search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "property damage"

    • வழக்கம்போல நேற்று இரவு 11 மணியளவில் கடைைய மூடி விட்டு சென்றனர்.
    • சுமார் ½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தீர்த்தகுளம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் முன்னாள் தி.மு.க. கவுன்சிலர். இவரும், இவரது அண்ணன் தம்பிதுரை ஆகிய 2 பேரும் திருமணம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தேவையான அலங்காரப் பொருட்கள் செய்யும் வேலை செய்து வருகின்றனர். வழக்கம்போல நேற்று இரவு 11 மணியளவில் கடைைய மூடி விட்டு சென்றனர். நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென இவரது கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ மளமளவென கொளுந்து விட்டு எறிந்தது.

    இது குறித்து திண்டி வனம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. தீய ணைப்புத் துறை நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையிலான தீய ணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் ½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.8 லட்சம் மதிப்பிலான அலங்காரப் பொருட்கள் கருகி முற்றிலும் சேதமானது. இது குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ வைத்த மர்ம நபர்கள் யார்? தொழில் போட்டி காரணமாக யாரேனும் கடைக்கு தீ வைத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • மேலூர் அருகே குடிசை வீட்டில் தீயில் கருகி ரூ. 1 லட்சம் பொருட்கள் சேதமானது.
    • குப்பைக்கு தீ வைத்ததால் இந்த விபரீத சம்பவம் நடந்தது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பெருமாள்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது37), கூலித்தொழி லாளி. இவரது வீட்டருகே சிலர் குப்பைகளை குவித்து வைத்து தீ வைத்தனர்.

    அப்போது காற்று பலமாக வீசியதால் தீ அருகில் உள்ள ஜெயராஜின் குடிசை வீட்டுக்கு பரவியது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென எரிய தொடங்கியது. இதுகுறித்து உடனடியாக மேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அதன் பேரில் மேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னாண்டி தலைமை யில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 1மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இருந்தபோதிலும் தீ விபத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1லட்சத்து 10ஆயிரம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகிவிட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    • சின்னசேலத்தில் ஏற்பட்ட வன்முறையில் ரூ.20 கோடி பொருட்கள் சேதம் அடைந்தன.
    • பள்ளிக்கு முன்பு ஒன்று திரண்ட போராட்டக்காரர்கள் போலீசாரின் தடுப்புகளை மீறி பள்ளியில் நுழைந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள பெரிய நெசலூர் கிரா–மத்தை சேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17), இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 13- ந் தேதி–அதிகாலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடி–யில் இருந்து குதித்து தற்கொலைசெய்து கொண்டதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி பள்ளி தாளாளரை கைது செய்ய வேண்டும்.

    பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. க்கு மாற்ற வேண்டும், மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று கனியாமூரில் சக்தி மேல்நிலைப் பள்ளிக்கு முன்பு ஒன்று திரண்ட போராட்டக்காரர்கள் போலீசாரின் தடுப்புகளை மீறி பள்ளியில் நுழைந்தனர். அப்போது பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டிர்ந்த 17 பஸ், 4 டிராக்டர், 1 ஜே.சி.பி. மற்றும் 1 போலீஸ் வாகனம் உள்ளிட்ட 23 வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். மேலும் அங்கே நிறுத்தி வைத்திருந்த போலீசாரின் 29 மோட்டார் சைக்கிள் மற்றும் செய்தி–யாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட 30 மோட்டார் சைக்கிள் களுக்கும் தீ வைத்தனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தை முழுவதுமாக அடித்து நொறுக்கி வகுப்பறைகள், அலுவலகங்கள் ஆகியவற்றையும் தீ வைத்த–னர். இதில் சுமார் 20 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது. இதனால் பள்ளி வளாகம் போர்க்களம் போல் காட்சியளித்தது.

    ×