என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று திரும்பிய 2 மளிகை கடைக்காரர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விக்கிரவாண்டி:

    புதுவை மாநிலம் ஏம்பலம் பகுதி நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 50). மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இவர் கடலூர் மாவட்டம் செல்லஞ்சேரியை சேர்ந்த மதியழகன் (60) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள ராதாபுரத்திற்கு நேற்று மாலை சென்றார். அங்கு நடந்த உறவினர் விழாவில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு வீடு திரும்பினர்.

    திருக்கனூர் அருகேயுள்ள எம்.குச்சிபாளையம் அருகே வந்து கொண்டிருந்த போது, எதிரில் வந்த காரின் முன்பக்க டயர் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்து வந்த மதியழகன் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயங்களுடன் தண்டபாணி சாலையில் துடித்துக் கொண்டிருந்தார். அவ்வழியே சென்றவர்கள், தண்டபாணியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை தண்டபாணி உயிரிழந்தார். இது தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று திரும்பிய 2 மளிகை கடைக்காரர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் செல்லஞ்சேரி, நத்தமேடு கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • குற்றசம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்காணிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
    • ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சசாங்சாய் பொறுப்பேற்ற பிறகு குற்றசம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்காணிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.அதன்படி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி, காட்டுப்பகுதிகளில் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்க உத்தரவி ட்டார். இதையடுத்து திண்டிவனம் அருகேயுள்ள ஆச்சிப்பாக்கம் காட்டுப் பகுதியில் குற்றவாளிகள் நடமாட்டம் குறித்து ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி இன்று நடைபெற்றது.

    திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மேற்பா ர்வையில் கண்காணிப்பு பணி நடைபெற்றது. அதே சமயத்தில் காட்டுப்பகுதிக்குள் ஓலக்கூர் போலீசார் அனுப்பிவைக்கப்பட்டனர். அப்போது காட்டுப் பகுதியில் கூட்டம் கூட்ட மாக அமர்ந்து மது அருந்திய வர்கள், பணம் வைத்து சூதாடியவர்கள், டிரோன் கேமராவை கண்டவுடன் அலறியடித்து ஓடினர்.இவர்களை மடக்கி பிடித்த ஓலக்கூர் போலீசார், பொது இடங்களில் அமர்ந்து மது அருந்தக்கூடா தெனவும், சூதாட்டம் விளையாடக்கூடாது என்றும் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினர். மேலும், டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • தமிழக அளவிலான மாநில கைப்பந்து போட்டி
    • ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி முதல் 15 -ந் தேதி வரை சேலத்தில் நடைபெறஉள்ளது.

    விழுப்புரம்:

    தமிழக அளவிலான மாநில கைப்பந்து போட்டி வரும் ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி முதல் 15 -ந் தேதி வரை சேலத்தில் நடைபெறஉள்ளது. மாநில அளவிலான போட்டியில்பங்கேற்க விழுப்புரம் மாவட்ட வாலிபால் வீரர்கள் 18 வயதிற்குற்பட்டவர்களை தேர்வுசெய்யும் பணி விக்கிரவாண்டி சூர்யா கல்லுாரியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் நடந்தது. போட்டிக்கு மாவட்ட தலைவர் கவுதம சிகாமணி தலைமை தாங்கி வீரர்கள் தேர்வு போட்டியை தொடங்கி வைத்தார்.

    மாநில வாலிபால் கழக இணை செயலாளர் மணி முன்னிலையில் நடந்த போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். மிகச்சிறந்த முறையில் வாலிபால் விளை யாடும் 12 வீரர்கள் தேர்வு செய்ய போட்டி நடந்தது.நடுவர்கள் காளிதாஸ், ஜோதிப்பிரியா, மணிகண்டன், சுபாஷ், சேதுபதி, பிரேம், பாலாஜி, அரவிந்த் ஆகியோர் வீரர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    • வழுதாவூர் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு
    • 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்ட மங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் வழுதாவூர் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (31 -ந் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

    இதனால் பெரியபாபுசமுத்திரம், வினாயகம்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். மேற்கண்டவாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு அறிவித்துள்ளார்.

