என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kuradir crowd"
- திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது.
- 118 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியாவது.-
விழுப்புரம் மாவட்ட த்தில் உள்ள 274 திருநங்கை களில் 25 திருநங்கைகள் இறப்பு, 37 திருநங்கைகள் இடம் பெயர்ந்துள்ளார்கள். மீதமுள்ள 212 திருநங்கைகள் தற்பொழுது மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். 2021 2022-ஆம் ஆண்டில் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக மர்லிமா என்ற திருநங்கைக்கு 25 ஆண்டு சேவையை பாராட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றி தழ் வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், இதுவரை 45 திருநங்கைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் சுயதொழில் மானியமும், தலா ரூ.4 ஆயிரம் வீதம் 118 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியுதவியும், 210 திருநங்கைகளுக்கு அடையாள அட்டையும், திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையும், 51 திருநங்கைகளுக்கு வீட்டுமனைப்பட்டாவும், 67 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டையும், 6 திருநங்கை களுக்கு தையல் எந்திரமும் வழங்கப்பட்டுள்ளது.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், திருநங்கை களின் பெரும்பாலான கோரிக்கையாக இருப்பது சுயமாக சுயதொழில் தொடங்குவதற்கு மானி யத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி, மாதாந்திர ஓய்வூதி யத்தொகை, மருத்துவ காப்பீடு அட்டை, இலவச வீட்டு மனைப்பட்டா, பசுமை வீடு போன்ற பல்வேறு கோரிக்கை களாகும். எனவே, திருநங்கை கள் தங்கள் அடிப்படை தேவைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கினால் உடனடி தீர்வின் மூலம் தீர்வுகாணப்பட்டு கோரிக்கைகள் நிறை வேற்றப்படும் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், உதவி இயக்குநர் (ஊராட்சி கள்) பொன்னம்பலம், கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி, நங்கையர் கூட்டமைப்பு தலைவி விமலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
