என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • சரவணன் விழுப்புரம் ரெங்கநாதன் சாலையில் கிளினிக் நடத்தி வருகிறார்.
    • பணத்தை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் ரூ. 65 ஆயிரம் திருட்டு போனது.  விழுப்புரம் பெரியார் நகரை சேர்ந்தவர் சரவணன் (50). டாக்டர். இவர் விழுப்புரம் ரெங்கநாதன் சாலையில் கிளினிக் நடத்தி வருகிறார். மேலும் அங்கு மருந்தகமும் நடத்தி வருகிறார். நேற்று இரவு சரவணன் கிளிக்கை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை அதனை திறக்க வந்த போது மெயின் கதவு உடைக்கப்பட்டு இருந்தனர்.

    இதனால் சரவணன் அதிர்ச்சி அடைந்தார் உள்ளி சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ. 65 ஆயிரத்தை யாரோ மர்ம ஆசாமி திருடி சென்று இருப்பதை கண்டு திடுக்கிட்டார். இது குறித்து விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் விசாரணை செய்து பணத்தை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். 

    • நாளை 24-ந் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
    • 10 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்ட மங்கலம் 110/22 கி.வோ. குமளம் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 24-ந் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இதனால் பண்ணக்குப்பம், ஆழியூர், வனத்தாம்பாளையம், குயிலாப்பாளையம், சேஷாங்கனூர், பி.எஸ்.பாளையம், வாதானூர், குறான்பாளையம், ஆண்டிபாளையம், திருமங்கலம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். மேற்கண்டவாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு அறிவித்துள்ளார்.

    • ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் ஆகஸ்ட் 16-ந்தேதி வரை 79 ரேஷன் கடைகளுக்கு 137 மையங்களில் பதிவு நடை பெறுகிறது
    • மின் வசதி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி தாலுகாவில் மகளிர் உரிமைத் திட்ட உதவி பெற முதற்கட்டமாக வரும் நாளை முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரை 83 ரேஷன் கடைகளுக்கு 87 மையங்களிலும், 2-ம் கட்டமாக வரும் ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் ஆகஸ்ட் 16-ந்தேதி வரை 79 ரேஷன் கடைகளுக்கு 137 மையங்க ளில் பதிவு நடை பெறுகிறது.இதனை முன்னிட்டு இரு தினங்களுக்கு முன்பாக விக்கிரவாண்டி, பாப்பனாப் பட்டு, சாமியாடி குச்சி பாளையம் உள்ளிட்ட சில மையங்களில் முன்னோட்ட பதிவு துவங்கியது.

    அதை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி நேரில் சென்று ஆய்வு செய்தார். பதிவு மையங்களில் மின் வசதி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.  பயனாளிகளிடம் வங்கி கணக்குகள் நடைமுறையில் உள்ளதா எனவும், சர்வர் வேலை செய்கிறதா எனவும், தினமும் டோக்கன் படி பதிவு செய்ய ஆலோசனை களை வழங்கினார். அப்போது தாசில்தார் ஆதி சக்தி சிவக்குமரி மன்னன், செயல் அலுவலர் அண்ணா துரை, தேர்தல் துணை தாசில்தார் ஜோதிப்பிரியா, வருவாய் ஆய்வாளர்கள் தெய்வீகன், மெகருனிஷா, ஒருங்கிணைப்பாளர்கள் தமிழழகன், கமலக்கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • மாலை 6 மணிக்கு மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை செஞ்சிக்கோட்டை மலர் தொடு வியாபாரிகள் ஒற்றுமை கழகத்தினர் செய்திருந்தனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி செட்டிப்பாளையம் குளக்கரையில் உள்ள மாரியம்மனுக்கு 35- ம் ஆண்டு ஆடிப்பூர பூப்பல்லக்கு பெருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் செஞ்சி அங்காளம்மன் கோவிலில் இருந்து அக்னி சட்டி ஊர்வலமும் அதனைத் தொடர்ந்து மேளதாளம் முழங்க 108 பால்குடம் ஊர்வலமும் வந்து மாரியம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் அன்னதானமும் மாலை 6 மணிக்கு மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இரவு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் மாரியம்மன் வீதி உலா வான வேடிக்கையுடன் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை செஞ்சிக்கோட்டை மலர் தொடு வியாபாரிகள் ஒற்றுமை கழகத்தினர் செய்திருந்தனர்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன் பிரபு மற்றும் அவரது நண்பர்கள் ஆத்தி குப்பம் பகுதியில் உள்ள களத்து மேட்டில் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்துள்ளனர்
    • பிரபுவின் தாய் மகேஸ்வரி மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே அனுமந்தை கிராமம் வடக்கு தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் பிரபு ( வயது 29) இவர் டிரைவராக வேலை செய்துவந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் பிரபு மற்றும் அவரது நண்பர்கள் ஆத்தி குப்பம் பகுதியில் உள்ள களத்து மேட்டில் நின்று கொண்டு பேசிக்கொண்டி ருந்துள்ளனர் .அப்போது அந்த இடத்திற்கு ஆத்திகுப்பம் கிராமத்தை சேர்ந்த பாவாடை மகன் பாரதி (வயது 27 )வந்துள்ளார் .பாரதி, பிரபுவை பார்த்து இங்கு ஏன் வந்தாய் என கேட்டுள்ளார் .