    • மரக்காணம் அருகே ஆட்சி காடு தண்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி ராசாத்தி.
    • ஷேர் ஆட்டோ மீது மோதியது.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே ஆட்சி காடு தண்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி ராசாத்தி (வயது 45).இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த சில பெண்களும் நேற்று வழக்கம்போல் மண்ட வாய் புதுகுப்பம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இறால் குஞ்சு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு கூலி வேலைக்கு சென்றனர். இவர்கள் வேலையை முடித்துவிட்டு ஷேர் ஆட்டோவில் மீண்டும் வீடு திரும்பினர்.

    இவர்கள் வந்த ஷேர் ஆட்டோவை பொன்னுசாமி ஓட்டி வந்தார். இந்த ஷேர் ஆட்டோ மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் மண்ட வாய் என்ற இடத்தில் வந்த போது சென்னையில் இருந்து புதுவைக்கு சென்ற கார், ஷேர் ஆட்டோ மீது மோதியது. இதில் ராசாத்தி, நாகம்மாள் ,கலைச்செல்வி ,வசந்தி, பிரபாவதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராசாத்தி நேற்றிரவு இறந்துவிட்டார். மற்ற 4பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.இச்சம்பவம் குறித்து அவர்களது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹசரத் சையத் யூசூப் ஷா அவுலியாதர்காவில் வருகிற 1-ந் தேதி சந்தன கூடு உற்சவம்
    • பிறை கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் பிறை கொடி ஊர்வலமும் நடைபெற்றது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மந்தவெளி பகுதியில் உள்ள ஹசரத் சையத் யூசூப் ஷா அவுலியாதர்காவில் வருகிற 1-ந் தேதி சந்தன கூடு உற்சவம் நடைபெற உள்ளது.இதை முன்னிட்டு செஞ்சி பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள ஹசாத் சையத் இஸ்மாயில் ஷா அவுலியாதர்காவில் பிறை கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் பிறை கொடி ஊர்வலமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு தர்காவில் மாலை அணிவித்து பாத்தியா நடத்தினர். தொடர்ந்து பிறைகொடி ஊர்வலத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், வல்லம் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை,நகர செயலாளர் கார்த்திக், அமைப்பு சாரா தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் தமிழரசன் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்,திமுக நிர்வாகிகள்.சந்தனக்கூடுவிழா கமிட்டி நிர்வாகிகள் ஜான் பாஷா, அசாதுல்லா, ஜெ. எஸ். சர்தார், ஷமியுள்ளா, ஷாஜகான், முபாரக், ஹாஜி ஷரீப்,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கவுரி ஆனத்தூருக்கு வருவதாக கூறியதால், அவரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார்.
    • மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.

    விழுப்புரம்: 

    திருவெண்ணைநல்லூர் அருகே ஆனத்தூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. கோவிலுக்கு சென்று வழிபட காரப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 47) என்பவர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கவுரி (45) என்பவர் ஆனத்தூருக்கு வருவதாக கூறியதால், அவரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார்.

    அரசூர் - பண்ருட்டி சாலையில் ஆனத்தூர் ஏரிக்கரை அருகே சென்ற போது, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் கவுரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தங்கதுரை லேசான காயங்களுடன் சாலையில் கிடந்தனர். அவ்வழியே சென்றவர்கள் இவர்களை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி கவுரி இறந்துபோனார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று பா.ம.க. சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
    • போலீசார் சாலை மறியல் போராட்டம் நடத்தியவர்களை அப்புறப்படுத்தினர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் விலை நிலங்களில் நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்தின் சார்பில் கால்வாய் அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டனர் இதனால் நெய்வேலி என்.எல்.சி.நிர்வாகத்தினை கண்டித்து நேற்று பா.ம.க. சார்பில் முற்றுகை போ ராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மரக்காணம் நகர பா.ம.க .சார்பில் விவசாயிகளுக்காக போராட்டம் நடத்திய அன்புமணியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி மரக்காணம்கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று மாலை சாலை மறியல் போராட்டம் நடத்தினர் .இதனைப் பார்த்த மரக்காணம் போலீசார் சாலை மறியல் போராட்டம் நடத்தியவர்களை அப்புறப்படுத்தினர். இந்நிலையில் மரக்காணத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நகர செயலாளர் ரமேஷ் ,முன்னாள் நகர செயலாளர் திருநாவுக்கரசு ,கர்ணன், மணிகண்டன், விநாயகமூர்த்தி உள்பட 25 பேர்கள் மீது மரக்காணம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • நேற்று இரவு புதுவையில் இருந்து ஜெகநாதபுரத்திற்கு இ.சி.ஆர். சாலை வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
    • புதுவை நோக்கி எதிரில் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம ்மரக்காணம் அருகே ஜெகநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஹீரா சந்த் (வயது 20). இவரும் இவரது அக்கா வீட்டுக்காரர் சதீஷ்குமார் (27) ஆகிய இருவரும் நேற்று இரவு புதுவையில் இருந்து ஜெகநாதபுரத்திற்கு இ.சி.ஆர். சாலை வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை சதீஷ்குமார் ஒட்டி வந்தார்.

