என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது.
    • காலை 10மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் எம்.சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு.

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம். துணை மின்நிலையத்தில் இருந்து பள்ளித்தென்னல் செல்லும் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (வியாழக்கிழமை )காலை 10மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இதனால் கண்டமங்கலம், பள்ளித்தெ ன்னல், நவமால்மருதூர், நவமால்கா ப்பேரிஉள்ளிட்ட 4 கிராமங்களுக்கும் மின்சாரம் நிறுத்தப்படும்.

    இதேப்போல சொர்ணாவூர் துணை நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் பரசுரெட்டிபாளையம் உயர ழுத்த மின்பாதை களில் பராமரிப்பு பணி கள் மேற்கொள்ள இரு ப்பதால் ராம்பாக்கம், கொங்கம்பட்டு, ஆர்.ஆர்.பாளையம், சொக்க ம்பட்டு, மேட்டு ப்பாளையம், குச்சிபாளையம், பரசுரெட்டி பாளையம் ஆகிய 7 கிராமங்க ளுக்கும் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • பாபு கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
    • 3 பவுன் நகை திருடப்பட்டிருந்தது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள கோனேரிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 40). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி குழந்தைகளுடன் வசித்து வந்தார். கடந்த 2 தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களிலும் அனல் காற்று வீசுகிறது. இதனால் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் வெளியில் படுத்து உறங்கினார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் பாபு கண் விழித்தார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் நகை திருடப்பட்டிருந்தது. இது தொடர்பாக பாபு அளித்த புகாரின் பேரில் ஓலக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது.
    • காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் துணை மின்நிலையத்தில் இருந்து கெங்கராம்பாளையம் செல்லும் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (2-ந் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    இதனால் ஆழியூர், பள்ளிநேலியனூர், பள்ளிச் சேரி, எல்.ஆர்.பாளையம், கெங்கராம்பாளையம், மல்ராஜன் குப்பம், கரைமேடு, பூசாரிபாளையம், வி.பூதூர், பள்ளி கொண்டாபுரம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் எம்.சிவகுரு அறிவித்துள்ளார்.

    • கடந்த 2 மாதங்களுக்கு முன் எக்கியார் குப்பம் மற்றும் மரக்காணம் பகுதிகளை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர்.
    • விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ சசாங்சாய் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார் .

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே எக்கியார் குப்பம் கடற்கரையோரம் விற்ற விஷ சாராயத்தை குடித்துவிட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன் எக்கியார் குப்பம் மற்றும் மரக்காணம் பகுதிகளை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். இதேபோல் 50-க்கும் மேற்பட்டோர் விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நபர்களில் ஒருவர் கடந்த வாரம் இறந்து விட்டார். இந்நிலையில் எக்கியார் குப்பம் பகுதி கடற்கரை ஓரம் இருப்பதால் ஒரு சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தொடர்ந்து ரகசிய தகவல்கள் கிடைத்து வருகின்றது.

    இதனால் அப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட எந்தவித போதைப் பொருட்களை விற்பனை செய்வதையும் முழுமையாக தடை செய்ய வேண்டும் என விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ சசாங்சாய் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார் . இதனை தொடர்ந்து கோட்டகுப்பம் டிஎஸ்பி சுனில் மேற்பார்வையில் மரக்காணம் காவல்து றை ஆய்வாளர் பாபு தலைமையில் மரக்கா ணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, திவாகர் மற்றும் போலீசார் எக்கியார் குப்பம் மீனவர் பகுதிக்கு அந்த பகுதி பொதும க்களிடம் இந்தப் பகுதியில் யாராவது போதை பொருட்கள் விற்பனை செய்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். பொது மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்ய முடியும் என கோரி விழிப்புணர்வு அளித்தனர். மேலும் இப்பகுதியில் ஆள் நடமா ட்டம் இல்லாத இடத்தில் கள்ளச்சாரா யம் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை ரகசியமாக கண்காணித்து கைது செய்யும் வகையில் டிரோன் கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கார்த்தி மரக்காணம் பகுதியில் தங்கி, சவுண்டு சர்வீஸ் வேலை செய்து வந்தார்.
    • மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த கார்த்திக் மயங்கி விழுந்தார்.

