என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க.வை பா.ஜ.க. சுவாகா செய்துவிடும்- செல்வப்பெருந்தகை
- பா.ம.க.வில் குழப்பம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
- ராமதாஸ், அன்புமணி இடையிலான பிரச்சனையை சரி செய்ய நான் யார்?
திண்டிவனம்:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இன்று தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தார். அவர் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார். பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை செல்வபெருந்தகை பார்த்து நலம் விசாரித்தார். அப்போது டாக்டர் ராமதாஸ் உடன் இருந்தார். இந்த நிலையில் செல்வபெருந்தகை டாக்டர் ராமதாசை சந்தித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராமதாசுடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை கூறுகையில்,
* ராமதாசுடனான சந்திப்பு அரசியலுக்கு அப்பாற்பட்ட சந்திப்பு.
* சந்திப்பில் கூட்டணியும் இல்லை, அரசியலும் இல்லை.
* கூட்டணியில் பா.ம.க. இணைவது தொடர்பாக தி.மு.க. தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்.
* பா.ம.க.வில் குழப்பம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
* பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு பா.ஜ.க.வே காரணம்.
* எங்கெல்லாம் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளதோ, அந்த கட்சிகளை உடைத்து விடுவர், அதுதான் வாடிக்கை.
* அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தையும் பா.ஜ.க. விரைவில் சுவாகா செய்துவிடும்.
* ராமதாஸ், அன்புமணி இடையிலான பிரச்சனையை சரி செய்ய நான் யார்?
* தமிழ்நாட்டிற்கு தேவையான முடிவை ராமதாஸ் எடுப்பார் என்றார்.