    மரக்காணம் அருகே செட்டி நகர் சாலையில் வந்தபோது புதுவை நோக்கி எதிரில் வந்த கார் மோட்டார சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஹீரா சந்த் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் சாலையில் கிடந்த சதீஷ்குமாரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பான புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு மரக்காணம் போலீசார் விரைந்து வந்தனர். விபத்தில் பலியான ஹீரா சந்த்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பூஜைகளை முடித்துக் கொண்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.
    • அம்மனின் கழுத்தில் இருந்த தாலிப் பொட்டையும் காணவில்லை.

    விழுப்புரம்:

    திருவெண்ணை நல்லூர் அருகே மேல்தனி யாளம்பட்டு கிராமத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பூசாரி ராஜீவ்காந்தி (வயது 36) வழக்கம்போல நேற்றிரவு பூஜைகளை முடித்துக் கொண்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவிலின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டார். உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தார். மேலும், அம்மனின் கழுத்தில் இருந்த தாலிப் பொட்டையும் காணவில்லை. இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசாரிடம் ராஜீவ்காந்தி புகாரளி த்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார், மேல்தனியாளம்பட்டிற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாவட்டங்களில் 2 கட்டங்களாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடத்தப்ப டும் என அறிவித்தார்.
    • 2,77,236 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் கலைஞர் மகளிர் உரிமைத்தி ட்டத்தின்கீழ், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் எனவும், தகுதியான பயனாளிகளை தேர்வு செய்திடும் வகையில், மாவட்டங்களில் 2 கட்டங்களாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடத்தப்ப டும் என அறிவித்தார். அதனடி ப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ், தகுதியான பயனாளிகளை தேர்வு செய்திட விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24.07.2023 அன்று தொடங்கி 4.08.2023 வரை நடைபெறவுள்ளது. இதில் 3,41,209 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணிகள் நடைபெ ற்று வருகிறது.

    முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம்களில், முதல் 3 நாட்களில் 1,26,769 விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக பெறப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் விண்ணப்ப ங்களை பதிவு செய்வதற்கு 1092 தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், ஒவ்வொரு முகாமிலும் பயனாளிகளின் விண்ணப்பங்களைச் சரிபார்க்கவும், பூர்த்தி செய்யப்படாத விண்ண ப்பங்களை பூர்த்தி செய்வத ற்கும் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டு ள்ளது.

    இரண்டாம் கட்ட முகாம் 5.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெறவுள்ளது. இதில் 690 விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும். இம்முகாமில், 2,77,236 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும்.  அனைத்து முகா ம்களிலும் பொதுமக்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளான இருக்கைகள் வசதி, குடிநீர், கழிவறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோ ருக்கான சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார்.

    • ஒரு அறையில் இருந்த பொருட்கள் மட்டும் தீப்பிடித்து எரிந்தது.
    • முகுந்தன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தலக்காணிக்குப்பம் கிராமம் உள்ளது. இந்த ஊராட்சிக்கு மகாலட்சுமி தேவேந்திரன் தலைவராக உள்ளார். இவர் அக்கிராமத்திலேயே உள்ள, அவருக்கு சொந்தமான தளம் ஒட்டிய வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டில் உள்ள ஒரு அறையில் இருந்த பொருட்கள் மட்டும் தீப்பிடித்து எரிந்தது. இத்தகவல் அறிந்த வானூர் தீயணைப்பு அலுவலர் முகுந்தன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி தேவேந்திரன் வீட்டில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், லேப்டாப், எல்.இ.டி. டிவி, இன்வெர்ட்டர் மற்றும் மின் சாதன பொருட்கள் எரிந்து நாசமாயின. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு அலவலர் தெரிவித்தார். இது தொடர்பாக பிரம்மதேசம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×