search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம்  வன்முறையில் ரூ.20 கோடி பொருட்கள் சேதம்
    X

    சின்னசேலம் வன்முறையில் ரூ.20 கோடி பொருட்கள் சேதம்

    • சின்னசேலத்தில் ஏற்பட்ட வன்முறையில் ரூ.20 கோடி பொருட்கள் சேதம் அடைந்தன.
    • பள்ளிக்கு முன்பு ஒன்று திரண்ட போராட்டக்காரர்கள் போலீசாரின் தடுப்புகளை மீறி பள்ளியில் நுழைந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள பெரிய நெசலூர் கிரா–மத்தை சேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17), இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 13- ந் தேதி–அதிகாலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடி–யில் இருந்து குதித்து தற்கொலைசெய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி பள்ளி தாளாளரை கைது செய்ய வேண்டும்.

    பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. க்கு மாற்ற வேண்டும், மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று கனியாமூரில் சக்தி மேல்நிலைப் பள்ளிக்கு முன்பு ஒன்று திரண்ட போராட்டக்காரர்கள் போலீசாரின் தடுப்புகளை மீறி பள்ளியில் நுழைந்தனர். அப்போது பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டிர்ந்த 17 பஸ், 4 டிராக்டர், 1 ஜே.சி.பி. மற்றும் 1 போலீஸ் வாகனம் உள்ளிட்ட 23 வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். மேலும் அங்கே நிறுத்தி வைத்திருந்த போலீசாரின் 29 மோட்டார் சைக்கிள் மற்றும் செய்தி–யாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட 30 மோட்டார் சைக்கிள் களுக்கும் தீ வைத்தனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தை முழுவதுமாக அடித்து நொறுக்கி வகுப்பறைகள், அலுவலகங்கள் ஆகியவற்றையும் தீ வைத்த–னர். இதில் சுமார் 20 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது. இதனால் பள்ளி வளாகம் போர்க்களம் போல் காட்சியளித்தது.

    Next Story
    ×