என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • ரூபசேனா காந்தி சிலை அருகே உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார்.
    • 4.5 பவுன் தங்கச் செயினையும், ரூ.5 ஆயிரம் வைத்திருந்த கைப்பையினையும் பறித்து சென்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மாரி செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ரூபசேனா (வயது 38). இவர் திண்டிவனம் காந்தி சிலை அருகே உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார். இவர் வீட்டிற்கு வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்தி கீழே இறங்கினார். அப்போது வேறொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், ரூபசேனாவின் கழுத்தில் இருந்த 4.5 பவுன் தங்கச் செயினையும், ரூ.5 ஆயிரம் வைத்திருந்த கைப்பையினையும் பறித்து சென்றனர். இது தொடர்பாக ரூபசேனா அளித்த புகாரின் பேரில் ரோசனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நகைபறிப்பு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை யை கண்டித்து நடைபெற்றது.
    • வானூர் வட்டக் குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பஸ் நிலையம் அருகே மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை யை கண்டித்தும், மணிப்பூரில் பா.ஜ.க. அரசை பதவி விலகக் கோரியும், வானூர் வட்டக் குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வானூர் வட்டச் செயலாளர் முருகன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துக்குமரன், அறிவழகன், மாவட்ட குழு உறுப்பினர் அர்ஜுனன் ஆகியோர் கலந்துகொண்டு மணிப்பூரில் நடைபெற்ற பாலியல் கொடுமைகளை கண்டித்து கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மார்க் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

    • சித்ரா அளித்த புகாரின் பேரில் கலிவரதனை கைது செய்த விக்கிரவாண்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • வெளியில் வந்தவுடன், அவரை கைது செய்ய திருக்கோ விலூர் போலீசார் காத்திருக்கின்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் தெற்கு பா.ஜ.க. சார்பில் விக்கிரவாண்டி பஸ் நிலையம் எதிரில் கடந்த 23-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் வி.ஏ.டி. கலிவரதன் தலைமை தாங்கி உரையாற்றினார்.  இதில் பேசிய வி.ஏ.டி. கலிவரதன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., மு.க.ஸ்டாலின் சகோதரி செல்வி ஆகியோர் குறித்து ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசினார்.

    இது தொடர்பாக விக்கிரவாண்டி நகர தி.மு.க. துணை செயலாளர் சித்ரா அளித்த புகாரின் பேரில் கலிவரதனை கைது செய்த விக்கிரவாண்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் திருக்கோ விலூர் நகரமன்ற தலைவ ரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாள ருமான டி.என். முருகன், திருக்கோவிலூர் போலீசாரிடம் புகார் மனு அளித்தார். 

    விக்கிரவாண்டியில் நடைபெற்ற பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் பேசிய வி.ஏ.டி. கலிவரதன், திருக்கோவிலூர் நகராட்சி க்கு சொந்தமான 68 கடைகளை, ரூ.4 கோடி பெற்றுக்கொண்டு தனித்தனி நபர்களுக்கு நான் கொடுத்து விட்டதாக அவதூறாக பேசியுள்ளார். இது தவிர விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி குறித்தும் அவதூறாக பேசினார். எனவே, அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்தார். புகாரை பெற்று க்கொண்ட திருக்கோவிலூர் போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து விழுப்புரம் பா.ஜ.க. தெற்கு மாவட்ட தலைவர் வி.ஏ.டி. கலிவரதன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் வெளியில் வந்தவுடன், அவரை கைது செய்ய திருக்கோவிலூர் போலீசார் காத்திருக்கின்றனர். பா.ஜ.க. மாவட்ட தலைவர் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டடுள்ளது, அ க்கட்சி நிர்வாகிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியு ள்ளது.

    • திருச்சியில் கண்காட்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இக்கண்கா ட்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

