என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • விழுப்புரம்மாவட்டத்தில் இதுவரை 100 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
    • முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- –

    மாவட்டக் கலை மன்றங்கள் மூலம் ஒவ்வொரு மாவட்ட த்திலும் சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம்மாவட்டத்தில் இதுவரை 100 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. 2022-2023 மற்றும் 2023-2024 ஆகிய ஆண்டுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் இயல், இசை நாடகம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு வயது மற்றும் கலை புலமை அடிப்படையில் விருதுகள் வழங்க மாவட்ட கலெக்டர் தலைமையில் தேர்வாளர்குழு விரைவில் கூட்டப்படவுள்ளது.

    ஆகவே விழுப்புரம் மாவ ட்டத்தைச் சேர்ந்த பாட்டு, பரதநாட்டியம், ஓவியம், கும்மிக் கோலாட்டம், மயிலாட்டம், பாவை க்கூத்து, தோல்பாவை, நையாண்டிமேளம், கரகா ட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை யாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், ஆழியாட்டம், சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் இசைக் கருவிகள் வாசித்தல் முதலிய நாட்டுப்புறக் கலைகள் மற்றும் செவ்வியல் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    மாவட்டக் கலை விருதுகள் 18 வயதும் அதற்குற்பட்ட கலைஞர்களுக்கு "கலை இளமணி" விருதும், 19 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு "கலை வளர்மணி" விருதும், 36 வயது முதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு "கலைச் சுடர்மணி" விருதும், 51 வயது முதல் 65 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு "கலை நன்மணி" விருதும், 66 வயதிற்குமேற்பட்ட கலைஞர்களுக்கு "கலை முதுமணி" விருது வழங்கப்படவுள்ளது.

    எனவே, விழுப்புரம் மாவ ட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் விண்ணப்பத்துடன் வயதுச் சான்று மற்றும் கலைத் தொடர்பான சான்றி தழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய விருது, மாநில விருது மற்றும் மாவட்டக் கலை மன்றத்தால் வழங்கப்பட்ட விருதுகள் பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பம் செய்ய க்கூடாது. இம்மா வட்ட விருது பெறத் தகுதியவாய்ந்த கலைஞர்களிடமிருந்து வருகிற 25-ந் தேதிக்குள் உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், மண்டல கயிறு வாரியம் அருகில், வல்லம் சாலை, பிள்ளையார்ப்பட்டி, தஞ்சாவூர் – என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • நூதன முறையில் ஒரு கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது.
    • 2 பேரை அடையாளம் கண்டு, அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விழுப்புரம்:

    திண்டிவனத்தில் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து நூதன முறையில் திருடிய 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 48 ஆயிரம் ரூபாய் பணம், 81 ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்தனர். திண்டிவனம் மற்றும் வெள்ளிமேடு பேட்டை பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்கத் தெரியாத நபர்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி வேறு ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து நூதன முறையில் ஒரு கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது.

    இதுகுறித்து திண்டிவனம் மற்றும் வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசான்சாய் உத்தரவின் பேரில், திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மேற்பார்வையில், தனிப்படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான போலீசார், கொள்ளை சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். 

    அதன்படி, 2 பேரை அடையாளம் கண்டு, அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 2 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவர்களை சோதனை செய்தனர். சோதனையின் போது பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் திண்டுக்கல் மாவட்டம் கோணவட்டம் கிராமத்தை சேர்ந்த துரைசாமி மகன் ஆபேல் (வயது 32), புகையிலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜாபுதீன் மகன் முதர்ஷீர் (38) என்பது தெரியவந்தது, அவர்களிடம் இருந்து ரூ.48 ஆயிரம் பணம், 81 ஏ.டி.எம். கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ராமு வேலையை முடித்துவிட்டு கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்றார்.
    • தூக்கி வீசப்பட்ட ராமு, சம்பவ இடத்திலேயே பலியானார்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அடுத்த பனிச்சமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமு (வயது 46). கூலித் தொழிலாளி. இவர் வேலையை முடித்துவிட்டு கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்றார். அப்போது இவரது பின்னால் வந்த கார், ராமு மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமு, சம்பவ இடத்திலேயே பலியானார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார், ராமுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தனியார் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது.
    • 118 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் அவர் பேசியாவது.-