    விழுப்புரம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 42). இவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் தங்கி, சவுண்டு சர்வீஸ் வேலை செய்து வந்தார். இவர் மரக்காணம் அருகேயுளள கோமுட்டி சாவடிகுப்பத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்கு ஒலி, ஒளி அமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து அவரது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் ஏறி, மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கார்த்திக் சென்றார். அப்போது மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த கார்த்திக் மயங்கி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது தொடர்பாக மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசாரின் தொடர் நடவடிக்கையால் இங்கு சாராயம் காய்ச்சுவதும், விற்கப்படுவதும் முற்றிலும் ஒழிக்கப்பட்டது.
    • போலீசார் போத்துவாய் மலைப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்ட செஞ்சியில் உள்ள போத்துவாய் மலைப்பகுதியில் கடந்த காலங்களில் சாராயம் காய்ச்சி விற்கப்பட்டு வந்தது. போலீசாரின் தொடர் நடவடிக்கையால் இங்கு சாராயம் காய்ச்சுவதும், விற்கப்படுவதும் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. இந்நிலையில் போத்துவாய் மலைப் பகுதியில் சாராய ஊறல் உள்ளதாக துணை போலீஸ் சூப்பிரண்டு கவின்னாவிற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அவரது மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் போத்துவாய் மலைப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அங்கிருந்த சாராய ஊறலை போலீசார் கைப்பற்றியனர். அதிலிருந்த 100 லிட்டர் சாராயத்தை தரையில் கொட்டி அழித்தனர். இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு கவின்னா கூறுகையில், தற்போது அழிக்கப்பட்டுள்ள சாராய ஊறல் மிகவும் பழைய ஊரலாகும். நாங்கள் தொடர்ந்து இப்பகுதியை கண்காணித்து வருகிறோம். இதனால் இங்கு சாராயம் காய்ச்சுவது ஒழிக்கப்பட்டுளளது. யாரேனும் சாராயம் காய்ச்சினால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என எச்சரித்தார்.

    • உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று திரும்பிய 2 மளிகை கடைக்காரர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விக்கிரவாண்டி:

    புதுவை மாநிலம் ஏம்பலம் பகுதி நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 50). மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இவர் கடலூர் மாவட்டம் செல்லஞ்சேரியை சேர்ந்த மதியழகன் (60) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள ராதாபுரத்திற்கு நேற்று மாலை சென்றார். அங்கு நடந்த உறவினர் விழாவில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு வீடு திரும்பினர்.

    திருக்கனூர் அருகேயுள்ள எம்.குச்சிபாளையம் அருகே வந்து கொண்டிருந்த போது, எதிரில் வந்த காரின் முன்பக்க டயர் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்து வந்த மதியழகன் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயங்களுடன் தண்டபாணி சாலையில் துடித்துக் கொண்டிருந்தார். அவ்வழியே சென்றவர்கள், தண்டபாணியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை தண்டபாணி உயிரிழந்தார். இது தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று திரும்பிய 2 மளிகை கடைக்காரர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் செல்லஞ்சேரி, நத்தமேடு கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • குற்றசம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்காணிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
    • ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சசாங்சாய் பொறுப்பேற்ற பிறகு குற்றசம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்காணிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.அதன்படி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி, காட்டுப்பகுதிகளில் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்க உத்தரவி ட்டார். இதையடுத்து திண்டிவனம் அருகேயுள்ள ஆச்சிப்பாக்கம் காட்டுப் பகுதியில் குற்றவாளிகள் நடமாட்டம் குறித்து ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி இன்று நடைபெற்றது.

    திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மேற்பா ர்வையில் கண்காணிப்பு பணி நடைபெற்றது. அதே சமயத்தில் காட்டுப்பகுதிக்குள் ஓலக்கூர் போலீசார் அனுப்பிவைக்கப்பட்டனர். அப்போது காட்டுப் பகுதியில் கூட்டம் கூட்ட மாக அமர்ந்து மது அருந்திய வர்கள், பணம் வைத்து சூதாடியவர்கள், டிரோன் கேமராவை கண்டவுடன் அலறியடித்து ஓடினர்.இவர்களை மடக்கி பிடித்த ஓலக்கூர் போலீசார், பொது இடங்களில் அமர்ந்து மது அருந்தக்கூடா தெனவும், சூதாட்டம் விளையாடக்கூடாது என்றும் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினர். மேலும், டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • தமிழக அளவிலான மாநில கைப்பந்து போட்டி
    • ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி முதல் 15 -ந் தேதி வரை சேலத்தில் நடைபெறஉள்ளது.