    தமிழக வேளாண்மை த்துறை மற்றும் உழவர் நலத்துறை விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த சட்டசபை கூட்டத்தில் 2023-24ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் வேளாண் பெருமக்கள் பயன்பெறும் பொருட்டு நவீன தொழில்நு ட்பங்கள், கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் உணவு பதப்படுத்துபவர்கள் பயன் பெறும் வகையில் திருச்சியில் கண்காட்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அதன்படி வருகிற 27,28, 29 ஆகிய 3 நாட்கள் திருச்சியில் உள்ள கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் விவசாய கண்காட்சி நடைபெறுகிறது. இதில்வேளாண்மையை எளிமைப்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்பங்கள், வருமானத்தை பெருக்கு வதற்கான வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டு நுட்பங்கள் நவீன மரபுசார் நுட்பங்கள், பாரம்பரியமிக்க தொழில்நுட்பங்கள், ஏற்றுமதி வாய்ப்புகள், வேளாண் விளைபொ ருட்களை பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள். வேளாண் காடுகள், உயரிய தோட்டக்கலை தொழில்நுட்பங்கள், நவீன வேளாண் எந்தி ரங்கள், பசுமைக்குடில் தொழில்நுட்பங்கள், பாரம்பரிய நெல் மற்றும் பிற பயிர் ரகங்கள், பாரம்பரிய மரபுசார் வேளாண் கருவிகள், பாரம்பரிய உணவு அரங்கங்கள், வேளாண் மானிய உதவிகள் பெற முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற உள்ளன. கண்காட்சியை காண வரும் விவசாயிகள் ஆதார் நகலை எடுத்து வருமாறு கேட்டுக்கொண்டார். மேலும்கூடுதல் தகவலுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்பு கொள்ள வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இக்கண்கா ட்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    • மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து 14 பேர் பலியாகினர்.
    • தொடர் சிகிச்சை பெற்று வந்த முத்து நேற்று மாலை இறந்துவிட்டார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து 14 பேர் பலியாகினர். இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதில் ஒரு சிலர் வீடுகளில் படுத்தபடுக்கையில் தொடர் சிகிச்சையிலும், மருத்துவ கண்காணப்பிலும் இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தை சேர்ந்த முத்து (வயது 59). இவருக்கு நேற்று முன்தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரது குடும்பத்தார், அவரை மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்த சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த முத்து நேற்று மாலை இறந்துவிட்டார். இது குறித்து அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே, விஷ சாராயம் குடித்ததால் தான் முத்து இறந்துவிட்டார் என்று அவரது குடும்பத்தார் புகார் அளித்தனர். இதன் பேரில் மரக்காணம் வருவாய்த்துறை அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முத்துவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர் எதனால் இறந்தார் என தெரிய வரும் என்று போலீசார் கூறி, அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களை அனுப்பி வைத்தனர்.

    • மக்கள் முன்னணி சார்பில் செஞ்சி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது.
    • மணிப்பூர் கலவரக்காரர்களை கண்டித்தும், துணை போகும் பா.ஜ.க. அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விழுப்புரம்:

    பழங்குடி பெண்களை நிர்வாணமாக்கி கொடுமை செய்த மணிப்பூர் கலவரக்காரர்களை கண்டித்தும், துணை போகும் பா.ஜ.க. அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் பழங்குடி மக்கள் முன்னணி சார்பில் செஞ்சி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பழங்குடி மக்கள் முன்னணி செயலாளர் சுள்ளியம்மாள் தலைமை தாங்கினார். பொருளாளர் ஏழுமலை வரவேற்றார். கன்னியப்பன், கணேசன், சந்தானம், விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பழங்குடி மக்கள் முன்னணி நிறுவனர் சுடரொளி சுந்தரம், ம.தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் மணி, சட்ட ஆலோசகர் வெற்றிச்செல்வன், காங்கிரஸ் செஞ்சி நகர தலைவர் சூரியமூர்த்தி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் துரை திருநாவுக்கரசு, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சையத் உஸ்மான், அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் மழை மேடை பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் நன்மாறன் உட்பட பலர் கண்டன உரையாற்றினர். முடிவில் சுரேஷ் நன்றி கூறினார்.

    • சத்யாவுக்கு அடிக்கடி வந்த வயிற்று வலி அவதியுற்று வந்தார்.
    • வயிற்று வலி தாங்காமல் வீட்டில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம், செஞ்சி அருகே உள்ள வேம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 39). இவரது மனைவி சத்யா (35). இவருக்கு அடிக்கடி வந்த வயிற்று வலி அவதியுற்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலி தாங்காமல் வீட்டில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோர்ட்டுகளில் காந்தி, திருவள்ளுவர் படங்களை மட்டுமே வைக்க வேண்டும்.
    • படங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி யுள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோர்ட்டில் வக்கீல்கள், தங்களின் பணிகளை புறக்கணித்து போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கோர்ட்டுகளில் காந்தி, திருவள்ளுவர் படங்களை மட்டுமே வைக்க வேண்டும். மற்ற படங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி யுள்ளார். இதனை கண்டி த்தும் கோர்ட்டுகளில் அம்பேத்கர் படத்தை வைக்க அனுமதிக்க வலியுறுத்தியும், மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான அநீதிகளை கண்டித்தும் திண்டி வனம் வக்கீல்கள் இன்று பணி களை புறக்கணித்தனர்.