    விழுப்புரம் மாவட்ட த்தில் உள்ள 274 திருநங்கை களில் 25 திருநங்கைகள் இறப்பு, 37 திருநங்கைகள் இடம் பெயர்ந்துள்ளார்கள். மீதமுள்ள 212 திருநங்கைகள் தற்பொழுது மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். 2021 2022-ஆம் ஆண்டில் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக மர்லிமா என்ற திருநங்கைக்கு 25 ஆண்டு சேவையை பாராட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றி தழ் வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், இதுவரை 45 திருநங்கைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் சுயதொழில் மானியமும், தலா ரூ.4 ஆயிரம் வீதம் 118 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியுதவியும், 210 திருநங்கைகளுக்கு அடையாள அட்டையும், திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையும், 51 திருநங்கைகளுக்கு வீட்டுமனைப்பட்டாவும், 67 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டையும், 6 திருநங்கை களுக்கு தையல் எந்திரமும் வழங்கப்பட்டுள்ளது.

    குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், திருநங்கை களின் பெரும்பாலான கோரிக்கையாக இருப்பது சுயமாக சுயதொழில் தொடங்குவதற்கு மானி யத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி, மாதாந்திர ஓய்வூதி யத்தொகை, மருத்துவ காப்பீடு அட்டை, இலவச வீட்டு மனைப்பட்டா, பசுமை வீடு போன்ற பல்வேறு கோரிக்கை களாகும். எனவே, திருநங்கை கள் தங்கள் அடிப்படை தேவைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கினால் உடனடி தீர்வின் மூலம் தீர்வுகாணப்பட்டு கோரிக்கைகள் நிறை வேற்றப்படும் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், உதவி இயக்குநர் (ஊராட்சி கள்) பொன்னம்பலம், கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி, நங்கையர் கூட்டமைப்பு தலைவி விமலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விஜயகுமார் சாராயம் விற்பதாக மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கரி பாளையம் கிராமத்தில் உள்ள பாலகிருஷ்ணா தெருவில் வசிப்பவர் விஜயகுமார் (வயது 24). இவர் அந்த பகுதியில் சாராயம் விற்பதாக மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில் மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் ஜோசப், திவாகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனை செய்தனர். அப்போது விஜயகுமார் சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர். அவரிடமிருந்து புதுவை மாநில 25 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • ஜாபர் அலி திண்டிவனத்தில் உள்ள டிபன் கடையில் வேலை செய்து வருகிறார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமியை தேடி வந்தனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் கோட்டை மேட்டை சேர்ந்தவர் பாட்ஷா மகன் ஜாபர் அலி (வயது 19). இவர் திண்டிவனத்தில் உள்ள டிபன் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 9-ந்தேதி அந்த சிறுமி வீட்டிலிருந்து காணாமல் போனார். இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசாரிடம் மகளை காணவில்லை என புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமியை தேடி வந்தனர்.

