என் மலர்
விழுப்புரம்
- கடந்த ஆண்டு ஜூலை 17-ந்தேதி பள்ளி வளாகத்தில் கலவரம் வெடித்தது.
- கலவரத்தை தொடர்ந்து சுமார் 600 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூரை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மாணவி ஸ்ரீமதி பள்ளியின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், அவரது தாய் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 17-ந்தேதி பள்ளி வளாகத்தில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தை தொடர்ந்து சுமார் 600 பேர் வரை கைது செய்யப்பட்டனர். மாணவி உயிரிழந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கினை ஆகஸ்ட் 22-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
- அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது.
- கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் பகண்டை கிராமத்தைச் சேர்ந்த பா.ம.க. உறுப்பினர் முருகவேல். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவனை சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விழுப்புரம் வழுதாவூர் சாலையில் தொராவி கிராமம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திடீர் சாலை மறியல் போராட்டம் இன்று காலை 8.30 மணிக்கு நடைபெற்றது. இதில் பா.ம.க. உறுப்பினர் முருகவேலை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தகவலறிந்து விரைந்து வந்த விக்கிரவாண்டி சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து, போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர் துரைராஜ், மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பந்த ப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை தேடி வருகின்றோம். விரைவில் பிடித்து விடுவோம் என போலீசார் உறுதி அளித்ததனர். அதன் பேரில் காலை 9 மணிக்கு சாலை மறியலை கைவிட்டு வி.சி.க.வினர் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக விழுப்புரம் வழுதாவூர் சாலையில் காலை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- சாதனையாளர்களுக்கு மதிப்புறு முனைவர் விருது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
- 20-க்கும் மேற்பட்ட சாதனையா ளர்களுக்கு மதிப்புறு முனைவர் விருது வழங்கப்பட்டன.
விழுப்புரம்:
இந்திய தேசத்தின் 76-வது சுதந்திர தின ஆண்டிணை முன்னிட்டு யூனிவர்சிட்டி ஆப் நியூ ஜெருசலம் மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல் இஸ்ரேல் சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு மதிப்புறு முனைவர் விருது பட்டமளிப்பு விழா புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இதில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 20-க்கும் மேற்பட்ட சாதனையா ளர்களுக்கு மதிப்புறு முனைவர் விருது வழங்க ப்பட்டன. இவர்களில் கண்டமங்கலம் ஒன்றியம் வாணியம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை சரசு கல்விப்பணி, சமூகப்பணி, மற்றும் கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலங்களில் மக்களுக்கு ஆற்றிய மனித நேயப் பணி இவற்றினை பாராட்டி சிறப்பு அழைப்பாளர்கள் புதுவை மாநிலம் நெல்லித்தோப்பு எம்.எல்.ஏ. விவிலியம் ரிச்சர்ட்ஸ் ஜான்குமார் , சென்னை நீதிமன்ற நோட்டரி வக்கீல் தண்டபாணி , ரவிச்சந்திரன் , தேவமூர்த்தி இயக்குனர் அமெரிக்கன் கல்லூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பட்டமளித்து சிறப்புரையாற்றினார்கள்
- வேண்டுதலை நிறைவேற்ற ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு அம்மனுக்கு படையல் போட்டு வேண்டிக்கொண்டனர்.
- அம்மன் ஊஞ்சலில் அமர்ந்து, உடுக்கை, பம்பை சத்தத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டியில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை யொட்டி ஊஞ்சல் உற்சவ திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலை அம்மனுக்கும் மற்றும் பெரியாயி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து மாலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு அம்மனுக்கு படையல் போட்டு வேண்டிக்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து இரவு 11 மணிக்கு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சலில் அமர்ந்து, உடுக்கை, பம்பை சத்தத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமானவர்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்பு பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியை விக்கிரவாண்டி பருவத ராஜகுலத்தார் மற்றும், கோயில் தர்மகர்த்தாக்கள், பொதுமக்கள் முன்னின்று செய்திருந்தனர்.