    கோர்ட்டு வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். அப்போது திடீரென வக்கீல்கள் அனைவரும் கோர்ட்டு வளாகத்தை விட்டு வெளியில் வந்த னர். சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு கோஷ ங்கள் எழுப்பினர்.

    அங்கு பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டிருந்த மயிலம் போலீசார், வக்கீ ல்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு நடைபெ ற்றது. இதனைத் தொடர்ந்து கூடுதல் போலீ சார் வரவழைக்கப்ப ட்டு சாலை மறியலில் ஈடுபட்ட வக்கீல்களை அப்புறப்ப டுத்தினர்.

    வக்கீல்கள் செய்த திடீர் சாலைமறியலால் சென்னை - திருச்சி நெடுஞ்சா லையில் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்க ப்பட்டது.

    • வேணு,பாஸ்கர் இருவரும் சேர்ந்து திண்டிவனத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.60 லட்சம் கடனாக வாங்கினர்.
    • தி.மு.க. பிரமுகர் பாஸ்கரன், தேர்கு ணம் பாஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக வேணு குற்றஞ்சாட்டியுள்ளார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் தேர்குணம் பகுதியை சேர்ந்தவர் வேணு. வெல்டிங் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவர்கள் இருவரும் சேர்ந்து திண்டிவனத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டு பத்திரத்தை அடமான மாக வைத்து ரூ.60 லட்சம் கடனாக வாங்கினர். இதில் தேர்குணம் பகுதியைச் சேர்ந்த வேணு ரூ.15 லட்சத்தை மட்டும் திருப்பி கட்டியுள்ளார். மீதி தொகை யை கட்டுவதற்கு காலதாம தம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக பாஸ்கருக்கும், வேணுவுக்கும் இடையே பிரச்சனை நீடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திருவக்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தி.மு.க. நிர்வாகியுமான பாஸ்கரன் என்பவர் மூலமாக வேணு விடம் பாஸ்கர் பேச்சு வார்த்தை நடத்தி பணத்தை கேட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தி.மு.க. நிர்வாகி பாஸ்கரன், தேர்குணத்தை சேர்ந்த பாஸ்கர் ஆகிய இருவரும் சேர்ந்து வேணுவை கடத்தினர். வானூர் அருகேயுள்ள காட்ராம்பாக்கத்தில் இருந்து கடத்தி, மாத்தூரில் உள்ள ஒரு வீட்டில் 3 நாட்கள் அடைத்து வைத்து பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். இது தொடர்பாக வேணு, வாட்ஸ்அப் மூலமாக அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து வேணுவின் மனைவி கிளியனூர் போலீஸ் நிலையம் சென்றார். தனது கணவரை கடத்தி சென்று மாத்தூரில் அடைத்து வைத்திருப்பதாகவும், அவரை மீட்டு தரவேண்டு மெனவும், வாட்ஸ்அப் தரவுகள் மூலம் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து கிளியனூர், கோட்டக்குப்பம் போலீசார் மாத்தூருக்கு விரைந்து சென்று வேணுவை மீட்டனர். மீட்கப்பட்ட வேணு, தன்னை தி.மு.க. நிர்வாகி பாஸ்கரன், தேர்குணம் பாஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் மதி, நீல மேகம், செல்வம் ஆகியோர் கடத்தி சென்று சித்திரவதை செய்ததாக கிளியனூர் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள அனைவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் தி.மு.க. பிரமுகர் பாஸ்கரன், தேர்கு ணம் பாஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக வேணு குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அவர்களை கைது செய்ய வேண்டுமென கோட்டக்குப்பம் போலீஸ் துணை சூப்பிரண்டி டம் வேணு மனு கொடுத்துள் ளார். இந்த சம்பவம் கிளியனூர் மற்றும் வானூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பக்கிங்காம் கால்வாயில் தடுப்பணை மற்றும் சுற்று கரை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    • இந்தப் பணி முறையாகவும், சரியாகவும் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்தில் கந்தாடு ஊராட்சி உள்ளது. இங்குள்ள முதலியார்பேட்டை கிராமத்திற்கும் காக்கா பள்ளம் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் தடுப்பணை மற்றும் சுற்று கரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு அரசு ரூ.161 கோடி ஒதுக்கி கடந்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது.

    பக்கிங்காம் கால்வாயில் தடுப்பணை கட்டும் பணி முடிவடைந்தது. தடுப்பனையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மணலால் கரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி முறையாகவும், சரியாகவும் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதாவது, மணல் கரை அமைக்கும் பகுதியில் முதலியார்பேட்டை, பச்சைபைத்தான் கொள்ளை, புதுப்பாக்கம், திருக்கனூர் தேவிகுளம், வண்டிபாளையம், வடகரம், ஆத்திகுப்பம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு 5 ஆயிரம் ஏக்கள் விளைநிலங்கள் உள்ளது. இந்த நிலங்களின் பாசன வசதிக்காவே அணை கட்டப்பட்டது. மேலும், பக்கிங்காம் கால்வாயின் இருபுறமும் கரை அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டது.

