search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP Chairman"

    • சித்ரா அளித்த புகாரின் பேரில் கலிவரதனை கைது செய்த விக்கிரவாண்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • வெளியில் வந்தவுடன், அவரை கைது செய்ய திருக்கோ விலூர் போலீசார் காத்திருக்கின்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் தெற்கு பா.ஜ.க. சார்பில் விக்கிரவாண்டி பஸ் நிலையம் எதிரில் கடந்த 23-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் வி.ஏ.டி. கலிவரதன் தலைமை தாங்கி உரையாற்றினார்.  இதில் பேசிய வி.ஏ.டி. கலிவரதன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., மு.க.ஸ்டாலின் சகோதரி செல்வி ஆகியோர் குறித்து ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசினார்.

    இது தொடர்பாக விக்கிரவாண்டி நகர தி.மு.க. துணை செயலாளர் சித்ரா அளித்த புகாரின் பேரில் கலிவரதனை கைது செய்த விக்கிரவாண்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் திருக்கோ விலூர் நகரமன்ற தலைவ ரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாள ருமான டி.என். முருகன், திருக்கோவிலூர் போலீசாரிடம் புகார் மனு அளித்தார். 

    விக்கிரவாண்டியில் நடைபெற்ற பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் பேசிய வி.ஏ.டி. கலிவரதன், திருக்கோவிலூர் நகராட்சி க்கு சொந்தமான 68 கடைகளை, ரூ.4 கோடி பெற்றுக்கொண்டு தனித்தனி நபர்களுக்கு நான் கொடுத்து விட்டதாக அவதூறாக பேசியுள்ளார். இது தவிர விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி குறித்தும் அவதூறாக பேசினார். எனவே, அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்தார். புகாரை பெற்று க்கொண்ட திருக்கோவிலூர் போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து விழுப்புரம் பா.ஜ.க. தெற்கு மாவட்ட தலைவர் வி.ஏ.டி. கலிவரதன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் வெளியில் வந்தவுடன், அவரை கைது செய்ய திருக்கோவிலூர் போலீசார் காத்திருக்கின்றனர். பா.ஜ.க. மாவட்ட தலைவர் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டடுள்ளது, அ க்கட்சி நிர்வாகிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியு ள்ளது.

    ×