என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை- ராமதாஸ் அதிரடி
    X

    அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை- ராமதாஸ் அதிரடி

    • அருளுக்கு பா.ம.க.வின் இணை பொதுச்செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    • தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணையுமா என்பதை செயற்குழு, பொதுக்குழுதான் முடிவு செய்யும்.

    தைலாபுரம்:

    பா.ம.க.வில் தந்தை-மகனுக்கு இடையே அதிகாரம் தொடர்பான மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் நிர்வாகிகள் யார் பக்கம் செல்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே, ராமதாசுக்கு ஆதரவாக பேசிய அருள் எம்.எல்.ஏ.வை கட்சியில் இருந்து நீக்குவதாக நேற்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறுகையில்,

    * பா.ம.க.வில் யாரையும் நீக்கும் அதிகாரம் எனக்கே உள்ளது.

    * எம்.எல்.ஏ. பதவியில் இருந்து யாரையும் நீக்க முடியாது. அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை.

    * எம்.எல்.ஏ.க்களை நீக்க பா.ம.க. கொறடா தான் சபாநாயகருக்கு பரிந்துரை செய்ய முடியும்.

    * அருளுக்கு பா.ம.க.வின் இணை பொதுச்செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    * தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணையுமா என்பதை செயற்குழு, பொதுக்குழுதான் முடிவு செய்யும் என்றார்.

    Next Story
    ×