    அப்போது திண்டிவனம் பகுதியில் சிறுமியுடன் சென்ற ஜாபர் அலியை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் மே ற்கொண்ட விசாரணையில் சிறுமியை ஜாபர் அலி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமியை விழுப்புரம் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    • நிஷா என்கிற குட்டிமா தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
    • போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆட்சிக்காடு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 45). இவருடைய மகள் நிஷா என்கிற குட்டிமா (21). இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் வழக்கம்போல் நேற்று காலை வேலைக்கு சென்றார். பின்னர் இரவு வீட்டில் சமையல் அறையில் கயிறால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு சம்பவ இடத்திற்க்கு வந்து தூக்கில் பிணமாக தொங்கிய நிஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவையில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் நிஷா இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விக்கிரவாண்டி பகுதியில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் வந்தது.
    • வீட்டில் மூட்டை மூட்டையாக குட்கா மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டுக்கு விக்கிரவாண்டி பகுதியில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் வந்தது. அதன்படி விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், பெரிய தச்சூர் சப்-இன்ஸ்பெக்டர் மருது தங்கபாண்டியன் மற்றும் போலீசார் நாரேரிகுப்பத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சிவா (வயது 46). வியாபாரி. இவரது வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் மூட்டை மூட்டையாக குட்கா மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிவாவை கைது செய்து அவரிடமிருந்து 200 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

    • சென்னை கல்லூரி மாணவர் கனவில் வந்து கூறிய இடத்தில் எல்லை பிடாரி அம்மன் சிலை இருந்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
    • பரவசம் அடைந்த பக்தர்கள் சிலைக்கு மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு, பூமாலை அணிந்து வழிபட்டனர்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே உள்ள வட சிறுவலூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலன். இவர் சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது கனவில் மஞ்சள் நிற உடை அணிந்த பெண் வந்து வடசிறுவலூர் பச்சை அம்மன் கோவில் எதிரே உள்ள குளக்கரையில் முட்புதரில் ஒரு வேப்பமரத்தின் பின்புறம் எல்லை பிடாரி செல்லியம்மன் சிலை இருப்பதாகவும், அதை கிராம மக்கள் வழிபட வேண்டும் என கூறியுள்ளார்.

    இதுகுறித்து வேலன் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறி உள்ளார். அதன் படி அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அந்த இடத்திற்கு சென்று பார்த்தனர்.

    அங்கு இரு நாகங்களை குடையாக பிடித்த படி எல்லை பிடாரி செல்லியம்மன் சிலை இருந்தது. இதனால் பரவசம் அடைந்த பக்தர்கள் அந்த சிலைக்கு மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு, பூமாலை அணிந்து வழிபட்டனர்.

    • மரக்காணத்தில் பக்கிங்காங் கால்வாயில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு சொந்தமான 2500 ஏக்கர் உப்பளம் உள்ளது.
    • உப்பளத்தில் 500 கூழித்தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் கோடை காலம் முடிந்து பல நாட்கள் ஆனது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தாலும் அவ்வப்போது மழை பெய்த வண்ணம் இருக்கிறது. இதில் குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தாலும் இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினத்திலிருந்து 2 நாட்கள் காலை நேரத்தில் வெயில் வாட்டி வந்த நிலையில் பொதுமக்கள் வெயிலினால் ஏற்படும் புழுக்கம் மற்றும் அலர்ஜியில் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இதனையடுத்து நேற்று மாலை குளிர்ந்த காற்று வீசி இரவு 11 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. இதனால் வெயிலினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து பொதுமக்கள் விடுபட்டு மகிழ்ச்சி அடைந்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் மணம்பூண்டியில் 27, சூரப்பட்டு 21, முகயைூர் 20, கெடார் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழை அரகண்டநல்லூர், செஞ்சி, திண்டிவனம், அனந்தபுரம், விக்கிரவாண்டி, கோலியனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்தது. நேற்று பெய்த மழை மற்றும் பலத்த காற்றால் விழுப்புரம் நகராட்சி வடக்கு ரெயில்வே பகுதியில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு முறிந்து அருகில் இருந்த புத்துமாரி அம்மன்கோவில் மீது விழுந்தது. இதனால் புத்துமாரி அம்மன்கோவில் சேதமானது. அப்போது கோவிலில் யாரும் இல்லாததால் எந்தவித பாதிப்பும் இல்லை. கோவில் மரம் விழுந்து முழுவதும் சேதமானது. இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஊழியர்கள் மற்றும் ரெயில்வே பொதுபணித்துறை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடம் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.

