என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இறந்தவர்களுக்கு தான் கூட்டுப்பிரார்த்தனை... நான் உயிரோடு தான் இருக்கிறேன் - அருள் எம்.எல்.ஏ.
    X

    இறந்தவர்களுக்கு தான் கூட்டுப்பிரார்த்தனை... நான் உயிரோடு தான் இருக்கிறேன் - அருள் எம்.எல்.ஏ.

    • டாக்டர்.ராமதாஸ் சொல்வது தான் முடிவு. அவர் சொல்வதை செய்யப் போகிறோம்.
    • பிரச்சனை முடிய வேண்டும் என்று எனக்கு மட்டுமல்ல 2 1/2 கோடி வன்னியர்களுக்கும், பொதுமக்களுக்கும் அதே ஆசை தான்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் வந்தார்.

    தைலாபுரம் தோட்டத்தில் பா.க.ம. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் மாவட்ட செயலாளலர்கள், தலைவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. தற்போது அதற்காக வந்துள்ளேன்.

    கேள்வி:-ஆலோசனை கூட்டத்தில் ஏதேனும் முக்கிய முடிவு அல்லது பொதுக்கூட்டம் எது சம்பந்தமாக முடிவெடுக்க வாய்ப்புள்ளதா?

    பதில்:- டாக்டர்.ராமதாஸ் சொல்வது தான் முடிவு. அவர் சொல்வதை செய்யப் போகிறோம்.

    கேள்வி:- டாக்டர் ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் இணைய வலியுறுத்தி உள்ளீர்களா?

    பதில்:- தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

    கேள்வி:- இணைவதற்கு வாய்ப்பில்லை என சிலர் கூறுகிறார்களே...

    பதில்:- அப்படி இல்லை இணைவார்கள். எங்களது ஆசை இணைவது தான்.

    பதில்:- அவரை பார்ப்பதும், பேசுவதும் புதியது அல்ல. அன்புமணி ராமதாஸ் எனது அண்ணன்.

    கேள்வி:- உங்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது உங்களை அன்புமணி சந்தித்தாரா?

    பதில்:- இல்லை.

    கேள்வி:- சேலத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் உங்களுக்கு கூட்டுப்பிரார்த்தனை செய்தார்களே

    பதில்:- கூட்டுப் பிரார்த்தனை என்பதை கலசம் வைத்து தான் பண்ண வேண்டும். நான் சாகவில்லை உயிரோடு தான் இருக்கிறேன். கூட்டுப்பிரார்த்தனை என்றால் இறந்தவர்களுக்கு தான் பண்ண வேண்டும்.

    கேள்வி:- நீங்கள் சேலத்தில் நடந்த பா.ம.க. கூட்டத்தை புறக்கணிப்பதற்காக தான் உடல்நிலை சரியில்லை என்று கூறினீர்களா?

    பதில்:- யார் சும்மா, சும்மா போய் மருத்துவமனையில் படுப்பார்களா. நான் தனியார் மருத்துவமனையில் படுக்கவில்லை. சென்னை ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டேன். நீங்கள் அரசு மருத்துவமனையில் சென்று கேளுங்கள். எனக்கு என்னவென்று கேட்டால் கண்டிப்பாக கொடுப்பார்கள். மனம் அழுத்தம் அதனால் தான் மருத்துவமனைக்கு சென்றேன்.

    பதில்:- டாக்டர்.ராமதாஸ் என்னுடன் தொடர்ந்து பேசிக்கொண்டு தான் இருக்கிறார்.

    கேள்வி:- பிரச்சனைக்கு எப்பொழுது முடிவு வரும்.

    பதில்:- பிரச்சனை முடிய வேண்டும் என ஆசை தான். எனக்கு மட்டுமல்ல 2 1/2 கோடி வன்னியர்களுக்கும், பொதுமக்களுக்கும் அதே ஆசை தான் விரைவில் நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×