    இதன் காரணமாக இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாரதி அருகில் கிடந்ததடியை எடுத்து பிரபுவின் தலையில் தாக்கியுள்ளார். இதில் பிரபுவுக்கு படுகாயம் ஏற்பட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இசசம்பவம் குறித்து பிரபுவின் தாய் மகேஸ்வரி மரக்காணம்போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார் மீது மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபுவை தாக்கிய பாரதியை தேடி வருகின்றனர்.

    • விக்கிரவாண்டி அருகே பூச்சி மருந்து குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்நிலையில் நேற்று அதிக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே உள்ள வி.மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். டிராக்டர் டிரைவர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அடிக்கடி வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று அதிக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாய நிலத்தில் அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயக்கமாகி கிடந்தார். இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அன்பழகனை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணிகண்டன் காலை 7 மணியளவில் தனக்கு சொந்தமான நிலத்திற்கு சென்றார்.
    • மணிகண்டன் மீது பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே நடுக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). விவசாயி. இவர் இன்று காலை 7 மணியளவில் தனக்கு சொந்தமான நிலத்திற்கு சென்றார். அங்கு உயர்மின் அழுத்த கம்பி தாழ்வாக சென்றது. இக்கம்பி நிலத்தில் இருந்த தென்னை மரத்தில் உரசி சென்றது. இந்த மரத்தின் தென்னை ஓலை நிலத்திற்கு செல்லும் வழியில் படர்ந்து இருந்தது.

    அந்த வழியில் நடந்து சென்ற விவசாயி மணிகண்டன், வழியில் படர்ந்திருந்த தென்னை ஓலையை நகர்த்திவிட்டு செல்ல முயற்சித்தார். தென்னை மரத்தில் பாய்ந்த உயர் மின் அழுத்த மின்சாரம், மணிகண்டன் மீது பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை பார்த்த பக்கத்து நில உரிமையாளர்கள், இது தொடர்பாக மணிகண்டன் குடும்பத்தாருக்கும், மரக்காணம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

    அங்கு வந்த விவசாயி மணிகண்டன் குடும்பத்தார் கதறி அழுத காட்சி காண்போரின் மனதை கலங்கடித்தது. சம்பவ இடத்திற்கு வந்த மரக்காணம் போலீசார் மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை மாநிலம் கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த பகுதியில் உயர் மின் அழுத்த கம்பிகள் தாழ்வாக செல்கிறது என மின்துறை அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்துள்ளோம். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்தி ருந்தால் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

    • மேம்பாலம் அருகில் ரெயில்வே பாதையில் முதியவரின் பிணம் கிடந்தது.
    • தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் ரெயில்வே மேம்பாலம் அருகில் ரெயில்வே பாதையில் முதியவரின் பிணம் கிடந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் இது குறித்து திண்டிவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த தகவலின்படி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தவருக்கு சுமார் 60 வயது இருக்குமென போலீசார் தெரிவித்தனர்.