    இதேபோல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பக்கிங்காங் கால்வாயில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு சொந்தமான 2500 ஏக்கர் உப்பளம் உள்ளது. இந்த உப்பளத்தில் 500 கூழித்தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் ஜனவரி மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை உப்பளத்தில் வேலை தொடர்ந்து நடைபெற்று வருவது வழக்கம்.

    இந்நிலையில் தற்போது மழை பெய்யும் காரணத்தால் ஜனவரி-ஜூலை மாதம் வரை உப்பளத்தில் வேலை பார்ப்பதற்கு ஊழியர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று பெய்த மழையினால் 2500 ஏக்கர் உப்பளம் மழை நீரில் முழ்கியது. இதனால் உப்பளத்தில் மழை நீர் கடல் போல் காட்சியளித்தது. இங்கு வேலை பார்க்கும் உப்பள உற்பத்தி கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்பு குள்ளானது. இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத நிலையில் நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட கூலித்தொழிலாளர்கள் கோரிக்கை விடுகின்றனர். விழுப்புரத்தில் நேற்று பெய்த மழையினால் பெரும் சேதம் ஏற்பட்டது.

    • பெண்கள் மகாத்மா காந்தி 100 -நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து வேலை பார்த்து வந்தனர்.
    • பணியில் இருந்த ஊராட்சி செயலாளர் உங்களுக்கு இன்று வேலை இல்லை நாளை வாருங்கள் என்று கூறி அனுப்பியுள்ளார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே காட்ராம்பாக்கம் பகுதியில் உள்ள பெண்கள் மகாத்மா காந்தி 100 -நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள 5 மற்றும் 6-வது வார்டில் உள்ள பெண்களுக்கு சரிவர மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் வேலை கொடுக்கவில்லை. இதனை யடுத்து இன்று காலை அந்த பகுதி 5,6-வது வார்டு பெண்கள் அனைவரும் சேர்ந்து ஊரக வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது பணியில் இருந்த ஊராட்சி செயலாளர் உங்களுக்கு இன்று வேலை இல்லை நாளை வாருங்கள் என்று கூறி அனுப்பியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வானூர்- காட்ராம்பாக்கம் சாலையில் திடீரென மறியல் செய்தனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பிடிஓக்கள் இங்கு வந்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் வரை சாலை மறியலை கைவிட மாட்டோம் என்று கூறி பெண்கள் மறியலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக உள்ளது.

    • கிருஷ்ணமூர்த்தி தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார்.
    • வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நர்கள் 10 பட்டு புடவை, வெண்கல செம்புகளை திருடி சென்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாதாபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி அ.தி.மு.க ஒன்றிய செயலாளர். இவர் நேற்று தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். இதனையடுத்து இன்று காலை தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே பீரோவில் இருந்து 35 பவுன் நகை மற்றும் 21 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி வெள்ளிமேடுபேட்டை போலீசில் புகார் அளித்தார்.

    இதைபோல் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் அப்பள கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வீட்டிலும் நேற்று இரவு வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நர்கள் 10 பட்டு புடவை, வெண்கல செம்புகளை திருடி சென்றனர். மேலும் இந்த வீட்டின் அருகே உள்ள மேஸ்திரி லட்சுமணன் என்பவர் வீட்டிலும் 2 பவுன் தங்க நகை, வீட்டு பத்திரத்தை திருடிச் சென்றனர். மேலும் பூக்கடை வியாபரி முத்து இவரது வீட்டிலும் 15 பவுன் நகை, 25 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திண்டிவனம் டி.எஸ்.பி சுரேஷ் பாண்டி யன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மோப்ப நாயும் வரவழக்கப் பட்டு துப்புதுலக்கப்பட்டு வருகிறது. கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்து வருகின்றனர். திண்டி வனத்தில் ஒரே நாளில் அதிமுக ெசயளாலர் வீடு உள்பட 4 வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி யது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×