    ஆனால் இந்த அணையை கட்டும் ஒப்பந்ததாரர்கள் பக்கிங்காம் கால்வாயின் அகலத்தை குறைத்து இரண்டு புறமும் மணல் சுவர்களை அமைத்து வருகின்றனர். கால்வாயின் அகலத்தை குறைப்பதால், பருவ மழை காலத்தில் வெள்ள நீரானது, கிராமங்களுக்குள் புகும் அபாயம் உள்ளது. மேலும், கிராமப்புறங்களில் இருந்து வெளிவரும் மழைநீர் கால்வாய்க்கு செல்லும் வழியையும் ஒப்பந்ததாரர்கள் அடைத்துவிட்டனர். இதனால் மழைநீர் வெளியேறவும் வழியில்லாமல் உள்ளது. விளை நிலங்களில் உள்ள பயிர்கள் மட்டுமின்றி, வீடுகளும் மூழ்கும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே, இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி பக்கிங்காம் கால்வாயின் அகலத்தை குறைக்காமல் மணல் சுவர் அமைக்க வேண்டும். கிராமங்களில் இருந்து மழைநீர் வெளியேறும் வழியை திறந்து விட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரூ 1.18 கோடி மதிப்பீட்டில்புதிய தார்சாலை அமைப்பதற்கு பூமி பூஜை விழா இன்று காலையில் நடைபெற்றது.
    • புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் பொன்னக்குப்பம் ஊராட்சியில் இருந்து சி. என். பாளையம் செல்லும் சாலையை முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 59.08 லட்சம்மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்ப தற்கும், துத்திப்பட்டு கிரா மத்தில் இருந்து இருளர் காலனி மயான பாதை செல்லும் சாலையை ரூ 46 லட்சம்மதிப்பீட்டில் தார்சாலையாகஅமைப்பதற்கும்,துத்திப்பட்டு முதல் கிருஷ்ணா புரம் வரை செல்லும் சாலையை ரூ 1.18 கோடி மதிப்பீட்டில்புதிய தார்சாலை அமைப்பதற்கு பூமி பூஜை விழா இன்று காலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய குழுதலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர்நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 2 கோடியே 23 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில்செஞ்சி மத்திய ஒன்றிய செயலாளர் விஜயராகவன், அனந்தபுரம் நகர செயலாளர் சம்பத், பேரூராட்சி மன்ற தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் அலுமேலுகிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் மங்கை முனுசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாபு சிங்,வனக்குழு தலைவர் நடராஜன்,அவை தலைவர் வாசு, மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பழனி, நிர்வாகிகள் பிரதாப், முத்து, பாண்டியன், சுரேஷ், சரவணன் , அரசு ஒப்பந்த தாரர் சரவணன், செஞ்சி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பழனி உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு
    • இன்று அதிகாலை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்

    விழுப்புரம் மாவட்டம் தெற்கு பா.ஜ.க. சார்பில் விக்கிரவாண்டி பஸ் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் வி.ஏ.டி. கலிவரதன் தலைமை தாங்கினார்.

    இதில் மாவட்ட செயலாளர் தங்கம், பொருளாளர் குமாரசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் குமாரசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

    இதில் பேசிய வி.ஏ.டி. கலிவரதன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., மு.க.ஸ்டாலின் சகோதரி செல்வி ஆகியோர் குறித்து ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக தெரிகிறது.

    இதுதொடர்பாக விக்கிரவாண்டி நகர தி.மு.க. துணை செயலாளர் சித்ரா, விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்- இன்ஸ்பெக்டர் காத்தமுத்து ஆகியோர் வி.ஏ.டி. கலிவரதன் மீது வதந்திகளை பரப்புவது, கலகம் செய்வதற்கு தூண்டி விடுவது, ஆபாசமாக பேசுவது, அமைதியை சீர்குலைப்பது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    தொடர்ந்து விக்கிர வாண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையிலான போலீசார் பா.ஜ.க. தெற்கு மாவட்ட தலைவர் வி.ஏ.டி. கலிவரதனை தேடிவந்தனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை திருக்கோவிலூர் அருகே டி.தேவனூருக்கு போலீசார் விரைந்தனர். அங்கு வீட்டில் தூங்கி கொண்டிருந்த வி.ஏ.டி. கலிவரதனை போலீசார் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பா.ஜ.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×