என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ராமதாஸ் -செல்வப்பெருந்தகை சந்திப்பு! தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.?
    X

    ராமதாஸ் -செல்வப்பெருந்தகை சந்திப்பு! தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.?

    • பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு தி.மு.க. காரணம் என அன்புமணி கூறியது குறித்து கேட்ட கேள்விக்கு, ராமதாஸ் மறுப்பு தெரிவித்தார்.
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணியை செல்வப்பெருந்தகை சந்தித்து பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பா.ம.க.வில் தந்தை-மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சிகள் நடைபெற்றது. இருப்பினும் அம்முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.

    இதனை தொடர்ந்து, மூச்சு உள்ளவரை தான் என் பா.ம.க. தலைவர் என்றும், அன்புமணி செயல்தலைவர் என்றும் ராமதாஸ் கூறி வருகிறார். அன்புமணி தலைவரான பிறகு அனைவரையும் அனுசரித்து செல்லவில்லை என ராமதாஸ் குற்றம் சாட்டி இருந்தார். மேலும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் பா.ம.க. பொதுக்குழு கூட்டப்படும். கூட்டணி குறித்து பொதுக்குழுவில் தான் முடிவெடுக்கப்படும் என்று நேற்று ராமதாஸ் தெரிவித்தார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கலாம் என தெரிவித்த போதிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து அன்புமணி போட்டியிட்டார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியிருந்தார்.

    மேலும் நேற்று ராமதாஸ் அளித்த பேட்டியில், கலைஞர் பாணியில் என் மூச்சு இருக்கும் வரை நான் தான் பா.ம.க.விற்கு தலைவர், அன்புமணி செயல்தலைவர் தான். கலைஞர் தி.மு.க. தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் எந்த முணுமுணுப்பையும் செய்யவில்லை என்று கூறியிருந்தார். பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு தி.மு.க. காரணம் என அன்புமணி கூறியது குறித்து கேட்ட கேள்விக்கு, ராமதாஸ் மறுப்பு தெரிவித்தார்.

    ராமதாசின் நகர்வுகளை உற்றுநோக்கும் அரசியல் நோக்கர்கள் சந்திப்பு தி.மு.க.வுடன் கூட்டணிக்கு அச்சாரமா? என வினவி வருகின்றனர்.



    இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள தோட்டத்தில் பா.ம.க. நிறுவனரான ராமதாஸை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசி வருகிறார்.

    தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வை இணைப்பது தொடர்பாக ராமதாசும், செல்வப்பெருந்தகையும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணியை செல்வப்பெருந்தகை சந்தித்து பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×