என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

செஞ்சி அருகே தூக்கில் பிணமாக தொங்கிய போலீஸ்காரர் - போலீசார் விசாரணை
- குடிப்பழக்கம் உள்ள ராமச்சந்திரன் கடந்த ஒரு மாதமாக விடுமுறையில் இருந்து வந்தாராம்.
- அக்காள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் காம்பவுண்டுக்குள் உள்ள மரத்தில் ராமச்சந்திரன் தூக்கில் பிணமாக தொங்கினார்.
செஞ்சி:
விழுப்புரம் அடுத்த வி. கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் ராமச்சந்திரன் (வயது 37). இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஆயுதப்படை பிரிவில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
இவருக்கும் செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பெனித்தா (வயது 33) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று 3 குழந்தைகள் உள்ளனர். பெனித்தா செஞ்சி கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருவதால் அவர்கள் கிருஷ்ணா புரத்தி லேயே குடும்பம் நடத்தி வந்தனர். குடிப்பழக்கம் உள்ள ராமச்சந்திரன் கடந்த ஒரு மாதமாக விடுமுறையில் இருந்து வந்தாராம்.
இந்நிலையில் இன்று பணிக்கு திரும்புவதற்காக நேற்று இரவு வீட்டிற்கு வந்தவர் வீட்டில் இருந்து பக்கத்து தெருவில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றாராம். இந்நிலையில் இன்று அதிகாலையில் அவர் அக்காள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் காம்பவுண்டுக்குள் உள்ள முருங்கை மரத்தில் ராமச்சந்திரன் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இது குறித்து செஞ்சி போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் அரி கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேரில் சென்று ராமச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் ராமச்சந்திரன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டாரா என்பது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள். செஞ்சி டி.எஸ்.பி. மனோகரன் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.






