மரக்காணம் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

நிஷா என்கிற குட்டிமா தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
மரக்காணம் அருகே  இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
Published on

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆட்சிக்காடு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 45). இவருடைய மகள் நிஷா என்கிற குட்டிமா (21). இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் வழக்கம்போல் நேற்று காலை வேலைக்கு சென்றார். பின்னர் இரவு வீட்டில் சமையல் அறையில் கயிறால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு சம்பவ இடத்திற்க்கு வந்து தூக்கில் பிணமாக தொங்கிய நிஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவையில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் நிஷா இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com