மரக்காணத்தில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.கருணாகரனை கையும் களவுமாக பிடித்தனர்.
மரக்காணத்தில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது
Published on

விழுப்புரம்:

மரக்காணம் அருகே கழிக்குப்பம் கிராமத்தில் மேட்டு தெருவில் வசிப்பவர் கருணாகரன் (வயது 48). இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் மற்றும் போலீசார் கழிகுப்பத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த கருணாகரனை கையும் களவுமாக பிடித்தனர்.

கருணாகரனிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இன்ஸ்பெக்டர் பாபு கூறுகையில், தடைசெய்யப்பட்ட கஞ்சா, சாராயம் போன்றவற்றை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கையாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com