என் மலர்
நீங்கள் தேடியது "4 INJURED"
- என்.எல்.சி., நிறுவனத்தின் 2-வது அனல் மின் நிலையத்தில் புதிய அனல்மின் நிலையம் உள்ளது.
- தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது.
கடலூர்:
என்.எல்.சி., நிறுவனத்தின் 2-வது அனல் மின் நிலையத்தில் புதிய அனல்மின் நிலையம் உள்ளது. இது 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும். இங்குள்ள நிலக்கரி கொள்கலன் பிரிவில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக தீக்காயமடைந்தவர்கள் நெய்வேலி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது. தகவலறிந்து வந்த என்.எல்.சி., நிறுவன உயரதிகாரிகள் திடீரென தீப்பிடித்ததற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாகன விபத்தில் குழந்தைகள் உட்பட 4 பேர் காயம் ஏற்பட்டது.
- லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்
அரியலூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரிப்பூம்பட்டினம் தாலுகா கல்லுகொடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (வயது 37) இவரது மனைவி அம்சவேணி (35), குழந்தைகள் யாழினி (8), செழியன் (7) ஆகியோர் காரில் கிருஷ்ணகிரியில் இருந்து கும்பகோணம் அருகே உள்ள சூரியநாராயணன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு மீண்டும் கிருஷ்ணகிரி செல்ல அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்- விருத்தாச்சலம் ரோட்டில் கூவத்தூர் அருகே மடத்தெரு பகுதியில்சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ரமேஷ் ஓட்டி வந்த காரும், எதிரே சாம்பல் லோடு ஏற்றி வந்த டாரஸ் லாரியும் எதிர்பாராத வித–மாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த ரமேஷ், அவரது மனைவி அம்சவேணி, குழந்தைகள் யாழினி, செழியன் உள்ளிட்ட அனைவரும் பலத்த காயமடைந்து காரில் சிக்கியிருந்தனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்கள் அனைவரையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்துக்கான காரணம் குறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இது குறித்து லாரி டிரைவர் சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுக்கா பகடப்பாடி கோபியை (39) போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.