search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு பட்டமளிப்பு விழா
    X

     யூனிவர்சிட்டி ஆப் நியூ ஜெருசலம் மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல் இஸ்ரேல் சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு மதிப்புறு முனைவர் விருது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.  

    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு பட்டமளிப்பு விழா

    • சாதனையாளர்களுக்கு மதிப்புறு முனைவர் விருது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    • 20-க்கும் மேற்பட்ட சாதனையா ளர்களுக்கு மதிப்புறு முனைவர் விருது வழங்கப்பட்டன.

    விழுப்புரம்:

    இந்திய தேசத்தின் 76-வது சுதந்திர தின ஆண்டிணை முன்னிட்டு யூனிவர்சிட்டி ஆப் நியூ ஜெருசலம் மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல் இஸ்ரேல் சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு மதிப்புறு முனைவர் விருது பட்டமளிப்பு விழா புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இதில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 20-க்கும் மேற்பட்ட சாதனையா ளர்களுக்கு மதிப்புறு முனைவர் விருது வழங்க ப்பட்டன. இவர்களில் கண்டமங்கலம் ஒன்றியம் வாணியம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை சரசு கல்விப்பணி, சமூகப்பணி, மற்றும் கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலங்களில் மக்களுக்கு ஆற்றிய மனித நேயப் பணி இவற்றினை பாராட்டி சிறப்பு அழைப்பாளர்கள் புதுவை மாநிலம் நெல்லித்தோப்பு எம்.எல்.ஏ. விவிலியம் ரிச்சர்ட்ஸ் ஜான்குமார் , சென்னை நீதிமன்ற நோட்டரி வக்கீல் தண்டபாணி , ரவிச்சந்திரன் , தேவமூர்த்தி இயக்குனர் அமெரிக்கன் கல்லூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பட்டமளித்து சிறப்புரையாற்றினார்கள்

    Next Story
    ×