குடிசை வீட்டில் தீயில் கருகி ரூ. 1 லட்சம் பொருட்கள் சேதம்

மேலூர் அருகே குடிசை வீட்டில் தீயில் கருகி ரூ. 1 லட்சம் பொருட்கள் சேதமானது. குப்பைக்கு தீ வைத்ததால் இந்த விபரீத சம்பவம் நடந்தது.
குடிசை வீட்டில் தீயில் கருகி ரூ. 1 லட்சம் பொருட்கள் சேதம்
Published on

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பெருமாள்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது37), கூலித்தொழி லாளி. இவரது வீட்டருகே சிலர் குப்பைகளை குவித்து வைத்து தீ வைத்தனர்.

அப்போது காற்று பலமாக வீசியதால் தீ அருகில் உள்ள ஜெயராஜின் குடிசை வீட்டுக்கு பரவியது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென எரிய தொடங்கியது. இதுகுறித்து உடனடியாக மேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அதன் பேரில் மேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னாண்டி தலைமை யில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 1மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இருந்தபோதிலும் தீ விபத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1லட்சத்து 10ஆயிரம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகிவிட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com