என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சொல்வதற்கு ஏதுமில்லை... அன்புமணி நடத்திய பொதுக்குழு குறித்த பாமக நிறுவனர் ராமதாஸ் பதில்
    X

    சொல்வதற்கு ஏதுமில்லை... அன்புமணி நடத்திய பொதுக்குழு குறித்த பாமக நிறுவனர் ராமதாஸ் பதில்

    • வரும் 2026 ஆகஸ்ட் வரை அன்புமணியே பா.ம.க. தலைவராக தொடர்வார்
    • ஓராண்டு காலத்திற்கு பின்னரே உட்கட்சி தேர்தல் நடத்தப்படும்.

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணியின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரும் 2026 ஆகஸ்ட் வரை அன்புமணியே பா.ம.க. தலைவராக தொடர்வார் என்று தீர்மானம் நிறைவேற்றம்.

    மேலும் பொதுச்செயலாளர், பொருளார் உள்ளிட்ட பதவி காலங்களும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு காலத்திற்கு பின்னரே உட்கட்சி தேர்தல் நடத்தப்படும்.

    அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் கடந்த மே மாதம் முடிவடைந்ததாக ராமதாஸ் கூறிவந்த நிலையில், அன்புமணியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸ், "நான் சொல்வதற்கு ஏதுமில்லை" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×