    மேலும், இறந்து கிடந்தவரின் சட்டை பையில் இருந்த ஆதார் கார்டில் சிவாஜி, மன்னார்சாமி தெரு, வசந்தபுரம், திண்டிவனம் என்று உள்ளதாக ரெயில்வே போலீசார் கூறினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், இறந்து போனவர் மேற்கண்ட விலாசத்தை சேர்ந்தவரா, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு ரெயில்வே பாதையில் வீசப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2023-ம் ஆண்டு பயிற்சியில் சேர்ந்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • பயி்ற்சியின் போது பிரபல தொழிற் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் ட்ரெய்னிங் உதவித்தொகையுடன் வழங்க ப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புர மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

    திண்டிவனம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை 2023-ம் ஆண்டு பயிற்சியில் சேர்ந்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு தொழிற்பயிற்சி நிலையம் திண்டிவனத்தில் 2023-ம் ஆண்டு சேர்க்கையில் சேர்ந்திட எஸ்.எஸ்.எல்.சி, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இதற்கான ேசர்க்கை 31.7.2023-ந்தேதி வரை நடைபெறும். விழுப்புரம் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் திண்டிவனம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வரும்போது தங்கள் அசல் ஆவணங்களான மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ் ஆகியவற்றை நேரில் கொண்டு வர வேண்டும்.

    தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750- உதவித்தொகை மற்றும் விலையில்லா லேப்டாப், சைக்கிள், பாடப் புத்தகம், மூடு காலணி, சீருடை, சீருடைக்கான தையற்கூலி, வரைபடக்கருவிகள், இலவச பஸ்பாஸ் ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும், பயி்ற்சியின் போது பிரபல தொழிற் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் ட்ரெய்னிங் உதவித்தொகையுடன் வழங்க ப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழிற் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்துதரப்படும். இந்த இணையதள வழியிலான கலந்தாய்வில் கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ.50 விண்ணப்பதாரர் நேரடியாக செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனியாருக்கு சொந்த மான குடியிருப்பு இடத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்கப்பட்டு வருகிறது.
    • அவலூர்பேட்டை சாலை யில் காலை 8 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே தாயனூர் கிராம த்தில் தனியாருக்கு சொந்த மான குடியிருப்பு இடத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த செல்போன் டவர் பொது மக்களின் குடியிரு ப்பு பகுதியில் அமைக்கப்பட்டு வருவதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்த ப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மேல்மலையனூர் அவலூர்பேட்டை சாலை யில் காலை 8 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் அவலூ ர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உரிய நடவடிக்கை எடு ப்பதாக கூறியதின்பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அரைமணி நேரம் போ க்குவரத்து பாதிக்க ப்பட்டது.

    • உற்சவ அம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் பால் தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம், விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்டவைகளாலும், வாசனை திரவியங்களாலும் அபிஷேகமும், தங்க கவச அலங்காரமும் நடந்தது.

    மேலும் ஒரு லட்சத்து ஒன்று வளையல்களாலும், உற்சவ அம்மனுக்கு 2 லட்சத்து 51 ஆயிரம் வளையல்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத்தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து நகராட்சி அலுவ லகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இன்று மாலைக்குள் சம்பளம் வழங்குவதாக உறுதி அளித்ததன் பெயரில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்று கூறி இன்று தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து நகராட்சி அலுவ லகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து நகர மன்ற தலைவர் ஊதியத்தை உடனடி யாக வழங்குவதாக கூறிய நிலையில் துப்புரவு அலுவலர் செந்தில்குமார் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் நல சங்க சட்ட ஆலோசகர் ஜெயராஜ் அதிகாரி களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிவில் இன்று மாலைக்குள் சம்பளம் வழங்குவதாக உறுதி அளித்ததன் பெயரில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர்.

    ×