- தாலாட்டுப்பாடல்கள் பாடியவுடன் ஊஞ்சல் உற்சவம் முடிவடைந்தது.
- பவானி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டது.
விழுப்புரம்:
மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள் விபூதி, குங்குமம், இளநீர் பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
உற்சவ அம்மனுக்கு பலவித பூக்களைக் கொண்டு பவானி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டது. இரவு 10.30 மணிக்கு அங்கிருந்த உற்சவ அம்மனை பம்பை, மேள தாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்த்தினர். பின்பு பூசாரிகள் பக்திப் பாடல்களைப் பாடினர். இதைக்கண்ட பக்தர்கள் பலர் அருள் வந்து ஆடினர். ஊஞ்சலில் அம்மன் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இரவு 12 மணியளவில் தாலாட்டுப்பாடல்கள் பாடியவுடன் ஊஞ்சல் உற்சவம் முடிவடைந்தது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.
விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பெங்களூர், புதுச்சேரியிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம், பூசாரி அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- அமைச்சர் பொன்முடியின் விழுப்புரம் வீட்டில் சோதனை நிறைவடைந்தது.
- அமலாக்கத்துறையை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 16 மணி நேரத்துக்கு பிறகு இரவு 11 மணி அளவில் நிறைவடைந்தது.
இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு ச் சென்றனர். இந்த சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியானது.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்திய சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் அமலாக்கத் துறையை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- விழுப்புரத்தில் உள்ள பொன்முடி வீட்டில் காலை 7 மணிக்கு சோதனை தொடங்கியது.
- இந்த சோதனை சுமார் 16 மணி நேரத்துக்கு பிறகு நிறைவடைந்தது.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 16 மணி நேரத்துக்கு பிறகு இரவு 11 மணி அளவில் நிறைவடைந்தது.
இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இந்த சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியானது.
- மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்றனர்.
- திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம்:
புதுவை நகர பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 65). இவரது மனைவி அம்பிகா (60). இருவரும் மோட்டார் சைக்கிளில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்றனர். அப்போது திண்டிவனம் அடுத்த தீவனூர் அருகே சென்றபோது, சாலையில் இருந்த விநாயகர் கோவிலை கண்டனர். அங்கு சென்று சாமி கும்பிட மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாலையை கடந்தனர்.
அப்போது திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் இவர்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வெங்கடாசலம், மனைவி கண்முன்னே துடி துடித்து உயிரிழந்தார். லேசான காயங்களுடன் உயிர்தப்பிய அம்பிகாவை, அவ்வழியே சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ரோசனை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கடாசலத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- கருணாகரனை கையும் களவுமாக பிடித்தனர்.
விழுப்புரம்:
மரக்காணம் அருகே கழிக்குப்பம் கிராமத்தில் மேட்டு தெருவில் வசிப்பவர் கருணாகரன் (வயது 48). இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் மற்றும் போலீசார் கழிகுப்பத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த கருணாகரனை கையும் களவுமாக பிடித்தனர்.
கருணாகரனிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இன்ஸ்பெக்டர் பாபு கூறுகையில், தடைசெய்யப்பட்ட கஞ்சா, சாராயம் போன்றவற்றை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கையாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- மீனவ பெண்கள் புதுச்சேரியில் மீன்களை மொத்தமாக வாங்கி வந்து கிராமப் பகுதியில் விற்பனை செய்வது வழக்கம்.
- மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது
விழுப்புரம்:
புதுச்சேரி அடுத்த தமிழகப்பகுதியான கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலையை யொட்டி புதுக்குப்பம் மீனவ கிராமம் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரம் செய்யும் மீனவ பெண்கள் புதுச்சேரியில் மீன்களை மொத்தமாக வாங்கி வந்து கிராமப் பகுதியில் விற்பனை செய்வது வழக்கம். அதுபோல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீன்கள் அதிகம் விற் பனையாகும் என்பதால் புதுச்சேரிக்கு மீன் வாங்க அதிகாலை புதுக்குப்பம் மீனவ பெண்கள் லட்சுமி (45), கோவிந்தம்மாள் (50) நாயகம், கமலம், கெங்கை யம்மாள், பிரேமா ஆகிய 6 பேர் ஆட்டோவுக்காக கிழக்கு கடற்கரை சாலை யோரம் நின்று கொண்டி ருந்தனர்.
அப்போது சென்னை யில் இருந்து புதுச்சேரி நோக்கி வேகமாக வந்த சொகுசு கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த 6 பெண்கள் மீது மோதியது. இதில் லட்சுமி மற்றும் கோவிந்தம்மாள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 4 பெண்கள் படு காயம் அடைந்தனர். அவர்கள் கனகசெட்டிக் குளத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கெங்கை யம்மாள் (வயது 45) பரிதாபமாக இறந்தார்.
இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. காயமடைந்த மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இந்த விபத்தில் கார் கவிழ்ந்து நொறுங்கியது. காரை ஓட்டிவந்த சென்னையை சேர்ந்த டிரைவர் விக்னேஸ்வரன், மற்றும் காரில் பயணம் செய்த கவுதம், சேது, பிரசாந்த், திரிஷா,ஆகிய 5 பேர் புதுச்சேரி தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கோட்டகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- வழக்கம்போல நேற்று இரவு 11 மணியளவில் கடைைய மூடி விட்டு சென்றனர்.
- சுமார் ½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தீர்த்தகுளம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் முன்னாள் தி.மு.க. கவுன்சிலர். இவரும், இவரது அண்ணன் தம்பிதுரை ஆகிய 2 பேரும் திருமணம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தேவையான அலங்காரப் பொருட்கள் செய்யும் வேலை செய்து வருகின்றனர். வழக்கம்போல நேற்று இரவு 11 மணியளவில் கடைைய மூடி விட்டு சென்றனர். நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென இவரது கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ மளமளவென கொளுந்து விட்டு எறிந்தது.
இது குறித்து திண்டி வனம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. தீய ணைப்புத் துறை நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையிலான தீய ணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் ½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.8 லட்சம் மதிப்பிலான அலங்காரப் பொருட்கள் கருகி முற்றிலும் சேதமானது. இது குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ வைத்த மர்ம நபர்கள் யார்? தொழில் போட்டி காரணமாக யாரேனும் கடைக்கு தீ வைத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- பா.ம.க. ஒன்றிய செயலாளர் சண்முகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
விழுப்புரம்:
மயிலம் அருகே ரெட்டணை கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மத்துவ துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமை தாங்கி மருத்துவ முகாமை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் மயிலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தேன்மொழி தலைமையில் மயிலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் டாக்டர் பாரதிதாசன் மேற்பார்வையில் மருத்துவ குழுவினர்கள் சிறப்பு பொது மருத்துவம், கண், காது, மூக்கு தொண்டை பல் மருத்துவம், வாய்புற்று நோய் கண்டறிதல், மகபேறு, குழந்தை மருத்துவம் தாய்சேய் நலம், எலும்பு மூட்டுவலி ஆகியவற்றிற்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் ரெட்டணை சுற்றியுள்ள கிராம மக்கள், நோயாளிகள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர். இதில் மயிலம் எம்.எல்.ஏ சிவக்குமார், முன்னால் எம்.எல்.ஏ. டாக்டர் மாசிலாமணி, மயிலம் ஒன்றிய குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன். மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரிமேலழகன், தேவதாஸ், மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், ஒன்றிய குழு துணை தலைவர் புனிதா ராமஜெயம் ரெட்டணை கவுன்சிலர், ராஜ்பரத் ஊராட்சி மன்ற தலைர் குமுதா, பா.ம.க. ஒன்றிய செயலாளர் சண்முகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.






