என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • கவுரி ஆனத்தூருக்கு வருவதாக கூறியதால், அவரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார்.
    • மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.

    விழுப்புரம்: 

    திருவெண்ணைநல்லூர் அருகே ஆனத்தூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. கோவிலுக்கு சென்று வழிபட காரப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 47) என்பவர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கவுரி (45) என்பவர் ஆனத்தூருக்கு வருவதாக கூறியதால், அவரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார்.

    அரசூர் - பண்ருட்டி சாலையில் ஆனத்தூர் ஏரிக்கரை அருகே சென்ற போது, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் கவுரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தங்கதுரை லேசான காயங்களுடன் சாலையில் கிடந்தனர். அவ்வழியே சென்றவர்கள் இவர்களை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி கவுரி இறந்துபோனார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று பா.ம.க. சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
    • போலீசார் சாலை மறியல் போராட்டம் நடத்தியவர்களை அப்புறப்படுத்தினர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் விலை நிலங்களில் நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்தின் சார்பில் கால்வாய் அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டனர் இதனால் நெய்வேலி என்.எல்.சி.நிர்வாகத்தினை கண்டித்து நேற்று பா.ம.க. சார்பில் முற்றுகை போ ராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மரக்காணம் நகர பா.ம.க .சார்பில் விவசாயிகளுக்காக போராட்டம் நடத்திய அன்புமணியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி மரக்காணம்கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று மாலை சாலை மறியல் போராட்டம் நடத்தினர் .இதனைப் பார்த்த மரக்காணம் போலீசார் சாலை மறியல் போராட்டம் நடத்தியவர்களை அப்புறப்படுத்தினர். இந்நிலையில் மரக்காணத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நகர செயலாளர் ரமேஷ் ,முன்னாள் நகர செயலாளர் திருநாவுக்கரசு ,கர்ணன், மணிகண்டன், விநாயகமூர்த்தி உள்பட 25 பேர்கள் மீது மரக்காணம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • நேற்று இரவு புதுவையில் இருந்து ஜெகநாதபுரத்திற்கு இ.சி.ஆர். சாலை வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
    • புதுவை நோக்கி எதிரில் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம ்மரக்காணம் அருகே ஜெகநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஹீரா சந்த் (வயது 20). இவரும் இவரது அக்கா வீட்டுக்காரர் சதீஷ்குமார் (27) ஆகிய இருவரும் நேற்று இரவு புதுவையில் இருந்து ஜெகநாதபுரத்திற்கு இ.சி.ஆர். சாலை வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை சதீஷ்குமார் ஒட்டி வந்தார்.

    மரக்காணம் அருகே செட்டி நகர் சாலையில் வந்தபோது புதுவை நோக்கி எதிரில் வந்த கார் மோட்டார சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஹீரா சந்த் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் சாலையில் கிடந்த சதீஷ்குமாரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பான புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு மரக்காணம் போலீசார் விரைந்து வந்தனர். விபத்தில் பலியான ஹீரா சந்த்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பூஜைகளை முடித்துக் கொண்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.
    • அம்மனின் கழுத்தில் இருந்த தாலிப் பொட்டையும் காணவில்லை.

    விழுப்புரம்:

    திருவெண்ணை நல்லூர் அருகே மேல்தனி யாளம்பட்டு கிராமத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பூசாரி ராஜீவ்காந்தி (வயது 36) வழக்கம்போல நேற்றிரவு பூஜைகளை முடித்துக் கொண்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவிலின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டார். உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தார். மேலும், அம்மனின் கழுத்தில் இருந்த தாலிப் பொட்டையும் காணவில்லை. இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசாரிடம் ராஜீவ்காந்தி புகாரளி த்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார், மேல்தனியாளம்பட்டிற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாவட்டங்களில் 2 கட்டங்களாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடத்தப்ப டும் என அறிவித்தார்.
    • 2,77,236 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் கலைஞர் மகளிர் உரிமைத்தி ட்டத்தின்கீழ், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் எனவும், தகுதியான பயனாளிகளை தேர்வு செய்திடும் வகையில், மாவட்டங்களில் 2 கட்டங்களாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடத்தப்ப டும் என அறிவித்தார். அதனடி ப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ், தகுதியான பயனாளிகளை தேர்வு செய்திட விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24.07.2023 அன்று தொடங்கி 4.08.2023 வரை நடைபெறவுள்ளது. இதில் 3,41,209 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணிகள் நடைபெ ற்று வருகிறது.

    முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம்களில், முதல் 3 நாட்களில் 1,26,769 விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக பெறப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் விண்ணப்ப ங்களை பதிவு செய்வதற்கு 1092 தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், ஒவ்வொரு முகாமிலும் பயனாளிகளின் விண்ணப்பங்களைச் சரிபார்க்கவும், பூர்த்தி செய்யப்படாத விண்ண ப்பங்களை பூர்த்தி செய்வத ற்கும் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டு ள்ளது.

    இரண்டாம் கட்ட முகாம் 5.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெறவுள்ளது. இதில் 690 விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும். இம்முகாமில், 2,77,236 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும்.  அனைத்து முகா ம்களிலும் பொதுமக்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளான இருக்கைகள் வசதி, குடிநீர், கழிவறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோ ருக்கான சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார்.

    • ஒரு அறையில் இருந்த பொருட்கள் மட்டும் தீப்பிடித்து எரிந்தது.
    • முகுந்தன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தலக்காணிக்குப்பம் கிராமம் உள்ளது. இந்த ஊராட்சிக்கு மகாலட்சுமி தேவேந்திரன் தலைவராக உள்ளார். இவர் அக்கிராமத்திலேயே உள்ள, அவருக்கு சொந்தமான தளம் ஒட்டிய வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டில் உள்ள ஒரு அறையில் இருந்த பொருட்கள் மட்டும் தீப்பிடித்து எரிந்தது. இத்தகவல் அறிந்த வானூர் தீயணைப்பு அலுவலர் முகுந்தன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி தேவேந்திரன் வீட்டில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், லேப்டாப், எல்.இ.டி. டிவி, இன்வெர்ட்டர் மற்றும் மின் சாதன பொருட்கள் எரிந்து நாசமாயின. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு அலவலர் தெரிவித்தார். இது தொடர்பாக பிரம்மதேசம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றினை 15.10.2021 முதல் அரசு அறிவித்தது.
    • உயிர்காக்க உதவும் ஒரு நற்கருணை வீரருக்கு ரூ.5,000 வழங்கப்படும்.

    விழுப்புரம்:

    சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை, பொன்னான நேரத்தில், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து உயிர்காக்கும் நற்கருணை வீரருக்கு ரூ.5,000 கருணைத் தொகை வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் பழனி தகவல். விழுப்புரம் மாவட்ட த்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை, கோல்டன் ஹவர்ஸ் என்று சொல்லக்கூடிய பொன்னான நேரத்தில், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து, உதவி புரியும் நபர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றினை 15.10.2021 முதல் அரசு அறிவித்தது. அதன்படி பொன்னான நேரத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவிபுரியும் நபர்களுக்கு ஏற்கனவே மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த ரூ.5,000 தொகையுடன், மாநில அரசின் பங்களிப்பாக சாலைப்பாதுகாப்பு நிதியிலிருந்து கூடுதலாக ரூ.5,000 மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி நற்கருணை வீரர்கள் விபத்து நடைபெற்ற பகுதியினை சார்ந்த காவல்நிலையம் மற்றும் பாதிக்கப்பட்டவரை சேர்க்கப்படும் மருத்துவமனையிலிருந்து பரிந்துரை செய்யப்படுவார்கள். இந்நிலையில் ஒரு சாலை விபத்தில் ஒன்றுக்கு மேற்பட்டு பாதிக்கப்பட்ட நபர்களின் உயிர்காக்க உதவும் ஒரு நற்கருணை வீரருக்கு ரூ.5,000 வழங்கப்படும். மேலும் ஒரு விபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் உயிர் காக்க உதவும் ஒன்றுக்கு மேற்பட்ட நற்கருணை வீரர்களுக்கு ரூ.5,000 தொகையினை சமமாக பகிர்ந்தளிக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்ள ப்படுகிறது. இத்திட்டமானது 31.03.2026 வரை நடை முறையில் இருக்கும் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    • திண்டிவனம் தலைமை தபால் நிலையம் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
    • மணிப் பூர் அரசையும் டிஸ்மிஸ் செய்யக்கோரி கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

    விழுப்புரம்:

