலைவராக தொடர்வார் என்று தீர்மானம் நிறைவேற்றம்.
மேலும் பொதுச்செயலாளர், பொருளார் உள்ளிட்ட பதவி காலங்களும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு காலத்திற்கு பின்னரே உட்கட்சி தேர்தல் நடத்தப்படும்.
அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் கடந்த மே மாதம் முடிவடைந்ததாக ராமதாஸ் கூறிவந்த நிலையில், அன்புமணியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸ், "நான் சொல்வதற்கு ஏதுமில்லை" என்று தெரிவித்தார்.
- பொதுச்செயலாளர், பொருளார் உள்ளிட்ட பதவி காலங்களும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- ஓராண்டு காலத்திற்கு பின்னரே உட்கட்சி தேர்தல் நடத்தப்படும்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ள நிலையில், பொதுக்குழு மேடையில் ராமதாசுக்காக இருக்கை ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த பொதுக்குழுவில் பா.ம.க. கட்சி விதிகள் திருத்தப்பட்டு, பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணியின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரும் 2026 ஆகஸ்ட் வரை அன்புமணியே பா.ம.க. தலைவராக தொடர்வார் என்று தீர்மானம் நிறைவேற்றம். மேலும் பொதுச்செயலாளர், பொருளார் உள்ளிட்ட பதவி காலங்களும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு காலத்திற்கு பின்னரே உட்கட்சி தேர்தல் நடத்தப்படும். வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்காவிட்டால் தமிழக அளவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றம்.
அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் கடந்த மே மாதம் முடிவடைந்ததாக ராமதாஸ் கூறிவந்த நிலையில், அன்புமணியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பொதுக்குழுவில் 2000-க்கும் மேற்பட்ட பா.ம.க. நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
- பொதுக்குழுவில் பா.ம.க. கட்சி விதிகள் திருத்தப்பட்டு, பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
மாமல்லபுரம்:
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அன்புமணி தலைமையில் தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் பொதுக்குழுவில் 2000-க்கும் மேற்பட்ட பா.ம.க. நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த பொதுக்குழுவில் பா.ம.க. கட்சி விதிகள் திருத்தப்பட்டு, பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
பாட்டாளி மக்களின் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இல்லாமலும், அன்புமணி தலைமையிலும் நடைபெறும் முதல் பொதுக்குழு இதுவாகும்.
- கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனருக்கே அதிகாரம் உள்ளது.
- அன்புமணியின் பொதுக்குழு கூட்டம் அறிவிப்பால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்ட வாய்ப்புள்ளதாக ராமதாஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், "கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28-ந்தேதியுடன் நிறைவடைந்து விட்டது.
கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனருக்கே அதிகாரம் உள்ளது.
தன்னைத்தானே தலைவர் என சொல்லிக்கொண்டு அன்புமணி செயல்படுகிறார். அவர் வருகிற 9-ந்தேதி கூட்டும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை நாளை (இன்று) விசாரிப்பதாக கூறினார்.
இதையடுத்து இன்று இவ்வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கேடஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அன்புமணி பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அன்புமணியின் பொதுக்குழு கூட்டம் அறிவிப்பால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்ட வாய்ப்புள்ளதாக ராமதாஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை தொடர்ந்து, 5 நிமிடத்தில் இந்த வழக்கை என்னால் முடித்துவிட முடியும். இருப்பினும் இருதரப்பு நலன் கருதி இன்று மாலை 5.30 மணிக்கு இருவரையும் நீதிபதி அறைக்கு அழைத்து வரமுடியுமா? இதை வேண்டுகோளாக வைக்கிறேன் என்று கூறிய உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்டேஷ், வழக்கை ஒத்திவைத்தார்.
- கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனருக்கே அதிகாரம் உள்ளது.
- தன்னைத்தானே தலைவர் என சொல்லிக்கொண்டு அன்புமணி செயல்படுகிறார்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், "கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28-ந்தேதியுடன் நிறைவடைந்து விட்டது.
கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனருக்கே அதிகாரம் உள்ளது.
தன்னைத்தானே தலைவர் என சொல்லிக்கொண்டு அன்புமணி செயல்படுகிறார். அவர் வருகிற 9-ந்தேதி கூட்டும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக கூறினார்.
- 5 வயது குழந்தை போல் நான் செயல்படுவதாக கூறிவருகின்றனர்.
- தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை.
கும்பகோணம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பா.ம.க.வை வழிநடத்துவது யார்? என்பதில் இருவரும் பிடிவாதமாக உள்ளனர். கட்சியை கையகப்படுத்த இருவரும் தலைமைத் தேர்தல் ஆணையத்தையும் நாடி உள்ளனர். பொதுக்குழுவை கூட்டி, எடுக்கும் முடிவுகள் அடிப்படையில் பா.ம.க.வின் எதிர்காலம் அமையும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் கும்பகோணத்தில் இன்று பா.ம.க. மாவட்ட பொதுக்குழு கூடியது. அக்கூட்டத்திற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.
அப்போது டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
5 வயது குழந்தையாகிய நான்தான் 3 வருடங்களுக்கு முன்பு அன்புமணியை பா.ம.க.வின் தலைவராக ஆக்கினேன். அன்புமணி தனது பெயருக்கு பின்னால் என் பெயரை பயன்படுத்தக்கூடாது. என் பேச்சைக் கேட்காதவர்கள் எனது பெயரை பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன். தேவையென்றால் அன்புமணி எனது பெயரை இன்ஷியலாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.