    விழுப்புரம்:

    தமிழக அளவிலான மாநில கைப்பந்து போட்டி வரும் ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி முதல் 15 -ந் தேதி வரை சேலத்தில் நடைபெறஉள்ளது. மாநில அளவிலான போட்டியில்பங்கேற்க விழுப்புரம் மாவட்ட வாலிபால் வீரர்கள் 18 வயதிற்குற்பட்டவர்களை தேர்வுசெய்யும் பணி விக்கிரவாண்டி சூர்யா கல்லுாரியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் நடந்தது. போட்டிக்கு மாவட்ட தலைவர் கவுதம சிகாமணி தலைமை தாங்கி வீரர்கள் தேர்வு போட்டியை தொடங்கி வைத்தார்.

    மாநில வாலிபால் கழக இணை செயலாளர் மணி முன்னிலையில் நடந்த போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். மிகச்சிறந்த முறையில் வாலிபால் விளை யாடும் 12 வீரர்கள் தேர்வு செய்ய போட்டி நடந்தது.நடுவர்கள் காளிதாஸ், ஜோதிப்பிரியா, மணிகண்டன், சுபாஷ், சேதுபதி, பிரேம், பாலாஜி, அரவிந்த் ஆகியோர் வீரர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    • வழுதாவூர் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு
    • 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்ட மங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் வழுதாவூர் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (31 -ந் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

    இதனால் பெரியபாபுசமுத்திரம், வினாயகம்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். மேற்கண்டவாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு அறிவித்துள்ளார்.

    • மரக்காணம் அருகே ஆட்சி காடு தண்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி ராசாத்தி.
    • ஷேர் ஆட்டோ மீது மோதியது.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே ஆட்சி காடு தண்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி ராசாத்தி (வயது 45).இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த சில பெண்களும் நேற்று வழக்கம்போல் மண்ட வாய் புதுகுப்பம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இறால் குஞ்சு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு கூலி வேலைக்கு சென்றனர். இவர்கள் வேலையை முடித்துவிட்டு ஷேர் ஆட்டோவில் மீண்டும் வீடு திரும்பினர்.

    இவர்கள் வந்த ஷேர் ஆட்டோவை பொன்னுசாமி ஓட்டி வந்தார். இந்த ஷேர் ஆட்டோ மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் மண்ட வாய் என்ற இடத்தில் வந்த போது சென்னையில் இருந்து புதுவைக்கு சென்ற கார், ஷேர் ஆட்டோ மீது மோதியது. இதில் ராசாத்தி, நாகம்மாள் ,கலைச்செல்வி ,வசந்தி, பிரபாவதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராசாத்தி நேற்றிரவு இறந்துவிட்டார். மற்ற 4பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.இச்சம்பவம் குறித்து அவர்களது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹசரத் சையத் யூசூப் ஷா அவுலியாதர்காவில் வருகிற 1-ந் தேதி சந்தன கூடு உற்சவம்
    • பிறை கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் பிறை கொடி ஊர்வலமும் நடைபெற்றது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மந்தவெளி பகுதியில் உள்ள ஹசரத் சையத் யூசூப் ஷா அவுலியாதர்காவில் வருகிற 1-ந் தேதி சந்தன கூடு உற்சவம் நடைபெற உள்ளது.இதை முன்னிட்டு செஞ்சி பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள ஹசாத் சையத் இஸ்மாயில் ஷா அவுலியாதர்காவில் பிறை கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் பிறை கொடி ஊர்வலமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு தர்காவில் மாலை அணிவித்து பாத்தியா நடத்தினர். தொடர்ந்து பிறைகொடி ஊர்வலத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், வல்லம் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை,நகர செயலாளர் கார்த்திக், அமைப்பு சாரா தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் தமிழரசன் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்,திமுக நிர்வாகிகள்.சந்தனக்கூடுவிழா கமிட்டி நிர்வாகிகள் ஜான் பாஷா, அசாதுல்லா, ஜெ. எஸ். சர்தார், ஷமியுள்ளா, ஷாஜகான், முபாரக், ஹாஜி ஷரீப்,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×