மரக்காணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி

நேற்று இரவு புதுவையில் இருந்து ஜெகநாதபுரத்திற்கு இ.சி.ஆர். சாலை வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். புதுவை நோக்கி எதிரில் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
மரக்காணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி
Published on

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம ்மரக்காணம் அருகே ஜெகநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஹீரா சந்த் (வயது 20). இவரும் இவரது அக்கா வீட்டுக்காரர் சதீஷ்குமார் (27) ஆகிய இருவரும் நேற்று இரவு புதுவையில் இருந்து ஜெகநாதபுரத்திற்கு இ.சி.ஆர். சாலை வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை சதீஷ்குமார் ஒட்டி வந்தார்.

மரக்காணம் அருகே செட்டி நகர் சாலையில் வந்தபோது புதுவை நோக்கி எதிரில் வந்த கார் மோட்டார சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஹீரா சந்த் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் சாலையில் கிடந்த சதீஷ்குமாரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு மரக்காணம் போலீசார் விரைந்து வந்தனர். விபத்தில் பலியான ஹீரா சந்த்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com