விக்கிரவாண்டி அருகே கார் மோதி 2 பேர் பலி

உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று திரும்பிய 2 மளிகை கடைக்காரர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரவாண்டி அருகே கார் மோதி 2 பேர் பலி
Published on

விக்கிரவாண்டி:

புதுவை மாநிலம் ஏம்பலம் பகுதி நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 50). மளிகை கடை நடத்தி வருகிறார்.

இவர் கடலூர் மாவட்டம் செல்லஞ்சேரியை சேர்ந்த மதியழகன் (60) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள ராதாபுரத்திற்கு நேற்று மாலை சென்றார். அங்கு நடந்த உறவினர் விழாவில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு வீடு திரும்பினர்.

திருக்கனூர் அருகேயுள்ள எம்.குச்சிபாளையம் அருகே வந்து கொண்டிருந்த போது, எதிரில் வந்த காரின் முன்பக்க டயர் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்து வந்த மதியழகன் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயங்களுடன் தண்டபாணி சாலையில் துடித்துக் கொண்டிருந்தார். அவ்வழியே சென்றவர்கள், தண்டபாணியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை தண்டபாணி உயிரிழந்தார். இது தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று திரும்பிய 2 மளிகை கடைக்காரர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் செல்லஞ்சேரி, நத்தமேடு கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com