search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயில் அருகே ரெட்டணையில்  கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்: செஞ்சி மஞ்தான் தொடங்கி வைத்தார்
    X

    ரெட்டனையில் கலைஞரின் வரும்முன் காப்போம் மருத்துவ முகாமை செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.

    மயில் அருகே ரெட்டணையில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்: செஞ்சி மஞ்தான் தொடங்கி வைத்தார்

    • உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • பா.ம.க. ஒன்றிய செயலாளர் சண்முகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    விழுப்புரம்:

    மயிலம் அருகே ரெட்டணை கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மத்துவ துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமை தாங்கி மருத்துவ முகாமை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் மயிலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தேன்மொழி தலைமையில் மயிலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் டாக்டர் பாரதிதாசன் மேற்பார்வையில் மருத்துவ குழுவினர்கள் சிறப்பு பொது மருத்துவம், கண், காது, மூக்கு தொண்டை பல் மருத்துவம், வாய்புற்று நோய் கண்டறிதல், மகபேறு, குழந்தை மருத்துவம் தாய்சேய் நலம், எலும்பு மூட்டுவலி ஆகியவற்றிற்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் ரெட்டணை சுற்றியுள்ள கிராம மக்கள், நோயாளிகள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர். இதில் மயிலம் எம்.எல்.ஏ சிவக்குமார், முன்னால் எம்.எல்.ஏ. டாக்டர் மாசிலாமணி, மயிலம் ஒன்றிய குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன். மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரிமேலழகன், தேவதாஸ், மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், ஒன்றிய குழு துணை தலைவர் புனிதா ராமஜெயம் ரெட்டணை கவுன்சிலர், ராஜ்பரத் ஊராட்சி மன்ற தலைர் குமுதா, பா.ம.க. ஒன்றிய செயலாளர் சண்முகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×