    மணிப்பூரில் பெண்கள் மீதான கூட்டு பலாத்கார வன்கொடுமை செய்த வர்களை கண்டித்தும், இதற்கு காரணமாக இருந்த, மணிப் பூர் அரசையும் டிஸ்மிஸ் செய்யக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட் சி விழுப்புரம் மாவட்ட மகளிர் அமைப்பு சார்பில் திண்டிவனம் தலைமை தபால் நிலையம் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவரும்மாவட்ட மகளிர் விடுதலை இயக்கம்துணை அமைப்பாளருமான ஷீலா தேவி சேரன்தலைமை தாங்கினார். விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சேரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் நகரமன்ற துணைத்தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், நகர செயலாளர் இமையன்,மாவட்ட பொருளாளர் திலீபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.தொகுதி பொறுப்பாளர் வக்கீல் பூபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜசேகர்,சக்திவேல் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திண்டிவனத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினர்
    • பரிசோதித்த டாக்டர்கள் ராஜசேகர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    விழுப்புரம்:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 53). வியாபாரி. அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினர் சக்திவேல் (45). இவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திண்டிவனத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினர். அப்போது திண்டிவனம் - புதுவை 4 வழிச்சாலையில் காட்ராம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தனர். இவர்களுக்கு முன்னால் சவுக்கு கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி, எடை போடுவதற்காக எடைமேடைக்கு திரும்பியது. இதனை எதிர்பாராத சக்திவேல் நிலைதடுமாறி, மோட்டார் சைக்கிளுடன் லாரி மீது மோதினார்.

    விபத்தில் ராஜசேகர், சக்திவேல் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். அவ்வழியே சென்றவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ராஜசேகர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், பலத்த காயமடைந்த சக்திவேலுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த கிளியனூர் இன்ஸ்பெ க்டர் பாலமுரளி மற்றும் போலீசார், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பாடப் பிரிவுகளில் பயின்று வருகின்றனர்.
    • கல்லூரி மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    விழுப்புரம்:

    திண்டிவனத்தில் கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பாடப் பிரிவுகளில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் வழக்கம்போல இன்று கல்லூரிக்கு வந்தனர். காலை 10 மணியளவில் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களும் ஒன்று கூடினர். மணிப்பூரில் பெண்கள் மீதான கூட்டு பலாத்கார வன்கொடுமை செய்தவர்களை கண்டித்தும், இதற்கு காரணமாக இருந்த மணிப்பூர் அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். கல்லூரி மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தபோதும் மாணவர்கள் வகுப்பிற்கு செல்லாமல் அங்கேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சிங்கவரம் கிராமத்தில் மலை மீது பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவில் உள்ளது.
    • கோவிலில் கொள்ளை அடிக்க சதி திட்டம் திட்டுகிறார்களா என்ற கோணத்தில் அறநிலைத்துறையினர் இது குறித்து செஞ்சி போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

    விழுப்புரம்:

    செஞ்சியிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் சிங்கவரம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் மலை மீது பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவில் உள்ளது. இதுமிகவும் பழமை வாய்ந்ததாகும். கோவிலில் கற்பாறையால் ஆன மூலவர் மட்டுமல்லாமல் பஞ்சலோக சிலைகள் வைத்து வழிபாடு நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 7.25 மணியளவில் கோவில் உள்ள மலை மீது டிரோன் கேமரா ஒன்று பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த டிரோன் சுமார்10 நிமிடங்கள் பறந்து அப்பகுதியை படம் எடுத்துக் கொண்டிருந்தது. பின்னர் மலையின் பின்பகுதியில் டிரோன் கேமரா மறைந்து விட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சமூக விரோதிகள் யாராவது கோவிலில் கொள்ளை அடிக்க சதி திட்டம் திட்டுகிறார்களா என்ற கோணத்தில் அறநிலைத்துறையினர் இது குறித்து செஞ்சி போலீசில் புகார் கொடுத்துள்ளனர். செஞ்சி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். இதேபோல் சிங்கவரத்தை அடுத்த மேளச்சேரி காப்புக்காட்டில் உள்ள பச்சையம்மன் கோவிலை சுற்றியும் டிரோன் பறந்ததாக கூறப்படுகிறது.

    • சவுந்தர்ராஜன், தனது குடும்பத்தினருடன் காரில் சென்றார்.
    • சவுந்தர்ராஜன் மற்றும் அவரது குடும்பத்தார் ஒன்று சேர்ந்து, அரசு பஸ் டிரைவருக்கு தர்மஅடி கொடுத்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அச்சரப்பாக்கம் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன், தனது குடும்பத்தினருடன் காரில் சென்றார். அப்போது, திண்டிவனம் புறவழிச் சாலை தீர்த்தகுளத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, ஓசூரில் இருந்து புதுவை சென்று கொண்டிருந்த அரசு பஸ் கார் மீது மோதியது. இதில் சவுந்தர்ராஜன் தனது குடும்பத்தாருடன் வந்த கார் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்றவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சவுந்தர்ராஜன் மற்றும் அவரது குடும்பத்தார் ஒன்று சேர்ந்து, அரசு பஸ் டிரைவருக்கு தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அரசு பஸ் டிரைவரும், சவுந்தர்ராஜனும் சமாதானமாகி அங்கிருந்து சென்றனர். இதனை அவ்வழியே சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். இது திண்டிவனம் பகுதியில் வைரலாக பரவி வருகிறது.

    ×